Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
ஜம்மு காஷ்மீரில்  பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு.. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

ஜம்மு காஷ்மீரில் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு.. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Umabarkavi K
Umabarkavi K | Published: 23 Jul 2025 21:44 PM

Jammu Kashmir Flood : ஜம்மு காஷ்மீரில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், பூஞ்ச் உள்ளிட்ட சாலைகள் மூடப்பட்டுள்ளன. மேலும், மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. மீட்பு பணிகளும் நடந்து வருகிறது.

ஜம்மு காஷ்மீர், ஜூலை 23 : ஜம்மு காஷ்மீரில் கடந்த மூன்று நாட்கள் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், தோடா, உதம்பூர், கிஷ்த்வார், பூஞ்ச், ரஜோரி, ரியாசி மற்றும் ரம்பன் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. சாலைகளில் மழைநீர் சூழ்ந்தும், பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளன. பல்வேறு சாலைகள் மூடப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதியில் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.