Nagarjuna: கூலியில் நடந்த சர்ப்ரைஸ்.. லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் பிளான் இதுதான்!

Nagarjuna About Coolie Costume Design : தெலுங்கு சினிமாவில் முன்னணி பிரபலங்களில் ஒருவராக இருந்து வருபவர் நாகார்ஜுனா. இவர் வில்லனாக நடித்திருந்த தமிழ்ப் படம்தான் கூலி. இந்த படத்தில் இவரின் காஸ்டியூம் ரசிகர்கள் மத்தியில் ஈர்க்கப்பட்டு வந்த நிலையில், அது எந்த நடிகரின் ரெஃபெரென்ஸ் என்பதைப் பற்றி அவர் கூறியுள்ளார்.

Nagarjuna: கூலியில் நடந்த சர்ப்ரைஸ்.. லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் பிளான் இதுதான்!

நாகார்ஜுனா

Published: 

14 Aug 2025 16:13 PM

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் (Rajinikanth) முன்னணி நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் கூலி (Coolie). இந்த படத்தைத் தென்னிந்தியப் பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த படத்தில் தமிழ் பிரபல இயக்குநரான லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) இயக்கியிருக்கிறார். இவரின் இயக்கத்தில் வெளியான 6வது திரைப்படமாக இந்த கூலி வெளியாகியுள்ளது. இந்த படத்தில் பான் இந்தியப் பிரபல நடிகர்கள் பலரும் இணைந்து நடித்திருந்தனர். அந்த வகையில் இப்படத்தில் முக்கிய வில்லனாக நடித்திருப்பவர் நாகார்ஜுனா (Nagarjuna). தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வரும் இவர், முதன் முறையாக நெகடிவ் ரோலில் நடித்திருக்கிறார்.

இந்நிலையில், சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய இவர், கூலி படத்தில் தனது கதாபாத்திரத்தின் உடை வடிவமைப்பு பற்றி விளக்கமாகப் பேசியுள்ளார். அவர் அதில் ஹாலிவுட் ஜோக்கர் பட ஹீத்லெட்ஜர் போலத் தனது உடையும் வடிவமைக்கப்பட்டிருந்ததாக்க அவர் கூறியுள்ளார். அவர் பேசியது குறித்து விவரமாகப் பார்க்கலாம்.

இதையும் படிங்க : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் சூப்பர் ஹிட் அடித்த மாஸ்டர் படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம்?

கூலி படத்தில் தனது காஸ்டியூம் டிஸைன் குறித்து நாகார்ஜுனா பேச்சு :

அந்த நேர்காணலில் நடிகர் நாகார்ஜுனா மற்றும் ஸ்ருதி ஹாசன் என இருவரும் கலந்துகொண்டனர். இவர்கள் இருவருக்கிடையே நடந்த நேர்காணலில் நடிகை ஸ்ருதி ஹாசன், நாகார்ஜுனாவிடம் அவரின் கதாபாத்திரம் குறித்துக் கேட்டிருந்தார். அப்போது பேசிய நாகார்ஜுனா, “கூலி திரைப்படத்தில் எனது கதாபாத்திரமான சைமன் கேரக்டரின் உடைக்கு, உடை வடிவமைப்பாளர்களிடம் ஹாலிவுட் பிரபல படமான ஜோக்கர் பட, ஹீத்லெட்ஜர் கதாபாத்திரம் போல உடை வடிவமைக்கப் பரிந்துரைத்தார் லோகேஷ். அந்த மாதிரியான வடிவமைத்த அணிந்த பிறகு, இதுதான் நான் எதிர்பார்த்தேன் என லோகேஷ் கனகராஜ் சொன்னார்” என நாகார்ஜுனா பேசியிருந்தார்.

இதையும் படிங்க : திரையரங்குகளில் வெளியானது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கூலி படம்… FDFS பார்க்க வந்த பிரபலங்கள்!

கூலி படக்குழு வெளியிட்ட புதிய எக்ஸ் பதிவு :

இந்த கூலி படமானது இன்று 2025, ஆகஸ்ட் 14ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் இப்படமானது வெளியாகியுள்ளது. அதிகளவு எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரசிகர்கள் மத்தியில் தற்போது கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது. லியோ படத்தை ஒப்பிடும்போது இந்த படத்திற்கு நெகடிவ் விமர்சனங்களை வருவதாகக் கூறப்படுகிறது.