Devi Sri Prasad : பிச்சைக்காரன் வேடத்தை ஏற்றுக்கொண்டதே தனுஷிற்கு முதல் வெற்றி – தேவி ஸ்ரீ பிரசாத்!

Devi Sri Prasad Praises Dhanush : தென்னிந்திய சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருந்து வருபவர் தேவி ஸ்ரீ பிரசாத். இவரின் இசையமைப்பில் சமீபத்தில் வெளியான படம் குபேரா. தனுஷின் இந்த படமானது நல்ல வரவேற்பைப் பெற்றுவரும் நிலையில், சமீபத்தில் வெற்றி விழாவில் தேவி ஸ்ரீ பிரசாத், தனுஷை பாராட்டியுள்ளார்.

Devi Sri Prasad : பிச்சைக்காரன் வேடத்தை ஏற்றுக்கொண்டதே தனுஷிற்கு முதல் வெற்றி - தேவி ஸ்ரீ பிரசாத்!

தேவி ஸ்ரீ பிரசாத் மற்றும் தனுஷ்

Published: 

24 Jun 2025 18:28 PM

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தனுஷ் (Dhanush). இவர் தமிழ் திரைப்பட இயக்குநர்களையும் கடந்து, இந்தி மற்றும் தெலுங்கு மொழி இயக்குநர்களுடனும் இணைந்து பணியாற்றிவருகிறார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் குபேரா (Kuberaa). இந்த படத்தை தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா (Sekhar Kammula) இயக்க, தேவி ஸ்ரீ பிரசாத் (Devi Sri Prasad) இசையமைத்திருந்தார். இப்படத்தில் தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையமைப்பும் மிக அருமையாக இருந்ததாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். திரையரங்குகளை வெளியாகிவரும் இந்த குபேரா திரைப்படமானது எதிர்பார்ப்பைவிடவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து இப்படத்தின் வெற்றி விழா  (Success Meet) கடந்த 2025, 22ம் தேதியில் ஹைதராபாத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் குபேரா படக்குழுவில் இருந்து பலரும் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், நடிகர் தனுஷை வெகுவாக பாராட்டியுள்ளார். அவர் அந்த நிகழ்ச்சி மேடையில், இந்த படத்தில் ஆரம்பத்தில் தனுஷ் பிச்சைக்காரனாக நடிக்க ஏற்றுக்கொண்டதே இப்படத்தின் வெற்றிதான் என அவர் பாராட்டியிருக்கிறார். இது பற்றி விளக்கமாகப் பார்க்கலாம்.

குபேரா படக்குழு வெளியிட வெற்றி விழா குறித்த பதிவு :

தனுஷை பாராட்டிய தேவி ஸ்ரீ பிரசாத் :

அந்த நிகழ்ச்சியில்  பேசிய இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், இயக்குநர் சேகர் கம்முலா, தயாரிப்பாளர், மற்றும் நாகார்ஜுனா எனப் பலரையும் பாராட்டியிருந்தார். அதைத் தொடர்ந்து தனுஷை பற்றிப் பேச தொடங்கிய தேவி ஸ்ரீ பிரசாத், “இந்த குபேரா படத்திற்காக நிச்சயமாக தனுஷ் தேசிய விருதைப் பெறுவார். அதற்கு நான் முதல் வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன். மேலும் தனுஷ் சார் இந்த படத்தில் பிச்சைக்காரன் வேடத்தில் நடிக்க ஏற்றுக்கொண்டதே முதல் வெற்றிதான். முன்னதாக நான் புஷ்பா படத்திற்கு அல்லு அர்ஜுனுக்கு விருது கிடைக்கும் என்று வாழ்த்தியிருந்தேன்.

அவருக்கு அதற்கு முதலில் வாழ்த்து தெரிவித்ததே நான்தான். அதை போல இப்போதும் குபேரா படத்திற்கு தனுஷ் தேசிய விருது பெறவேண்டும் என நான் வாழ்த்துகிறேன்” என இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் வாழ்த்தியுள்ளார். இந்த படத்தில் நடிகர் தனுஷின் நடிப்பு பற்றி தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியும் பாராட்டியிருந்தார். இவ்வாறு தனுஷிற்கு தொடர்ந்து பாராட்டு மழையில் நனைந்து வரும் நிலையில், நிச்சயமாக அவருக்குத் தேசிய விருது மீண்டும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.