OTT Movies: காட்சிக்கு காட்சி பரபரப்பு.. ஓடிடியில் பார்க்க பெஸ்ட் படம்!

Best Movies in OTT: 2003 ஆம் ஆண்டு வெளியான ஐடென்டிட்டி திரில்லர் படம், அகதா கிறிஸ்டியின் நாவலை தழுவி எடுக்கப்பட்டது. ஒரு மோட்டலில் சிக்கிய 10 பேர் ஒவ்வொருவராக கொல்லப்படுவதுதான் கதை. ஜான் குசாக், ரே லியோட்டா உள்ளிட்டோர் நடித்த இப்படம், பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

OTT Movies: காட்சிக்கு காட்சி பரபரப்பு.. ஓடிடியில் பார்க்க பெஸ்ட் படம்!

Identity படம்

Published: 

27 Jun 2025 09:30 AM

 IST

சில படங்களை நாம் எப்போது பார்த்தாலும் மரண பீதி ஏற்படும் என்பது உண்மை. அது திகில் படமாக இருந்தாலும், க்ரைம் திரில்லர் படமாக இருந்தாலும் சரி அதன் கதை நம்மை கட்டிப்போட்டு விடும். ஹாலிவுட்டில் ஓராண்டில் இதுபோன்ற படங்கள் ஏராளமாக வந்தாலும் அவற்றில் சில படங்கள் மட்டுமே எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் நம்மால் நினைவில் வைக்க முடியும். இப்படியான நிலையில் 2003ஆம் ஆண்டு வெளியான ஸ்லாஷர் வகை படமான Identity பற்றி நாம் இந்த தொகுப்பில் காணலாம். மைக்கேல் கூனி எழுதிய இப்படத்தின் கதையானது 1939 ஆம் ஆண்டு அகதா கிறிஸ்டி எழுதிய அண்ட் தென் தேர் வேர் நன்” நாவலால் என்ற நாவலை அடிப்படையாக கொண்டது. ஜேம்ஸ் மான்கோல்ட் Identity படத்தை இயக்கிய நிலையில் ஜான் குசாக்,ரே லியோட்டா, அமண்டா பீட், ஆல்ஃபிரட் மோலினா , கிளியாடுவால் மற்றும் ரெபேக்கா டி மோர்னே ஆகியோர் நடித்திருந்தனர்.

படத்தின் கதை


ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் கொடூரமான கொலை நடைபெறுகிறது. அதனை செய்ததாக பிடிபட்ட மால்கம் ரிவர்ஸ் என்ற நபருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதிக்கிறது. வழக்கு ஆதாரங்களில் அவர் பற்றி பத்திரிகைகள் தவறான தகவல்களை வழங்குகிறது. இதனையடுத்து மால்கம் ரிவர்ஸின் வழக்கறிஞர் மற்றும் மனநல மருத்துவர் அவரை நீதிமன்றத்தில் வெளியே எடுக்க கடுமையாக போராடுகின்றனர். இதற்கிடையில் லாரி வாஷிங்டன் நடத்தும் தொலைதூர நெவாடா மோட்டலில் 10 பேர் ஒருவருக்கொருவர் சம்பந்தமில்லாதவர்கள் தனித்தனி அறைகளில் சிக்கிக் கொள்கிறார்கள். அவர்கள் ஒவ்வொன்றாக கொலை செய்யப்படுகிறார்கள். இவற்றில் ஒரு அறையில் இருந்தவர் மட்டுமே தப்பிக்கிறார். அவருக்கும் மால்கம் ரிவர்ஸிற்கும் என்ன சம்பந்தம் என்பது இப்படத்தின் அடிப்படை கதையாகும்.

படம் பற்றிய பிற தகவல்கள்

இந்த படம் முழுக்க முழுக்க கல்வர் சிட்டியில் உள்ள சோனி பிக்சர்ஸ் ஸ்டுடியோவில் தான் படமாக்கப்பட்டது. 2003 ஆம் ஆண்டு ஏப்ரல் 25 ஆம் தேதி இப்படம் வெளியானது. 2,733 திரையரங்குகளில் வெளியிடப்பட்ட இப்படம் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் அசாத்திய சாதனைப் படைத்தது. விமர்சகர்களிடையேயும், ரசிகர்களிடையேயும் இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

காட்சிக்கு காட்சி பார்வையாளர்களை கட்டிப்போட செய்யும் அளவுக்கு விறுவிறுப்பு நிறைந்த திரைக்கதை பலரையும் கவர்ந்தது. 14 ஆண்டுகள் கழித்து ஒரு நேர்காணலில் இப்படத்தில் நடித்த மங்கோல்ட் தன்னுடைய சினிமா கேரியரில் Identity படம் மிகவும் பிடித்தது என கூறினார். இந்த படத்தை நாம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் காணலாம்.

Related Stories
Sirai Movie: மிகவும் உண்மையானதாகவும் அசலாகவும் உணர்ந்தேன்.. சிறை படத்திற்கு விமர்சனம் கொடுத்த இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து!
அஜித் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. விரைவில் ரீ-ரிலீஸாகும் மங்காத்தா.. வைரலாகும் பதிவு!
உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து வெளியான டொவினோ தாமஸின் நரிவேட்டை படம் – எந்த ஓடிடியில் பார்க்கலாம்?
2026ல் எதிர்பார்ப்புகளுடன் வெளியாக காத்திருக்கும் தமிழ் நடிகர்களின் படங்கள்?
2025-ம் ஆண்டில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்த தென்னிந்திய மொழிப் படங்கள்
Radhika Apte: ஷூட்டிங் தளத்தில் நான் மட்டும்தான் பெண்.. என்னிடம் அதை செய்த சொன்னது மிகவும் அசௌகரியமாக இருந்தது- ராதிகா ஆப்தே ஓபன் டாக்!
ஏஐ காதலரை திருமணம் செய்துகொண்ட ஜப்பானிய பெண்
வருடத்திற்கு 6 முதல் 12 லட்சம் சம்பளம் வாங்குகிறீர்களா?
ஆஸ்கர் விருதுக்கான நாமினேஷன் பட்டியலில் தகுதிப்பெற்ற இந்தியத் திரைப்படம்!!
உலக அளவில் 100 சிறந்த இனிப்புகளில் இடம்பெற்ற 2 இந்திய இனிப்புகள் - எது தெரியுமா?