ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர்… உலகின் முன்னனி சைபர் பாதுகாப்பு நிறுவனத்தின் தலைவர் – யார் இந்த ஜெய் சௌத்ரி?
Indian Tech Billionaire Rise : இந்தியாவின் ஏழை விவசாயிக் குடும்பத்தில் பிறந்த ஒருவர், அமெரிக்காவில் சைபர் பாதுகாப்பு நிறுனத்தை துவங்கி அதனை முன்னணி நிறுவனமாக உயர்த்தியிருக்கிறார். அவர் தான் ஜெய் சௌத்ரி. அவரது வெற்றிக் கதையை இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

மிகவும் ஏழ்மையான விவசாயக் குடும்பத்தில் பிறந்து, பல தோல்விகளுக்குப் பிறகு, அமெரிக்காவில் (America) மிகவும் செல்வந்தரான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜெய் சௌத்ரியின் வாழ்க்கை பல இளைஞர்களுக்கு சிறந்த முன்னுதாரணம். ஜெய் சௌத்ரி அமெரிக்காவின் மிகவும் மதிப்பு மிக்க இந்தியர் என்பது குறிப்படத்தக்கது. Zscaler எனும் உலகளாவிய சைபர் பாதுகாப்பு நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான இவர், 17.9 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 1.53 லட்சம் கோடி) சொத்துகளைக் கொண்டவர். இது அவரது துறையில் மட்டுமல்ல, உலகின் முன்னணி இந்திய வம்சாவளியினர் சுந்தர் பிச்சை (Sundar Pichai), சத்யா நாதெல்லா போன்ற பிரபலங்களைவிட கோடீஸ்வரர் என்பது குறிப்பிடத்தக்கது.
யார் இந்த ஜெய் சௌத்ரி?
ஜெய் சௌத்ரி, ஹிமாச்சல பிரதேசம் மாநிலத்தில் உள்ள பனோஹ் என்ற சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர். விவசாயக் குடும்பத்தில் பிறந்த இவர், சிறுமை மற்றும் குறைவுகளுடனான வாழ்க்கையை கடந்து வந்தவர். பள்ளிக்கு செல்வதற்காக நாள்தோறும் 4 கிலோமீட்டர் நடந்து செல்ல வேண்டிய சூழ்நிலையில் வாழ்ந்தார். கூடவே, மின்சாரம் இல்லாத நிலையில் மங்கலான ஒளியில் படித்து, தனது கல்வியை தொடர்ந்தார். இந்த முயற்சி, அவர் வாழ்க்கையின் திருப்புமுனையாக அமைந்தது.
இதையும் படிங்க : ஒரு ஸ்மார்ட் ஐடியா.. ரூ.50,000 முதலீடு…குடும்ப தொழிலை ரூ.340 கோடி நிறுவனமாக மாற்றிய இளைஞர்!




Zscaler நிறுவனம் உருவானது எப்படி?
அமெரிக்காவின் சின்சிநாட்டி பல்கலைக்கழகம் (University of Cincinnati) எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் படித்த அவர், ஹார்வர்டு பிசினஸ் ஸ்கூல் கல்லூரியில் பிசினஸ் மேனேஜ்மென்ட் படித்த அவர், கடந்த 2008 ஆம் ஆண்டு, Zscaler நிறுவனம் தொடங்கினார. பின்னர், 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், இது NASDAQ பங்குசந்தையில் முதல் முறையாகப் பங்குகளை வெளியிட்டது. தற்போது ஜெய் சௌத்ரி மற்றும் அவரது குடும்பம், நிறுவனத்தின் 40% பங்குகளை வைத்துள்ளனர். உலகம் முழுவதும் கிளைகள் மற்றும் வாடிக்கையாளர்களுடன், Zscaler இன்று மிகப்பெரிய இணைய பாதுகாப்பு நிறுவனமாக விளங்குகிறது.
இதையும் படிக்க : சைக்கிளில் ஸ்நாக்ஸ் விற்றவர்.. இன்று ரூ.5,000 கோடி நிறுவனத்தின் தலைவர் – எப்படி நடந்தது இந்த மேஜிக்?
1996ம் ஆண்டு, தனது மனைவி ஜோதியுடன் இணைந்து வேலையை ராஜினாமா செய்த அவர், தங்கள் வாழ்நாளில் சேமித்த பணத்தையெல்லாம் முதலீடு செய்து, Zscaler எனும் இணைய பாதுகாப்பு நிறுவனத்தை தொடங்கினார். ஒரு சில ஆண்டுகளிலேயே அவரது நிறுவனம் அபார வளர்ச்சி கண்டது. அதன் பிறகு, பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களை தொடங்கி வெற்றி கண்டுள்ளார். இந்தியாவில் எளிய கிராமத்து விவசாயின் மகனாக பிறந்த அவர் இன்று உலகின் தலைசிறந்த இணைய பாதுகாப்பு நிறுவனத்தின் தலைவராக இருந்து வருகிறார். அவரது வாழ்க்கை சாதிக்க துடிக்கும ஒவ்வொரு இளைஞர்களுக்கும் முன்னுதாரணம்.