OTT Movies: விறுவிறுப்பான த்ரில்லர்.. ஓடிடியில் பார்க்க அருமையான படம்!

2002ல் வெளிவந்த இன்ஃபெர்னல் அஃபேர்ஸ் திரைப்படம், ஹாங்காங்கில் போலீஸ் மற்றும் முப்படைகளுக்குள் ஊடுருவிய உளவாளிகளின் கதையை பற்றி சொல்கிறது. டோனி லிங் மற்றும் ஆண்டி லாவ் ஆகியோர் தங்கள் இரட்டை வாழ்க்கையை வாழ்ந்து, தங்களது உண்மையான அடையாளங்களை மறைக்க போராடும் காட்சிகள் விறுவிறுப்பை உண்டாக்கும்.

OTT Movies: விறுவிறுப்பான த்ரில்லர்.. ஓடிடியில் பார்க்க அருமையான படம்!

Internal Affairs படம்

Published: 

03 Jun 2025 09:31 AM

ஓடிடி தளங்களின் வளர்ச்சி என்பது மிகப்பெரியதாக மாறிவிட்டது. பல மொழி படங்களையும் நாம் இங்கு ஒரே இடத்தில் காண முடியும். க்ரைம் திரில்லர், ஹாரர், காதல், ஆக்‌ஷன் என பல வித பிரிவுகளும் சினிமாவில் உள்ளது. அந்த வகையில் 2002 ஆம் ஆண்டு வெளியான Infernal Affairs படம் பற்றி விவரங்களைக் காணலாம். ஆண்ட்ரூ லாவ் மற்றும் ஆலன் மாக் ஆகியோர் இயக்கிய இந்த படத்தில் டோனி லிங், சம்மி செங்,அந்தோணி வோங், ஆண்டி லாவ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்த படத்தின் கதையை மேக் மற்றும் பெலிக்ஸ் சோங் ஆகியோர் எழுதியிருந்தனர். சான் குவாங்-விங் இசையமைத்த இந்த படம் சீன மொழியில் வெளியாகி மிகப்பெரிய சாதனையைப் படைத்தது. இந்த படம் சிறந்த படம், சிறந்த இயக்குநர் பிரிவில் ஆஸ்கர் விருதையும் வென்றிருந்தது.

படத்தின் கதை

ஹாங்காகில் உள்ள் முப்படைகளின் தலைவரான எரிக் சாங் தனது குழுவில் உள்ள இளம் வீரரான ஆண்டி லாவ்வை ரகசிய உளவாளியாக காவல் படைக்கு அனுப்புகிறார். அதேசமயம் அங்கிருந்து ரகசிய உளவாளியாக செயல்படும் டோனி லிங் வெளியேறி அந்தோணி வோங் உத்தரவுப்படி முப்படைகள் குழுவுக்குள் செல்கிறார். 10 ஆண்டுகள் ஓடிப்போகிறது. டோனி லிங் சந்தேகத்திற்குரிய செயல்களால் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகிறார். அதேசமயம் ஆண்டி லாவ் உயர் பதவியைப் பெற்று ஜாலியாக இருக்கிறார். இப்படியான நிலையில் எரிக் சாங்கிற்கும், உள்ளூர் போதை கும்பலுக்கும் உள்ள தொடர்பை டோனி லிங் தன்னுடைய அதிகாரியான வோங்கிடம் தெரிவிக்கிறான். இதற்கிடையில் டோனி லிங், எரிக் சாங்கை விஷயம் வெளியே தெரிந்ததாக எச்சரிக்கிறார்.

இதனைத் தொடர்ந்து எரிக் சாங் மற்றும் அந்தோணி வோங் இருவரும் தங்களது குழுவில் இருக்கும் ரகசிய உளவாளி யார் என கண்டுபிடிக்க களமிறங்கிறார்கள். அதேசமயம் டோனி லிங், ஆண்டி லாவ் இருவரும் இரட்டை வாழ்க்கையால் தவிக்கிறார்கள். கடைசியில் போதைப்பொருள் கும்பலுடன் எரிக் சாங் கொண்டிருந்த டீலிங் தொடர்பான ஆதாரம் கிடைத்ததா, இருவரும் தங்கள் குழுவில் உள்ள உளவாளிகளை கண்டறிந்தனரா என்பதே இந்த படத்தின் கதையாகும்.

எந்த ஓடிடி தளத்தில் பார்க்கலாம்?


இந்த படமானது அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ், டிஸ்னி ஹாட் ஸ்டார் ஆகிய ஓடிடி தளங்களில் காணக்கிடைக்கிறது. இந்த படத்தின் வெற்றியால் இரண்டாவது மற்றும் மூன்றாவது பாகங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. சீன விதிகளின் படி முதலில் எடுக்கப்பட்ட படத்தின் கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு புது கிளைமேக்ஸ் காட்சி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories
இன்ஸ்டாவில் 8.5 மில்லியன் ஃபாலோவர்ஸ்களை வைத்திருக்கும் சிவகார்த்திகேயன் ஃபாலோ செய்யும் ஒரே ஒரு நபர் – யார் தெரியுமா
Madharaasi : சாய் அபயங்கரின் குரலில்.. சிவகார்த்திகேயனின் மதராஸி படத்திலிருந்து ‘சலம்பல’ என்ற பாடல் வெளியானது!
Vijay Deverakonda Speech : ‘உங்கள் அன்பினால் இந்த வெற்றி’ – கிங்டம் பட வெற்றி விழாவில் விஜய் தேவரகொண்டா பேச்சு
Karthi : ‘சர்தார் 2’ படக்குழுவிற்கு ஸ்பெஷல் விருந்து வைத்த கார்த்தி.. வைரலாகும் வீடியோ!
நடிகர் நானியின் நடிப்பில் வெளியான ஜெர்சி படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம்?
தெறி படத்தின் ஷூட்டிங்கில் நைனிகா நடிப்பைப் பார்த்து விஜய் அசந்துட்டார் – நடிகை மீனா!