LIK Movie: அனிருத்தின் காதலர் தின ட்ரீட்.. 11 வருடங்களுக்கு பின் வந்த ‘எனக்கென யாரும் இல்லையே’ பாடல்!
Enakenna Yaarum Illaye Video Song: தமிழில் இளம் நடிகராக ரசிகர்களை கவர்ந்துவருபவர் பிரதீப் ரங்கநாதன். இவரின் நடிப்பில் தமிழில் வெளியீட்டிற்கு தயாராகியுள்ள படம்தான் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி. இந்நிலையில் இன்று காதலர் தினச் சிறப்பாக இப்படத்திலிருந்து எனக்கென யாரும் இல்லையே வீடியோ பாடல் வெளியாகியுள்ளது. இது தற்போது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்திவருகிற்து.

எனக்கென்ன யாரும் இல்லையே வீடியோ பாடல்
இயக்குநர் விக்னேஷ் சிவன் (Vignesh Shivan) இயக்கத்தில் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கும் மேலாக தயாராகிவரும் படம்தான் “லவ் இன்சூரன்ஸ் கம்பெனி” (Love Insurance Kompany). இந்த திரைப்படமானது பிரதீப் ரங்கநாதனின் (Pradeep Ranganathan) 2வது திரைப்படமாக அறிவிக்கப்பட்டது. கடந்த 2023ம் ஆண்டு இறுதியிலே அறிவிக்கப்பட்ட நிலையில், கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கும் மேலாக இப்படமானது தயாராகிவருகிறது. இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக இளம் நடிகை க்ரித்தி ஷெட்டி (Krithi Shetty) நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா (SJ.Suryah), ஆனந்த ராஜ், கௌரி ஜி கிஷன், சீமான் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்க, நயன்தாராவின் (Nayanthara) ரௌடி பிக்ச்சர்ஸ் மற்றும் செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் என இரு நிறுவனங்கள் இணைந்து தயாரித்துவருகிறது.
மேலும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் (Anirudh Ravichander) இசையமைத்துள்ள நிலையில், இதுவரை இப்படத்திலிருந்து “தீமா தீமா” மற்றும் “பட்டுமா” போன்ற 2 பாடல்கள் வெளியாகியிருக்கிறது. அந்த விதத்தில் இன்று 2026 பிப்ரவரி 14ம் தேதியில் காதலர் தினச் சிறப்பாக இப்படத்திலிருந்து “எனக்கென யாரும் இல்லையே” ( Enakenna Yaarum Illaye) என்ற வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க: கோச்சடையான் வெளியான பிறகு பல விமர்சனங்களை எதிர்கொண்டேன் – சௌந்தர்யா ரஜினிகாந்த்
லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படத்தின் 3வது பாடல் குறித்த பதிவு :
இந்த எனக்கென யாருமில்லையே பாடலை கடந்த 2015ம் ஆண்டில் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர், தனி ஆல்பம் பாடலாக வெளியிட்டிருந்தார். 2026ம் ஆண்டுடன் இந்த படலானது வெளியாகி கிட்டத்தட்ட 11 வருடங்களை கடந்துள்ளது. அந்த வகையில் இப்பாடல் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவில் பயன்படுத்தப்பட்டு சிறப்பான வரவேற்பை பெற்றது.
இதையும் படிங்க: மை லார்ட் படக்குழுவை நேரில் சந்தித்த சூர்யா – வைரலாகும் வீடியோ!
இந்நிலையில் தற்போது அதைத் தொடர்ந்து, இப்பாடல் படத்தின் மூன்றாவது படலாகவே இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்று காதலர் தினச் சிறப்பாக வீடியோ பாடலாக படக்குழு வெளியிட்டுள்ளது. இது தற்போது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுவருகிறது.
லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ரிலீஸ் எப்போது :
இந்த் படத்தின் ரிலீஸ் தேதியானது கிட்டத்தட்ட 3 முறைக்கும் மேல் அறிவிக்கப்பட்டு பின் ஓத்த்திவைக்கப்பட்டிருந்தது. இப்படத்தில் சில காட்சிகளின் எடிட்டிங் பணிகள் நடைபெற்றுவருவதால் இப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போவதாக கூறப்படுகிறது. இப்படத்தில் எதிர்கால காதல் கதையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள நிலையில், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துவருகிறது. நிச்சயமாக 2026ம் ஆண்டிற்குள் இப்படம் வெளியாகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது