Prabhas : ஹாரர் படத்தில் பிரபாஸ்.. வெளியானது ‘தி ராஜா சாப்’ படத்தின் டீசர்!

The RajaSaab Movie Teaser : தெலுங்கு சினிமாவில் நம்பர் 1 நாயகனாக இருந்து வருபவர் பிரபாஸ். இவரின் நடிப்பில் மிகப் பிரம்மாண்ட கதைக்களத்துடன் பான் இந்திய படமாக உருவாகியிருப்பது தி ராஜா சாப். ஹாரர் மற்றும் நகைச்சுவை படமாக உருவாகியிருக்கும் இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

Prabhas : ஹாரர் படத்தில் பிரபாஸ்.. வெளியானது தி ராஜா சாப் படத்தின் டீசர்!

தி ராஜா சாப் திரைப்படம்

Published: 

16 Jun 2025 15:32 PM

 IST

பான் இந்திய நடிகர்களில் ஒருவராகவும், பல ஆயிரம் கோடி வசூல் செய்து சாதனை படத்தை கொடுத்த வெற்றி நடிகராக இருப்பவர் பிரபாஸ் (Prabhas). இவரின் முன்னணி நடிப்பில் தெலுங்கு மொழியில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் திரைப்படம்தான் தி ராஜா சாப் (The Raja Saab). இந்த படத்தை டோலிவுட் இயக்குநர் மாருதி (Maruthi) இயக்கிவருகிறார். இந்த படத்தில் நடிகர் பிரபாஸ் முன்னணி கதாநாயகனாக நடித்துள்ள நிலையில், இந்த படத்தில் மூன்று கதாநாயகிகள் நடித்து வருகின்றனர். இதில் நடிகைகள் மாளவிகா மோகனன் (Malavika Mohanan), நிதி அகர்வால் (Nidhi Agarwal) மற்றும் ரித்தி குமார் (Riddhi Kumar)  என மூன்று கதாநாயகிகள் இணைந்து நடித்து வருகின்றனர். தி ராஜா சாப் படமானது முழுக்க நகைச்சுவை மற்றும் ஹாரர் கதைக்களத்துடன் கூடிய திரைப்படமாக உருவாகிவருகிறது.

இந்த படமானது தெலுங்கில் மட்டுமில்லாமல், தமிழ், இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளிலும் வெளியாகவுள்ளதாம். இப்படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தில் இருந்துவரும் நிலையில், தற்போது படக்குழு இப்படத்தின் டீசரை (Teaser) வெளியிட்டுள்ளது. இந்த டீசர் தற்போது இணையத்தில் தீயாகி பரவி வருகிறது.

தி ராஜா சாப் படக்குழு வெளியிட்ட டீசர் பதிவு :

தி ராஜா சாப் படத்தின் கதைக்களம் :

தெலுங்கு ஸ்டார் பிரபாஸின் முன்னணி நடிப்பில் உருவாகிவரும் இந்த தி ராஜா சாப் படமானது முழுக்க காமெடி மற்றும் ஹாரர் படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தில் நடிகர் பிரபாஸ் ரெட்டை வேடத்தில் நடித்த வருகிறாராம். இந்த படத்தில் பல திருப்பங்களுடன் கதைக்களம் உருவாகியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இப்படத்தை மேலும் சுவாரஸ்யமாக்கும் விதத்தில் இந்த படத்தில் மூன்று நடிகைகள் நடித்து வருகின்றனர். மேலும் முக்கிய கதாநாயகியாக நிதி அகர்வால் நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தி ராஜா சாப் படமானது நிச்சயமாக பான் இந்திய வெற்றிப் படமாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தி ராஜா சாப் ரிலீஸ் எப்போது :

இயக்குநர் மாருதி இயக்கத்தில் உருவாகிவரும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் எஸ் இசையமைத்து வருகிறார். மேலும் பான் இந்தியப் படமாக உருவாகிவரும் இப்படமானது சுமார் ரூ 400 கோடிகளுக்கு மேல் பட்ஜெட்டில் உருவாகிவருவதாகவும் கூறப்படுகிறது.

பிரம்மாண்ட படமாக அமையும் இந்த தி ராஜா சாப் படத்தை படக்குழு வரும் 2025, டிசம்பர் 5ம் தேதியில் வெளியிடத் திட்டமிட்டுள்ளதாம். இதைத் தொடர்ந்து இப்படத்தின் ஷூட்டிங்கும் இறுதிக்கட்டத்தில் இருக்கும் நிலையில், விரைவில் இப்படத்தின் பாடல்கள் போன்ற அப்டேட்டுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories
Suriya47: ஷூட்டிங்கிற்கு முன்னே சூர்யா47 படத்தின் டிஜிட்டல் உரிமையை வாங்கிய பிரபல நிறுவனம்?
அதிக எதிர்பார்ப்பு.. ஆனால் தியேட்டரில் ஓடல.. 2025ல் எதிர்பார்ப்பில் வெளியாகி தோல்வியுற்ற படங்கள் இதுதான்!
karthi: வா வாத்தியார் பட கதை என்னை ரொம்பவே பயமுறுத்திடுச்சு.. அதை நான் எதிர்பார்க்கவே இல்லை- கார்த்தி ஓபன் டாக்!
Rathna Kumar: 29 படத்தின் கதை கூட லோகேஷ் கனகராஜிற்கு தெரியுமான்னு தெரியல.. கலகலப்பாக பேசிய இயக்குநர் ரத்ன குமார்!
Padayappa: போட அந்த ஆண்டவனே நம்ம பக்கம் இருக்கான்.. வெளியானது ‘படையப்பா’ பட ரீ-ரிலீஸ் ட்ரெய்லர்!
தென்னிந்திய சினிமாவில் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பிய டாப் 5 படங்கள் – லிஸ்ட் இதோ
குளிர்கால ஆடைகளை எப்படி ஃபேஷன் ஸ்டேட்மெண்டாக மாற்றுவது.. நடிகர்களின் தேர்வு என்ன?
சீனப் பெண்ணுக்கும் இந்திய இளைஞனுக்கும் நடந்த திருமணம்.. இணையத்தில் வைரலாகும் காதல் கதை..
25கிலோ மீட்டர் தான் தூரம்.. சகோதரனை ஹெலிகாப்டரில் வந்து அழைத்துச் செல்லும் சகோதரி!!
கோஹலி மற்றும் ரோகித் இல்லாமல், 2027 உலகக் கோப்பையை வெல்ல முடியாது - முகமது கைஃப்..