Mrunal Thakur: ‘அவர் அங்கு வருவார் என எனக்கு தெரியாது’ – தனுஷ் குறித்து மிருணாள் தாக்கூர் பேச்சு!
Mrunal Thakur About Dhanush Talent: பாலிவுட் சினிமாவில் கதாநாயகியாக கலக்கிவருபவர் மிருணாள் தாக்கூர். இவர் தொடர்ந்து படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்துவருகிறார். இந்நிலையில் தனுஷ் குறித்தும் மற்றும் அவருடன் இணைந்து பணியாற்ற ஆசைப்படுவதாக நடிகை மிருணாள் தாக்கூர் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். அது குறித்து விவரமாக பார்க்கலாம்.

மிருணாள் தாக்கூர் மற்றும் தனுஷ்
தென்னிந்திய சினிமாவில் இளம் நடிகையாக ரசிகர்களை கவர்ந்துவருபவர் மிருணாள் தாக்கூர் (Mrunal Thakur). இவர் தெலுங்கு, இந்தி மற்றும் மராத்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துவருகிறார். ஆரம்பத்தில் இந்தி சீரியலில் நடிகையாக நடித்துவந்தார். இவர் நடித்த சீரியல் தமிழில் “இனிய இருமலர்கள்” என டப்பிங் செய்யப்பட்டு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டுவந்தது. இந்த சீரியலின் மூலமாக இவர் தமிழிலும் பிரபலமானார். அந்த விதத்தில் சினிமாவில் கதாநாயகியாக தென்னிந்திய மக்கள் மத்தியில் இவருக்கு பிரபலத்தை கொடுத்த படம் சீதா ராமம் (Sita Ramam). இதில் துல்கர் சல்மானுக்கு (Dulquer Salmaan) ஜோடியாக நடித்து ரசிகர்களை கவர்ந்திருந்தார். அந்த விதத்தில் இவர் தற்போது இந்தி படங்களிலும் கதாநாயகியாக நடித்துவருகிறார். இந்நிலையில் இவரும், நடிகர் தனுஷும் (Dhanush) காதலித்துவருவதாகவும், இவர்கள் இருவருமே திருமணம் செய்யவுள்ளதாகவும் இணையத்தில் தகவல்கள் பரவிவந்தது. இந்நிலையில் இதை நடிகை மிருணாள் தாக்கூர் முற்றிலுமாக மறுத்தார்.
அந்த வகையில் நடிகர் தனுஷ், சன் ஆப் சர்தார் 2 (Son Of Sardaar 2) படத்தின் திரையிடலுக்கு எவ்வாறு வந்தார் மற்றும் அவரின் நடிப்பு குறித்து சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் நடிகை மிருணாள் தாக்கூர் பேசியுள்ளார். இது குறித்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.
இதையும் படிங்க: ரத்தம் தெறிக்க.. வெளியானது யாஷின் ‘டாக்சிக்’ படத்தின் அதிரடி டீசர்!
தனுஷின் நட்புறவு குறித்து நேர்காணலில் பேசிய நடிகை மிருணாள் தாக்கூர்:
அந்த நேர்காணலில் பேசிய மிருணாள் தாக்கூர் “தனுஷ் சார், தேரே இஷ்க் மே திரைப்படத்தின் ஷூட்டிங்கில் இருந்தபோது, சன் ஆப் சர்தார் 2 படத்தின் திரையிடலுக்கு அவரை வரச்சொல்லி கேட்டிருந்தேன். அவர் கண்டிப்பாக வருவார் என எனக்கு தெரியாது. அவர் வந்ததும் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். மேலும் அவருடன் படங்களில் இணைந்து பணியாற்றுவதற்கு நான் மிகவும் விரும்புகிறேன். அவர் ஒரு நடிப்பின் நிறுவனம். அவர் மிகவும் அற்புதமான பாடகர், நடனக் கலைஞர், பாடலாசிரியர், இயக்குநர் நடிகர் மற்றும் இன்னும் பல விஷயங்களை செய்துவருகிறார்.
இதையும் படிங்க: ‘தாய் கிழவி படத்தை பற்றி மக்கள் சொல்லுவாங்க’ – படத்தை பார்த்து பாராட்டிய கமல்ஹாசன்!
அவரின் ராயன், மாரி, ராஞ்சனா மற்றும் கேப்டன் மில்லர் போன்ற படங்களை பார்த்தபிறகு அவரின் பெரிய ரசிகையாகிவிட்டேன். நான் அவரின் அசுரன் திரைப்படத்தை பல முறை பார்த்திருக்கிறேன்” என அதில் அவர் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
நடிகை மிருணாள் தாக்கூரின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் போட்டோஷூட் பதிவு:
நடிகை மிருணாள் தாக்கூர் இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் தொடர்ந்து பணியாற்றிவருகிறார். அந்த விதத்தில் இவர் தமிழில் எப்போது நடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்துவரும் நிலையில், சிலம்பரசனின் STR51 படத்தில் நடிப்பதற்காக இவருடன் பேச்சுவார்த்தைகள் நடந்துவருகிறதாம். ஒருவேளை இவர் இதில் நடிப்பதற்கு ஒப்புக்கொண்டால், இதன் மூலம் தமிழில் கதாநாயகியாக நுழைவார் என்பது குறிப்பிடத்தக்கது.