Meena: அஜித் கூட அந்த படத்தில் நான் தான் நடிச்சிருக்கணும்.. நடிக்காமல் போனதுக்கு காரணம் இதுதான் – மீனா!
Meena About Ajith Kumar: தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் பிரபல நடிகைகளில் ஒருவராக இருந்துவந்தவர் மீனா. இவரின் நடிப்பில் பல்வேறு மொழிகளில் படங்ககள் வெளியாகியிருக்கிறது. இவர் முன்னதாக பேசிய நேர்காணல் ஒன்றில் அஜித் உடன் நடிக்கவேண்டிய படத்தை தவறவிட்ட காரணம் குறித்து ஓபனாக பேசியுள்ளார்.

மீனா மற்றும் அஜித் குமார்
மலையாள சினிமாவின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை மீனா (Meena). இவர் கடந்த 80ஸ் தொடக்கம் மற்றும் 90ஸ் காலகட்டத்தில் சிறப்பான நடிகையாக இருந்துவந்தார். இவர் குழந்தை நட்சத்திரமாகவே தமிழ் சினிமாவிலும் அறிமுகமானார். அதை தொடர்ந்து பின் கதாநாயகியாகவும் படங்களில் நடித்து ஹிட் கொடுத்திருந்தார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு (Superstar Rajinikanth) குழந்தையாக நடித்த இவர், பின் சில ஆண்டுகளில் அவருக்கே படத்தில் ஜோடியாகவும் நடித்திருக்கிறார். இது தொடர்பான தகவல் தற்போது வரையிலும் சினிமாவில் பேசப்பட்டுவருகிறது. அந்த வகையில் நடிகை மீனா தமிழ் சினிமாவை தொடர்ந்து மலையாளம் போன்ற மொழிகளில் நடித்துவருகிறார். தற்போது இவருக்கு மலையாளம் மற்றும் தெலுங்கு போன்ற மொழி படங்களில்தான் அதிகம் வாய்ப்புகள் கிடைத்துவருகிறது. தற்போது நயன்தாரா (Nayanthara) இருப்பதுபோல 90ஸ் காலகட்டத்தில் நடிகர் மீனா மிகவும் பிரபலம் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் இவர் தற்போது படங்களில் முக்கிய வேடத்தில் நடித்தவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் முன்னதாக நேர்காணல் ஒன்றில் பேசிய மீனா, அஜித் குமாருடன் (Ajith Kumar) நடிக்க தவறவிட்ட படத்தையும் அதற்கான காரணம் என்ன என்பது குறித்தும் பேசியுள்ளார்.
இதையும் படிங்க: வெளியீட்டிற்கு முன்பே லாபம் பார்த்த தளபதி விஜய்யின் ஜன நாயகன்.. அட இத்தனை கோடிகளா?
அஜித்துடன் நடிக்க தவறிய படம் குறித்து மீனா பகிர்ந்த விஷயம் :
அந்த நேர்காணலில் நடிகை மீனா, “அஜித் சார், நான் ஹீரோயினாக நடித்துவந்த டைமில் சூப்பரான கதாபாத்திரங்களில் நடித்துவந்தாரு உண்மையா ?, இல்லையா?. ஒவ்வொரு படத்திற்கும் வித்தியாச வித்தியாசமான கதாபாத்திரம் அவருக்கும் அமைந்திருந்தது. மேலும் வாலி திரைப்படத்தில் அவரின் கதாபாத்திரம் மிகவும் அருமையாக இருந்தது. எனக்கு அவரின் அந்த கதாபாத்திரம் ரொம்பவே பிடித்திருந்தது. எனது கெட்ட நேரம் அந்த படத்தில் என்னால் நடிக்கமுடியாமல் போய்விட்டது.
இதையும் படிங்க: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தலைவர் 173 படத்தின் அறிவிப்பு வீடியோவை வெளியிட்ட படக்குழு!
அந்த நேரத்தில்தான் அவருக்கு அறுவை சிகிச்சை நடந்து வந்தது. அதன் காரணமாக அந்த படத்தின் ஷூட்டிங் தேதி மாறியது. மேலும் என்னால் அந்த படத்தில் நடிப்பதற்கு புதிய கால்ஷீட்டை கொடுக்கமுடியவில்லை. மேலும் எஸ்.ஜே. சூர்யாவும் என்னிடம் சொல்லிருக்காரு, நேநேகிக்க வாலி படத்தில் நடித்திருக்கவேண்டியது, உங்களுடன் வேலை செய்வதை தவறவிட்டுவிட்டேன் மேம் என்றெல்லாம் என்னிடம் சொல்லிருக்காரு. அதில் நடிக்காமல் போனது என்னுடைய துரதிர்ஷ்டம்” என அவர் அதில் வெளிப்படையாக பேசியிருந்தார்.
நடிகை மீனா வெளியிட்ட லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் பதிவு :
நடிகை மீனா, தற்போது சுந்தர் சி இயக்கத்தில் உருவாகிவரும் மூக்குத்தி அம்மன் 2 படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துவருகிறார். மேலும் ரௌடி பேபி மற்றும் மலையாளத்தில் திரிஷ்யம் 3 திரைப்படத்திலும் நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.