கயலாக இட்லி கடை படத்தில் நடிக்கும் நடிகை நித்யா மேனன் – போஸ்டர் வெளியிட்ட படக்குழு
Idli Kadai Movie: நடிகை நித்யா மேனன் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் அதிகப் படங்களை நடித்து வரும் நடிகை நித்யா மேனன் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் இட்லி கடை.

நடிகை நித்யா மேனன்
கன்னட சினிமாவில் அறிமுகம் ஆகி அதனைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என தொடர்ந்து தென்னிந்திய மொழிகளில் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார் நடிகை நித்யா மேனன் (Actress Nithya Menon). இவரது நடிப்பில் இந்த ஆண்டில் மட்டும் தமிழ் சினிமாவில் இரண்டு படங்கள் வெளியாகி உள்ளது. அதன்படி ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடிகை நித்யா மேனன் நாயகியகவும் நடிகர் ரவி மோகன் நாயகனாகவும் நடித்த காதலிக்க நேரமில்லை படம் திரையரங்குகளில் வெளியானது. இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் திரையரங்குகளில் வரவேற்பைப் பெற்றது போல ஓடிடியில் வெளியான பிறகும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தை தொடர்ந்து நடிகை நித்யா மேனன் நடிப்பில் திரையரங்குகளில் வெளியான படம் தலைவன் தலைவி. நடிகர் விஜய் சேதுபதி இந்தப் படத்தில் நாயகனாக நடித்து இருந்தார். மேலும் இந்தப் படத்தை இயக்குநர் பாண்டியராஜ் இயக்கி இருந்த நிலையில் படம் திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படம் வசூலில் 100 கோடி ரூபாயை கடந்ததும் குறிப்பிடத்தக்கது.
இட்லி கடை படத்தில் கயலாக நடிகை நித்யா மேனன்:
தலைவன் தலைவி படத்தை தொடர்ந்து நடிகை நித்யா மேனன் நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியாக உள்ள படம் இட்லி கடை. நடிகர் தனுஷ் இயக்கி நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை நித்யா மேனன் நடித்துள்ளார். மேலும் இந்தப் படத்தின் மூலம் தனுஷுடன் இரண்டாவது முறையாக நடிகை நித்யா மேனன் ஜோடி சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படத்தில் நடிக்கும் நடிகர்களின் அறிமுக போஸ்டரைப் படக்குழு தொடர்ந்து வெளியிட்டு வருகின்றது. அதன்படி படத்தில் நடிகை நித்யா மேனன் கயல் என்ற கதாப்பாத்திரத்தில் நடிப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. இது ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது.
Also Read… Suriya : அந்த படத்திற்காக என்னையே மாற்றினேன்.. சூர்யா பகிர்ந்த விஷயம்!
இட்லி கடை படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
The powerful performer, @MenenNithya as KAYAL❤️#IdliKadai in theatres from October 1st, 2025
Audio launch this Sunday – 14th September🎙️🔥#IdliKadaiCharacterIntroduction@dhanushkraja @arunvijayno1 @RedGiantMovies_ @gvprakash @DawnPicturesOff @aakashbaskaran @thesreyas… pic.twitter.com/rzG9fHHVR5
— Wunderbar Films (@wunderbarfilms) September 11, 2025