ஆஸ்கர் 2026: விருதுகளை வென்றவர்கள் யார் யார்? லிஸ்ட் இதோ

98th Academy Awards Full Winners List: உலக அளவில் சினிமா துறையில் மிகவும் உயரிய விருதாகக் கருத்தப்படுவது ஆஸ்கர். இந்த ஆஸ்கர் விருது இந்த 2026-ம் ஆண்டிற்கான விழா நேற்று அமெரிக்காவில் நடைப்பெற்றது. இந்த நிலையில் இதில் வெற்றிப் பெற்றவர்களின் பட்டியலை தற்போது பார்க்கலாம்.

ஆஸ்கர் 2026: விருதுகளை வென்றவர்கள் யார் யார்? லிஸ்ட் இதோ

ஆஸ்கர் 2026

Published: 

16 Mar 2026 10:18 AM

 IST

உலக அளவில் திரைத்துறையில் வெளியான சிறந்த படங்கள் மற்றும் அந்தப் படங்களில் பணியாற்றியவர்கள், நடிகர்கள் மற்றும் நடிகைகள் என பலரையும் பெருமைப்படுத்தும் விதமாக உலகில் மிக உயரிய விருதான ஆஸ்கர் விருது வழங்கப்படுகின்றது. இந்த ஆஸ்கர் விருது என்பது சினிமா துறையில் உள்ளவர்கள் அனைவரும் மிகவும் பெருமையாக கருதக்கூடிய ஒன்றாக உள்ளது. நமது பேச்சு வழக்கில் கூட பெரிய ஆஸ்கர் அவார்ட் வாங்கிட்டாங்க என்று கிண்டலாக கூறுவது கூட அது அவ்வளவு பெரிய மதிப்புமிக்க விருது என்பதை குறிப்பிடுவதற்காக கூறுவார்கள். அவ்வளவு சிறப்பு மிக்க விருது அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்சில் நேற்று மார்ச் மாதம் 15-ம் தேதி 2026-ம் ஆண்டு நடைப்பெற்றது. இந்த விருது விழாவில் பலருக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

அந்த வகையில் இந்த விழாவில் விருது வென்றவர்கள் யார் யார் என்பது குறித்தும் அவர்கள் எந்த துறைகளில் எந்தப் படத்திற்காக விருதை வென்றார்கள் என்பது குறித்த லிஸ்ட்டும் தற்போது வெளியாகி உள்ளது. மேலும் இந்த லிஸ்டில் இந்திய சினிமாவில் இருந்து ஏதேனும் உள்ளதா என்பதையும் இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

ஆஸ்கர் 2026-ம் ஆண்டின் விருது வென்றவர்களின் பட்டியல்:

சிறந்த திரைப்படத்திற்கான விருதை ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர் என்ற ஆக்‌ஷன் காமெடித் திரைப்படம் வென்றது. அதனைத் தொடர்ந்து சிறந்த நடிகருக்கான விருதை மைக்கேல் பி. ஜோர்டான் என்ற நடிகர் சின்னர்ஸ் படத்திற்காகவும் சிறந்த நடிகைக்கான விருதை ஜெஸ்ஸி பக்லி என்பவர் ஹாம்நெட் என்ற படத்திற்காகவும் வென்றுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து சிறந்த துணை நடிகருக்கான விருதை ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர் படத்திற்காக நடிகர் ஷான் பென் பெற்ற நிலையில் சிறந்த துணை நடிகைக்கான விருதை நடிகை ஏமி மேடிகன் என்ற நடிகை வெப்பன் படத்திற்காக வென்றார். மேலும் சிறந்த இயக்குநருக்கான விருதை பால் தாமஸ் ஆண்டர்சன் ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர் படத்திற்காகவும், சிறந்த திரைக்கதைக்கான விருதை சின்னர்ஸ் படம் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

Also Read… Karuppu: 2026 தேர்தல் தேதி அறிவிப்பு.. சூர்யாவின் கருப்பு படத்தின் ரிலீஸ் தேதி உறுதி?

ஆஸ்கர் விருது வழங்கும் குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… அவ்வை சண்முகி படத்திற்காக கமல் ஹாசன் அவ்வளவு மெனக்கெட்டார் – ரமேஷ் கண்ணா

Follow Us
100 ஆண்டுகளுக்கு முன் பிரிட்டிஷ் அரசுக்கு வழங்கிய கடனை திருப்பி கேட்கும் இந்திய குடும்பம்
பிறந்த குழந்தையை கையில் வாங்கும்போது உணர்ச்சிவசப்பட்ட தந்தை - வைரலாகும் வீடியோ
காமிகாஸ் டிரோன் படகுகளை பயன்படுத்தி எண்ணெய் கப்பல்களை தாக்கும் ஈரான்
பாகிஸ்தான் வீரரை ஏலத்தில் எடுத்ததால் சரச்சை - சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணியின் எக்ஸ் பக்கம் முடக்கம்