மங்காத்தாவில் ஒரு பகுதியாக இருப்பதில் பெருமை… யுவன் சங்கர் ராஜா நெகிழ்ச்சி
Music Director Yuvan Shankar Raja: தமிழ் சினிமாவில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற மங்காத்தா படம் தற்போது மீண்டும் ரீ ரிலீஸாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. இது குறித்து யுவன் சங்கர் ராஜா நெகிழ்ச்சிப் பதிவை வெளியிட்டுள்ளார்.

யுவன் சங்கர் ராஜா
தமிழ் சினிமா மட்டும் இன்றி பான் இந்திய அளவில் நடிகர்களின் பிள்ளைகள் நடிகர்களாகவும், இயக்குநர்களின் பிள்ளைகள் இயக்குநர்களாகவும் வருவது போல இசையமைப்பாளர் மற்றும் பாடகர்களின் பிள்ளைகளும் இசைத் துறையை தேர்வு செய்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவில் ரசிகர்களால் இசை ஞானி என அழைக்கப்படுபவர் இசையமைப்பாளர் இளையராஜா. இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள். இதில் முதல் மகன் கார்த்திக் ராஜா இரண்டாவது மகன் தான் யுவன் சங்கர் ராஜா. இவர்கள் இருவருமே தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர்களாக உள்ளனர். இதில் இளைய மகன் யுவன் சங்கர் ராஜாவிற்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம். குறிப்பாக 90களில் பிறந்தவர்களின் ஆதர்சன இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. படம் வெற்றியடைந்ததோ இல்லையோ யுவனின் பாடல்கள் ரசிகர்களின் மனதில் இடம்பிடிக்க தவறியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சமீப காலமாக தொடர்ந்து படங்களில் பெரிய அளவில் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவில்லை என்றாலும் இசைக் கட்சேரிகள் நடத்தி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகிறார். இந்த நிலையில் தற்போது யுவன் சங்கர் ராஜா வெளியிட்ட எக்ஸ் தள பதிவு ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
மங்காத்தாவில் ஒரு பகுதியாக இருப்பதில் பெருமை:
தமிழ் சினிமாவில் நேற்று முதல் நடிகர் அஜித் குமாரின் மங்காத்தா படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. புதிதாக படம் வெளியானது போல ரசிகர்கள் அந்தப் படத்திற்கு மாபெரும் வரவேற்பைப் கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாதான் இசையமைத்து இருந்தார். அவர் தற்போது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது, அதன் அசல் வெளியீட்டிற்குப் பிறகு 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வெளியாவதற்கான இந்த ஆர்வம் வேற லெவல். உங்களை நேசிக்கிறேன் நண்பர்களே. AK50 மங்காத்தா படத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் பெருமைப்படுகிறேன் என்று தெரிவித்து இருந்தார். இது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… பழம்பெரும் பாடகி எஸ். ஜானகியின் மகன் முரளி கிருஷ்ணா காலமானார்
யுவன் சங்கர் ராஜா வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
The craze for a re-release after 15 years of its original release is just 🔥🔥🔥 Love you guys. Honoured to be a part of AK50 #Mankatha ♠️ @vp_offl @sunpictures @dhayaalagiri @SonyMusicSouth
— Raja yuvan (@thisisysr) January 24, 2026
Also Read… பாசம் வைக்க நேசம் வைக்க தோழன் உண்டு வாழ வைக்க… நண்பர்கள் குறித்து நெகிழ்ந்து பேசிய ரஜினிகாந்த்