நடிகர் நானியின் நடிப்பில் வெளியான ஜெர்சி படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம்?
Actor Nani Jersey Movie: தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் நானி. இவரது நடிப்பில் வெளியான பலப் படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் முன்னதாக நடிகர் நானி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த ஜெர்சி படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம் என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

ஜெர்சி
ரசிகர்களால் நேச்சுரல் ஸ்டார் என்று அன்புடன் அழைக்கப்படும் நடிகர் நானி (Actor Nani) நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ஜெர்சி. இந்தப் படத்தை இயக்குநர் கௌதம் தின்னுரி எழுதி இயக்கி இருந்தார். இவரது இயக்கத்தில் இன்று ஜூலை மாதம் 31-ம் தேதி 2025-ம் ஆண்டு நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவான கிங்டம் படம் திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் முன்னதாக கௌதம் தின்னுரி இயக்கத்தில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த ஜெர்சி படத்தில் நடிகர் நானி உடன் இணைந்து நடிகர்கள் ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரோனித் கம்ரா, ஹரிஷ் கல்யாண், சத்யராஜ், விஸ்வந்த் தூதும்புடி, சனுஷா, ஆனந்தராஜ், சம்பத் ராஜ், ஷிஷிர் சர்மா, பிரவீன், ஜெயபிரகாஷ், ஆடுகளம் நரேன், ராவ் ரமேஷ், வெண்ணிலா கிஷோர், பிரம்மாஜி என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர்.
பிரபல தயாரிப்பு நிறுவனமான சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் சார்பில் தயாரிப்பாளர் நாக வம்சி இந்தப் படத்தை தயாரித்து இருந்தார். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்து இருந்தது குறிப்பிடத்தக்கது. படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது போல படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
நடிகர் நானியின் நடிப்பில் வெளியான ஜெர்சி படத்தின் கதை என்ன?
இந்த நிலையில் கிரிக்கெட் ப்ளேயரான நடிகர் நானி இந்தியாவிற்கு விளையாட முயற்சி செய்து சில சீப் பாலிடிக்ஸ் காரணமாக அவருக்கு இந்திய அணி சார்பில் விளையாட வாய்ப்பு கிடைக்காமல் போகிறது. அதே நேரத்தில் திருமணம் முடிந்தும் வேலை எதற்கும் செல்லாமல் வீட்டிலேயே தனது மனைவி குழந்தைகளுடன் இருக்கிறார். பல முறை ஸ்போர்ஸ் கோட்டாவில் வேலைக்கு முயற்சி செய்தும் கிடைக்காததால் தனது காதல் மனைவியின் கோபத்திற்கு ஆளாகிறார். ஆனால் தனது மகன் தன்னை ஒரு ஹீரோவாக எப்போதும் பார்க்கிறான் ஆனால் தான் எதையும் செய்ய முடியாக கையாளாகாத ஆளாக இருக்கிறோம் என்ற தாழ்வு மனப்பாண்மை நானிக்கு இருந்துகொண்டே இருக்கின்றது.
இந்த நிலையில் நடிகர் நானிக்கு மீண்டும் கிரிக்கெட் விளையாட ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. இந்த வாய்ப்பை தவறவிட்டால் இனி எப்போதும் கிரிகெட் ஆடமுடியாது என்பதை புரிந்துகொண்ட நானி தனது மகனுக்காக எதாவது செய்ய வேண்டும் என்ற என்னத்தில் மீண்டும் விளையாடத் தொடங்குகிறார். ஆனால் அவரது அணியில் இருக்கும் இளைஞர்களுக்கும் நானிக்கும் எதுவும் செட்டாகாமலே இருக்கிறது.
Also Read… ஆடியன்ஸ்கு நிஜமாவே பிடிக்கும்… காந்தா படம் குறித்து துல்கர் சல்மான் வெளியிட்ட பதிவு!
இந்த நிலையில் நடிகர் நானி முழுவதுமாக தனது கவனத்தை விளையாட்டில் செலுத்தி நன்கு விளையாடி வருகிறார். இதனால் அந்த கிரிக்கெட் அணியில் இருக்கும் சிலர் அவருடன் பழகவும் ஆரம்பிக்கின்றனர். தொடர்ந்து விளையாடும் நானிக்கு உடல் நலக் குறைவு ஏற்படுகிறது. அப்படி இருக்கும் சூழலில் அவர் விளையாடவேக் கூடாது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆனால் தனது மகனுக்காக எதாவது செய்ய வேண்டும் என்ற ஆசையில் உடல் நிலை சரியில்லாததையும் மறைந்து நானி விளையாடுகிறார். அப்படி அவர் விளையாட்டில் வளர்ந்துவரும் சூழலில் விளையாடிக்கொண்டிருக்கும் போதே மயங்கி விழுந்து உயிரிழக்கிறார். முழுக்க முழுக்க ஸ்போர்ஸ் ட்ராமாவாக வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப் படம் தற்போது அமேசான் ப்ரைம் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.