இளையராஜா – ஏ.ஆர். ரஹ்மானுக்கு அடுத்து ஜிவி. பிரகாஷ்தான்.. புகழ்ந்து தள்ளிய இசையமைப்பாளர் சாம் சி.எஸ்.!

Sam CS Praises GV Prakashs Talent: தென்னிந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள சினிமாவில் பிரபல இசையமைப்பாளர்களில் ஒருவராக இருந்தவருபவர் சாம் சி.எஸ். இவர் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் இசையமைப்பாளரான ஜி.வி. பிரகாஷ் குமார் குறித்து புகழ்ந்து பேசியுள்ளார். அது குறித்து விவரமாக பார்க்கலாம்.

இளையராஜா - ஏ.ஆர். ரஹ்மானுக்கு அடுத்து ஜிவி. பிரகாஷ்தான்.. புகழ்ந்து தள்ளிய இசையமைப்பாளர் சாம் சி.எஸ்.!

சாம் சிஎஸ் மற்றும் ஜிவி பிரகாஷ்

Published: 

21 Dec 2025 16:44 PM

 IST

தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளர்களில் ஒருவராக இருந்துவருபவர் சாம் சி.எஸ் (Sam CS). இவர் தமிழில் கடந்த 2010ம் ஆண்டில் வெளியான “ஓர் இரவு” என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகியிருந்தார். பொதுவாக இவருக்கு ஹாரர் மற்றும் திரில்லர் போன்ற படங்ககளில் அதிகம் இசையமைத்துள்ளார். குறிப்பாக விஜய் சேதுபதி (Vijay Sethupathi) மற்றும் மாதவன் (R. Madhavan) இணைந்து நடித்திருந்த விக்ரம் வேதா (Vikram Vedha) என்ற படத்திற்கு இவர்தான் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் இவருக்கு மக்களிடையே அதிகம் பிரபலம் கிடைத்திருந்தது. மேலும் இதனை தொடர்ந்து இவருக்கு தமிழில் மிகப்பெரிய ஹிட் வரவேற்பை கொடுத்த திரைப்படம் கைதி (Kathi). நடிகர் கார்த்தி மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியான இப்படத்தில் இவரின் பின்னணி இசை மிகவும் பிரமாதமாக அமைந்திருந்தது என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இதையும் தொடர்ந்து பல திரைப்படங்களுக்கு தற்போதும் இசையமைத்துவருகிறார்.

அந்த வகையில் இவரின் இசையமைப்பில் வெளியீட்டிற்கு தயாராகிவரும் ரெட்ட தல (Retta Thala). நடிகர் அருண் விஜய்யின் (Arun Vijay) நடிப்பில் உருவாகியுள்ள இப்படம் வரும் 2025 டிசம்பர் 25ம் தேதியில் வெளியாகிறது. அந்த வகையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய சாம் சி.எஸ், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷின் (GV. Prakash) திறமையை புகழ்ந்துள்ளார்.

இதையும் படிங்க: சிம்பு படம் குறித்து அஸ்வத் மாரிமுத்து கொடுத்த சூப்பர் அப்டேட்!

ஜி.வி. பிரகாஷ் குமாரை புகழ்ந்து இசையமைப்பாளர் சாம் சி.எஸ். பேசிய விஷயம் :

இசையமைப்பாளர் சாம் சி.எஸ். அந்த நேர்காணலில் , “இசையமைப்பாளர்கள் இளையராஜா மற்றும் ஏ.ஆர்.ரஹ்மானுக்குப் பிறகு, எனக்கு ஜி.வி.பிரகாஷ் மியூசிக் ரொம்ப பிடிக்கும். அவர் மிகவும் திறமையான இசையமைப்பாளர், அவருடைய மெலடி பாடல்கள் மிகவும் நன்றாக இருக்கும். நானும் ஜிவி. பிரகாஷ் குமாரும் தற்போது வரையிலும் கனெக்ஷனில் இருக்கிறோம்.

இதையும் படிங்க: படப்பிடிப்பை முடித்தது தனுஷின் D 54 படக்குழு… வைரலாகும் போஸ்ட்

அவர் அடிக்கடி என்னுடன் பேசுகிறார். ஒரு இசையமைப்பாளராக நான் அவரை உண்மையிலேயே பாராட்டுகிறேன்” என அவர் அந்த நேர்கணலில் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். ஜி.வி. பிரகாஷ் குறித்து பாராட்டிய விஷயம் தற்போது ரசிகர்களிடையே வைரலாகபரவி வருகிறது.

ரெட்ட தல திரைப்படத்தின் பாடல்கள் குறித்து இசையமைப்பாளர் சாம் சி.எஸ். வெளியிட்ட எக்ஸ் பதிவு :

அருண் விஜய்யின் ரெட்ட தல படமானது வரும் 2025 டிசம்பர் 25ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது. இந்த படமானது முற்றிலும் ஆக்ஷன் திரில்லர் கதைக்களத்தில் தயாராகியுள்ளது. இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்கப்பட்டநிலையில், நிச்சயம் திரையரங்கில் வரவேற்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போன வீரர்... அவருக்கு உடலில் இப்படி ஒரு பிரச்சனையா?
ஹிமாச்சலின் வறண்ட டிசம்பர்.. வெப்பமயமாதலால் பனி இல்லாத நிலை!
ஜிபிஎஸ் டிராக்கருடன் கிடைத்த வெளிநாட்டு கடற்புறா - பரபரப்பு தகவல்
ஏஐ காதலரை திருமணம் செய்துகொண்ட ஜப்பானிய பெண்