ஹாரர் காமெடி படத்தில் நடிக்கும் நடிகர் நிவின் பாலி – வைரலாகும் போஸ்டர்
Actor Nivin Pauly: மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நிவின் பாலி. இவர் அதிக அளவில் மலையாள சினிமாவில் படங்களில் நடித்து இருந்தாலும் இவருக்கு தென்னிந்தியா முழுவதும் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகம். இந்த நிலையில் இவரது புதுப் படம் குறித்த அப்டேட்டை தற்போது பார்க்கலாம்.

நடிகர் நிவின் பாலி
மலையாள சினிமாவில் கடந்த 2010-ம் ஆண்டு முதல் நடிகராக வலம் வருகிறார் நிவின் பாலி (Actor Nivin pauly). இவரது நடிப்பில் 2012-ம் ஆண்டு வெளியான தட்டத்தின் மறையத்து என்ற படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் நடிகர் நிவின் பாலி. அதனைத் தொடர்ந்து இவரது நடிப்பில் வெளியானப் படங்கள் அனைத்தும் நல்ல வரவேற்பைப் பெற்றது தொடர்ந்து மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களின் பட்டியலில் இணைந்தார். தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வரும் நிவின் பாலி தமிழ் மற்றும் மலையாளம் என தற்போது கைவசம் நிறைய படங்களை வைத்துள்ளார். அதில் ஒன்று தான் சர்வம் மாயா. ஹாரர் காமெடி பாணியில் உருவாகும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ள நிலையில் அது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
இந்தப் படத்தை இயக்குநர் அகில் சத்யன் எழுதி இயக்கி உள்ளார். இவர் முன்னதாக மலையாளத்தில் பச்சுவும் அப்புதம் விளக்கம் என்ற சூப்பர் ஹிட் படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 2025-ம் ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வெளியிட திட்டமிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் நிவின் பாலியுடன் இணைந்து நடிகர்கள் பிரீத்தி முகுந்தன் மற்றும் ரியா ஷிபு ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர்.
சர்வம் மாயா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட நிவின் பாலி:
The Ghost next door!
Sarvam Maya ✨
2025 Christmas Release#Sarvammayamovie #SarvamMaya #AkhilSathyan #PrietyMukundhan #AjuVarghese #Althafcsalim #justinprabhakaran #sharanvelayudhan #anilradhakrishnan #sameerasaneesh #PrietyMukundan #AestheticKunjamma #Snakeplant pic.twitter.com/IXgCmMtfZx
— Nivin Pauly (@NivinOfficial) July 1, 2025
மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நிவின் பாலி நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான பிரேமம் படம் இவரை தென்னிந்தியா முழுவதும் பிரபலம் ஆக்கியது என்றுதான் சொல்லவேண்டு. இந்தப் படம் மலையாளம் மட்டும் இன்றி தென்னிந்தியா முழுவதும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.
தமிழில் தொடர்ந்து நடிக்கும் நிவின் பாலி:
மலையாள சினிமாவில் வரிசையாக படங்களில் நடித்து வரும் நடிகர் நிவின் பாலி தற்போது தமிழ் சினிமாவிலும் தொடர்ந்து படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகி வருகிறார். இவர் 2017-ம் ஆண்டு வெளியான ரிச்சி என்ற படத்தின் மூலம் தமிழில் நேரடியாக நடித்தார். ஆனால் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.
இதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் இயக்குநர் ராம் இயக்கத்தில் ஏழு கடல் ஏழு மலை என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் பணிகள் முடிவடைந்து படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பல விருதுகளை குவித்து வருகின்றது. இன்னும் திரையரங்குகளில் வெளியிட படக்குழு தேதி குறிக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் நடிகர் ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்கும் பென்ஸ் படத்தில் நடிகர் நிவின் பாலி வில்லனாக நடிக்க உள்ளார். இதுகுறித்த வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவிப்பை படக்குழு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.