மீசையமுறுக்கு 2வில் நடிக்க மறுத்த இசையமைப்பாளர்.. யார் தெரியுமா?
Meesaya Murukku 2 Movie Update: இசையமைப்பாளராகவும் மற்றும் நடிகராகவும் பிரபலமானவராக இருந்து வருபவர் ஹிப்ஹாப் ஆதி. இவரின் நடிப்பு, இயக்கம் மற்றும் இசையமைப்பில் கடந்த 2017ம் ஆண்டு வெளியான படம்தான் மீசையமுறுக்கு. இப்படத்தின் பார்ட் 2 படமானது உருவாகவுள்ளதாக கூறப்பட்டநிலையில், இந்த படத்தில் பிரபல இசையமைப்பாளர் ஒருவர் நடிப்பதற்கு மறுத்துள்ளார்.

ஹிப்ஹாப் ஆதியின் மீசையமுறுக்கு 2 படம்
கோலிவுட் சினிமாவில் இயக்குநர் சுந்தர் சி (Sundar C) மூலம் இசையமைப்பாளராக சினிமாவில் அறிமுகமானவர் ஹிப்ஹாப் ஆதி (Hiphop Adhi). இவர் கடந்த 2015ம் ஆண்டில் விஷால் (Vishal) மற்றும் சுந்தர் சி கூட்டணியில் வெளியான “ஆம்பள” (Aambala) என்ற படத்தின் மூலம், இசையமைப்பாளராக அறிமுகம் செய்யப்பட்டார். இந்த படத்தை தொடர்ந்து, சுந்தர் சியின் இயக்கத்தில் உருவாகும் படங்களுக்கு இசையமைத்து வந்தார். பின் நடிகர் ரவி மோகன் (Ravi Mohan) மற்றும் நயன்தாராவின் (Nayanthara) நடிப்பில் வெளியான தனி ஒருவன் (Thani Oruvan) படத்திற்கும் இவர் இசையமைத்திருந்தார். இவரின் இசையமைப்பில் வெளியான பாடல்களும் மக்களிடையே தொடர்ந்து பிரபலமாக தொடங்கியது. மேலும் பின் இவரே 2017ம் ஆண்டில் வெளியான மீசையமுறுக்கு (Meesaya Murukku) என்ற படத்தின் மூலம் ஹீரோவாகவும் அறிமுகமானார். இந்த இவரே இயக்கி அதில் இவரே ஹீரோவாகவும் நடித்திருந்தார்.
இந்த படமானது மக்களிடையே சூப்பர் ஹிட்டாகியது. இந்த படத்தை தொடர்ந்து, தற்போது மீசையமுறுக்கு படத்தின் பாகம் 2 உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது. ஹிப்ஹாப் ஆதி இயக்கும் இந்த புதிய படத்தில் பிரபல இசையமைப்பாளர் ஒருவர் நடிக்கமருத்துள்ளாராம். அவர் வேறுயாருமில்லை பிரபல இசையமைப்பாளர் தேவா தான்(Deva). இது பற்றி நிகழ்ச்சி ஒன்றில் இவர் பேசியுள்ளார்.
இதையும் படிங்க : கரூரில் விஜயின் பரப்புரையில் நேர்ந்த சோகம் – வேதனை தெரிவிக்கும் நடிகர்கள்
மீசையமுறுக்கு பார்ட் 2 படத்தின் நடிக்க மறுத்தது பற்றி தேவா பேச்சு
அந்த நிகழ்ச்சியில் பேசிய இசையமைப்பாளர் தேவா, ” என்னிடம் மீசையமுறுக்கு 2 படத்தின் கதையை ஆதி சொன்னாரு. மிகவும் அருமையான கதை, வெறித்தனமாக இருந்தது. அந்த படத்தில் என்னை தாதாவாக நடிப்பதற்கு ஆதி அழைத்தார். உடனே நான், நான் தாதாவா என கேட்டேன். அனால் அந்த கதை மிகவும் அருமையாக இருந்தது. நான் நடிக்க மறுத்தற்கு முதல் காரணம் என்னெவென்றால், நான் இப்போது மியூசிக் கான்செப்டில் மிகவும் பிசியாக இருக்கிறேன். சென்னையில் கொஞ்சநாள்தான் இருப்பேன். மற்ற நேரமெல்லாம் வெளிநாடுகளுக்கு செல்லவேண்டியது இருக்கும்.
இதையும் படிங்க : கரூர் சம்பவம்… விஜய் சேதுபதி படத்தின் அறிவிப்பு ஒத்திவைப்பு!
இந்த நேரத்தில் படத்தில் நடித்தால் அவர்களுக்கு சரியான ஒத்துழைப்பை கொடுக்கமுடியாது. இதனால் மற்ற நடிகர்களும் பாதிக்கப்படுவார்கள். இரண்டாவது காரணம் என்னெவென்றால், நான் வெளிப்படையாகவே கூறுகிறேன் எனக்கு நடிக்கத்தெரியது. அந்த ஸ்கிரிப்டை மனப்பாடம் செய்து என்னால் பேசமுடியாது” என இசையமைப்பாளர் தேவா அதில் வெளிப்படியாக பேசியிருந்தார்.
இசையமைப்பாளர் தேவா பேசிய வீடியோ பதிவு :
“HiphopTamizha narrated #MeesayaMurukku Part-2 story to me & asked to play antagonist character🤜🤛. It was an extraordinary script👌. But I’m busy with Concert & not comfortable in acting, so I rejected the offer❌”
– #Devapic.twitter.com/FlSiFanfDv— AmuthaBharathi (@CinemaWithAB) September 28, 2025