Karuppu: சூர்யாவின் ‘கருப்பு’ ஃபர்ஸ்ட் சிங்கிள் தீபாவளிக்கு உறுதி… அப்டேட் கொடுத்த சாய் அபயங்கர்!

Karuppu Movie Update: சூர்யா மற்றும் ஆர்.ஜே.பாலாஜியின் கூட்டணியில் தயாராகிவரும் படம்தான் கருப்பு. இந்த் படமானது அசத்தல் ஆக்ஷ்ன் மற்றும் தெய்வீகம் கலந்த கலவையாக தயாராகிவருகிறது. இப்படத்தின் முதல் பாடல் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், இசையமைப்பாளர் சாய் அபயங்கர் அப்டேட் கொடுத்துள்ளார்.

Karuppu: சூர்யாவின் கருப்பு ஃபர்ஸ்ட் சிங்கிள் தீபாவளிக்கு உறுதி... அப்டேட் கொடுத்த சாய் அபயங்கர்!

சூர்யாவின் கருப்பு

Published: 

12 Oct 2025 18:23 PM

 IST

தென்னிந்திய சினிமாவில் பிரபலமிக்க நடிகராகவும், தயாரிப்பாளராகவும் இருந்துவருபவர் சூர்யா (Suriya). இவர் தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துவருகிறார். இவரின் முன்னணி நடிப்பில் இறுதியாக ரெட்ரோ (Retro) என்ற படமானது திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கியிருந்த நிலையில், சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே (Pooja hegde) நடித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து சூர்யா நடித்துவந்த திரைப்படம்தான் கருப்பு (Karuppu). இந்த படத்தை நடிகரும், இயக்குநருமான ஆர்.ஜே.பாலாஜி (RJ. Balaji) இயக்கிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கருப்பு திரைப்படமானது கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் பூஜைகளுடன் ஷூட்டிங் தொடங்கியது. அதை தொடர்ந்து தமிழகம் மற்றும் ஹைதராபாத் போன்ற பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இப்படத்தின் ஷூட்டிங் நிறைவடையும் தருவாயில் உள்ளது. சூர்யா இப்படத்தின் ஷூட்டிங்கை முழுமையாக முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கருப்பு படமானது இந்த 2025 தீபாவளிக்கு வெளியாகவும் என ஆர்.ஜே.பாலாஜி தெரிவித்த நிலையில், தற்போது 2026ம் ஆண்டில் வெளியாக்குவதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: சூர்யா 46 படம் எந்த மாதிரியான கதை? இணையத்தில் வைரலாகும் தகவல்

இந்த படத்தில் முதல் பாடல் எப்போது வெளியாகவும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், . இந்த 2025 தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் என இயக்குனர் ஆர்.ஜே. பாலாஜி தெரிவித்திருந்தார். இதை இசையமைப்பாளர் சாய் அபயங்கர் (Sai Abhyankkar) உறுதி செய்துள்ளார். அவர் இந்த தகவலை உறுதி செய்யும் விதத்தில், “கருப்பு” என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கருப்பு திரைப்படம் குறித்து இசையமைப்பாளர் சாய் அபயங்கர் வெளியிட்ட எக்ஸ் பதிவு:

கருப்பு திரைப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போக என்ன காரணம்:

சூர்யாவின் கருப்பு திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை திரிஷா கிருஷ்ணன் நடித்துள்ளார். இவர் சுமார் 20 வருடங்களுக்கு பின் சூர்யாவுடன் திரைப்படத்தில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த கருப்பு படத்தின் ஷூட்டிங்கின்போது, திரிஷா மற்றும் ஆர்.ஜே. பாலாஜி இருவருக்கும் பிரச்சனை நடந்ததாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இதனால் திரிஷாவின் பாதி காட்சிகள் இன்னும் படமாக்கப்படாமல் இருப்பதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: பராசக்தி படத்தின் ஷூட்டிங் முடிந்ததா? இணையத்தில் வைரலகும் வீடியோ!

மேலும் இந்த படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடைபெற்றுவரும் நிலையில், CG பணிகளும் தீவிரமாக நடைபெற்றுவருகிறதாம். அதன் காரணமாக இந்த 2025 தீபாவளியோடு இந்த கருப்பு படம் வெளியாகாது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படமானது வரும் 2026ம் ஆண்டு தமிழ் புத்தாண்டோடு வெளியாகி அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தின் அப்டேட்டுகளும் விரைவில் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்துவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.