லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் சூப்பர் ஹிட் அடித்த மாஸ்டர் படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம்?
Master Movie OTT: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தப் படம் மாஸ்டர். இந்தப் படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம் என்பது குறித்த தகவலை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மாஸ்டர்
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மூன்றாவதாக திரையரங்குகளில் வெளியான படம் மாஸ்டர். நடிகர் தளபதி விஜய் (Actor Vijay) நாயகனாக நடித்த இந்தப் படம் கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் 13-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடிகர் விஜய் உடன் இணைந்து நடிகர்கள் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், மகேந்திரன், ஆண்ட்ரியா ஜெர்மையா, அர்ஜுன் தாஸ், சாந்தனு பாக்யராஜ், கௌரி ஜி கிருஷ்ணன், நாசர், அழகம் பெருமாள், சிபி புவனா சந்திரன், குளப்புள்ளி லீலா, ரம்யா சுப்ரமணியன், ராஜேஷ், மகாநதி சங்கர், பிரவீன், அருண் அலெக்சாண்டர், ராஜா ராணி பாண்டியன், சாய் தீனா, ரமேஷ் திலக், சேத்தன், மேத்யூ வர்கீஸ் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர்.
இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்து இருந்த இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனத்தின் கீழ் எஸ். சேவியர் பிரிட்டோ தயாரித்து இருந்தார். படம் பாக்ஸ் ஆபிஸில் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.
மாஸ்டர் படத்தின் கதை என்ன?
கல்லூரியில் நிர்வாகத்திற்கு பிடிக்காமலும் மாணவர்களின் ஹீரோவாகவும் இருக்கும் புரஃபசர்தான் ஜேடி (விஜய்). தப்புனு பட்டா தட்டிக்கேட்கும் வாத்தியாராக இருக்கும் அவர் சரினு பட்டா எவ்வளவு தூரம் வேணும்னாலும் இறங்கி மாணவர்களுக்கு உதவுவார். ஆனால் இவருக்கு ஒரு கெட்டப் பழக்கம் இருக்கும். அது என்ன என்றால் சிறு வயதில் இருந்தே யாரும் இல்லாமல் வளர்ந்த இவருக்கு கல்லூரியில் ஒரு புரஃபசரின் பாசம் கிடைக்கிறது. அவர் உடல்நலக் குறைவால் உயிரிழந்துவிடும் நிலையில் ஜேடி தொடர்ந்து குடி பழக்கத்திற்கு அடிமையாகிவிடுகிறார்.
6 மணிக்கு மேல அண்ணன கையிலையே பிடிக்க முடியாது என்பது போல குடிக்கு அடிமையாகி இருப்பார். இந்த நிலையில் கல்லூரியில் இவரால் நடத்தப்பட்ட ஸ்டூடண்ட் எலக்ஷனின் பிரச்னை ஏற்பட நிர்வாகம் அவரை மூன்று மாத கலம் சஸ்பெண்ட் செய்கிறது. அப்போது சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு ஆசிரியராக செல்கிறார்.
மூனும் மாசம் அப்படியே சும்மா இருந்துட்டு போய்டுவோம்னு நினைத்துக்கொண்டு இருக்கும் ஜேடி இடம் இரண்டு சிறுவர்கள் அந்த சீர்திருத்தப் பள்ளியில் நடந்த பிரச்னைகளை கூறி அவர்களை காப்பாற்றுமாறு உதவி கேட்க ஒரு கடிதத்தை ஜேடியின் பாக்கெட்டில் வைக்கிறார்கள். ஆனால் அதனை ஜேடி இறுதி வரை பார்க்கவில்லை.
இந்த சிறுவர்கள் அனைவரையும் தவறான வேலைக்கு பயன்படுத்திவரும் பவானிக்கு (விஜய் சேதுபதி) இந்த செய்தி தெரியவர அந்த சிறுவர்களை கொலை செய்துவிடுகிறார். அந்த சிறுவர்கள் உயிரிழந்ததற்கு தான் தான் காரணம் என்று நினைக்கும் ஜேடி மற்ற சிறுவர்களை பவானியிடம் இருந்து காப்பாற்ற முடிவு செய்கிறார். அதன் பிறகு என்ன நடந்தது என்பதே படத்தின் கதை. இந்தப் படம் தற்போது அமேசான் ப்ரைம் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.
Also Read… Coolie Movie X Review: கோலாகலமாக வெளியான கூலி படம் – மக்களின் விமர்சனம் என்ன?
மாஸ்டர் படம் குறித்து படக்குழு வெளியிட்ட பதிவு:
Thalapathy + Makkal Selvan = 🔥🔥
The most awaited #MasterThirdLook #Master #MasterUpdate@actorvijay @VijaySethuOffl @Dir_Lokesh @anirudhofficial @jagadishbliss @Lalit_sevenscr @imKBRshanthnu @MalavikaM_ @andrea_jeremiah @gopiprasannaa pic.twitter.com/NpMBDBhCPj
— XB Film Creators (@XBFilmCreators) January 26, 2020
Also Read… சினிமாவில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த் – மும்பையில் ரசிகர்கள் செய்த நெகிழ்ச்சி சம்பவம்