ரஜினிகாந்த், தனுஷ் வரிசையில் தற்போது பிரதீப் ரங்கநாதன் –  நாகர்ஜுனா சொன்ன விசயம்

Actor Nagarjuna about Pradeep Ranganathan: பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியுள்ள டியூட் படம் திரையரங்குகளில் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ளது. இந்த நிலையில் தொடர்ந்து புரமோஷன் பணிகளில் படக்குழு பிசியாக ஈடுபட்டுள்ள நிலையில் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் டியூட் படக்குழு கலந்துகொண்டுள்ளது.

ரஜினிகாந்த், தனுஷ் வரிசையில் தற்போது பிரதீப் ரங்கநாதன் -  நாகர்ஜுனா சொன்ன விசயம்

பிரதீப் ரங்கநாதன் -  நாகர்ஜுனா

Published: 

13 Oct 2025 17:34 PM

 IST

நடிகர் பிரதீப் ரங்கநாதன் (Actor Pradeep Ranganathan) நாயகனாக நடித்து தற்போது திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் படம் டியூட். இது பிரதீப் ரங்கநாதனின் நாயகனாக நடித்து திரையரங்குகளில் வெளியாகும் 3-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குநராக பிரதீப் ரங்கநாதன் இயக்கி படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. அதே போல இவர் நாயகனாக நடித்த லவ் டுடே மற்றும் ட்ராகன் ஆகியப் படங்களும் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் நடிகர் பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடித்துள்ள படம் டியூட். இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக கீர்த்தீஸ்வரன் அறிமுகம் ஆகியுள்ளார். இவர் முன்னதாக தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக உள்ள இயக்குநர் சுதா கொங்கராவிடம் உதவி இயக்குநராக பணியாற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படம் வருகின்ற 17-ம் தேதி அக்டோபர் மாதம் 2025-ம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. மேலும் இந்தப் படம் இளம் தலைமுறையினரிடம் வரவேற்பை பெறும் என்று ட்ரெய்லரைப் பார்த்த ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்தப் படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அபோது தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் படக்குழு கலந்துகொண்ட போது அந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளர் நாகர்ஜுனா பேசியது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

ரஜினிகாந்த், தனுஷ் வரிசையில் தற்போது பிரதீப் ரங்கநாதன்:

பல ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் ரஜினிகாந்த் சார் சினிமாவுக்கு வந்து சினிமாவில் இருந்த விதியை மாற்றினார். அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் என்ட்ரி பல மாற்றங்களை ஏற்படுத்தினார். அந்த வரிசையில் தற்போது பிரதீப்பை நான் காண்கிறேன் என்று நடிகர் நாகர்ஜுனா வெளிப்படையாக பேசியுள்ளார்.

அதனைக் கேட்ட நடிகர் பிரதீப் ரங்கநாதன் உங்களிடமிருந்து வரும் பெரிய வார்த்தைகள் இது, அவை உண்மையில் எனக்கு மிகப்பெரிய விசயம் என்று நடிகர் பிரதீப் ரங்கநாதன் தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகர் துருவ் விக்ரம் – வைரலாகும் வீடியோ

இணையத்தில் கவனம் பெறும் நாகர்ஜுனாவின் பேச்சு:

Also Read… பர்த்டே பாய் நிவின் பாலியின் ஓம் சாந்தி ஓஷானா படத்தை பார்த்து இருக்கீங்களா? அப்போ மிஸ் செய்யாமல் பாருங்க