Nayanthara: சல்மான் கானுடன் ஜோடி.. சம்பளத்தில் புதிய உச்சம் தொட்ட நயன்தாரா!
Nayanthara Salary Update : நயன்தாரா தற்போது தமிழ் சினிமாவை தொடர்ந்து மற்றமொழி படங்களிலும் நாயகியாக நடித்துவருகிறார். தற்போது வம்சி பைடிபள்ளி இயக்கத்தில், இந்தியில் சல்மான்கானுடன் ஜோடியாக நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு நயன்தாரா வாங்கும் சம்பளம் தொடர்பான தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நயன்தாரா மற்றும் சல்மான் கான்
தென்னிந்திய சினிமாவில் கிட்டத்தட்ட 40 வயதை கடந்தும், படங்களில் கதாநாயகியாக தொடர்ந்து நடித்துவருபவர் நடிகை நயன்தாரா (Nayanthara). இவரின் நடிப்பில் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி போன்ற மொழிகளில் படங்கள் தயாராகிவருகிறது. அந்த வகையில் இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் டெஸ்ட் (Test). இந்த படம் கடந்த 2025ம் ஆண்டில் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகியிருந்தது. இதையடுத்து தெலுங்கிலும் சிரஞ்சீவிக்கு ஜோடியாக, “மன சங்கர வர பிரசாத் காரு” என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படம் இந்த 2026ம் ஆண்டு தொடக்கத்தில் வெளியாகியிருந்த நிலையில், தெலுங்கில் இவருக்கு சிறப்பான வரவேற்பை கொடுத்திருந்தது.
அந்த விதத்தில் இப்படத்தை அடுத்ததாக கிட்டத்தட்ட 7க்கும் மேற்பட்ட படங்களை தனது கைவசத்தில் வைத்துள்ளார். இதனை அடுத்ததாக தற்போது இந்தியில் சல்மான் கானுக்கு (Salman Khan) ஜோடியாக புது படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தில் நடிப்பதற்கு நயன்தாரா வாங்கியுள்ள சம்பளம் தொடர்பான தகவ்கள் இணையத்தில் கசிந்துள்ளது.
இதையும் படிங்க: 2026 தேர்தல் குறித்த கேள்வி.. கையெடுத்து கும்பிட்ட ரஜினிகாந்த்!
சல்மான்கானுக்கு ஜோடியாக நடிக்க நயன்தாரா வாங்கிய சம்பளம்:
பாலிவுட் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவர் சல்மான் கான். இவர் வாரிசு பட இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கத்திலும், தில்ராஜுனின் தயாரிப்பிலும் புதிய திரைப்படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் சமீபத்தில் வெளியாகியிருந்தது. இந்த படமானது முற்றிலும் ஆக்ஷன் பேமிலி கதைக்களத்தில் தயாராகவுள்ளதாம். இந்த படத்தில் நடிப்பதற்கு நடிகை நயன்தாரா கிட்டத்தட்ட ரூ 11 கோடியை சம்பளமாக கேட்டுள்ளாராம்.
இதையும் படிங்க: அந்த படத்தில் நிறைய ட்ரோல்.. நான் பயங்கரமா அழுதேன் – மௌனம் உடைத்த ரச்சிதா!
பாலிவுட் நடிகைகள் நடிப்பதற்கே ரூ 10 கோடிகள் மட்டுமே கேட்டுக்கும் நிலையில், நடிகை நயன்தாரா ரூ 11 கோடிகளை சம்பளமாக வாக்கியுள்ளாராம். இவர் இந்தியில் இறுதியாக ஜவான் படத்தில் நடித்திருந்த நிலையில், அதற்கு பின் இப்படத்தில் நடிக்கவுள்ளார். இதன் காரனமாக இப்படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துவருகிறது.
சல்மான்கானுடன் இணையும் புது படம் குறித்து நயன்தாரா வெளியிட்ட எக்ஸ் பதிவு:
And it official 🔥 #NayantharaWithSalmanKhan
a @directorvamshi film 🎥 pic.twitter.com/q1hnerNxny— Nayanthara✨ (@NayantharaU) March 31, 2026
நயன்தாரா தமிழ் மூக்குத்தி அம்மன் 2, மண்ணாங்கட்டி, டாக்ஸிக், பேட்ரியாட், ராக்காயி, ஹாய் போன்ற படங்களிலும் தெலுங்கில் பாலகிருஷ்ணாவுடன் புது படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார். அந்த வகையில் தற்போது இவரின் நடிப்பில் கிட்டத்தட்ட 7 படங்களுக்கும் மேல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதில் இந்த 2026ம் ஆண்டில் கிட்டத்தட்ட 5 படங்களுக்கும் மேல் வெளியாகவுள்ளது. இந்த படங்கள் மூலம் மேலும் நயன்தாராவிற்கு பட வாய்ப்புகள் குவியும் என எதிர்பார்க்கப்படுகிறது.