மருமகளை ஏமாற்றிய முன்னாள் காதலன்… மாமியார் எடுத்த ரிவெஞ்ச் – ஓடிடியில் இந்த மந்தாகினி படத்தை மிஸ் செய்யாதீர்கள்

Mandakini Movie: சினிமா என்பது அன்றாட வாழ்க்கையின் அடிப்படையை வைத்து பலப் படங்கள் தொடர்ந்து உருவாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதே போல மலையாள சினிமாவில் ஒரு சுவாரஸ்யமான கதையை வைத்து உருவான மந்தாகினி படம் குறித்து தற்போது பார்க்கலாம்.

மருமகளை ஏமாற்றிய முன்னாள் காதலன்... மாமியார் எடுத்த ரிவெஞ்ச் - ஓடிடியில் இந்த மந்தாகினி படத்தை மிஸ் செய்யாதீர்கள்

மந்தாகினி

Published: 

23 Nov 2025 22:34 PM

 IST

மலையாள சினிமாவைப் பொருத்தவரை இந்த நடிகர்தான் நாயகனாக நடிக்க வேண்டும், இந்த நடிகர்தான் வில்லனாக நடிக்க வேண்டும், இந்த நடிகர்தான் கமெடி கதாப்பாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று எந்த வரையறையும் இல்லை. மலையாள சினிமாவைப் பொருத்தவரை ஒரு படத்தில் காமெடி கதாப்பாத்திரத்தில் நடிப்பவர் மற்றொரு படத்தில் வில்லனாகவோ அல்லது கதையின் நாயகனாகவோ நடிப்பது வலக்கமாக உள்ளது. அதே போல நாயகனாக கலக்கி வரும் பலர் எந்தவித ஈகோவும் இல்லாமல் மற்ற நடிகர்களின் படங்களில் சிறு சிறு வேடங்களில் நடிக்கும் ஆச்சரியங்களும் மலையாள சினிமாவில் தான் நிகழ்ந்து கொண்டு இருக்கிறது. மற்ற தென்னிந்திய சினிமாவில் இந்த மாதிரியான நிகழ்வுகள் நடப்பது அரிதான ஒன்றாக உள்ளது என்றே சொல்லலாம்.

இந்த நிலையில் மலையாள சினிமாவில் கடந்த 2024-ம் ஆண்டு மே மாதம் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் மந்தாகினி. இந்தப் படத்தில் நடிகர் அல்தாஃப் சலீம் நாயகனாக நடித்துள்ள நிலையில் நடிகை அனார்கலி மரிக்கார் நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் கணபதி எஸ்.பொதுவால்,
வினீத் தட்டில் டேவிட், சரிதா குக்கு, அஸ்வதி ஸ்ரீகாந்த், குட்டி அகில், ஜாபர் இடுக்கி, லால் ஜோஸ், ஆலா எஸ் நயனா, அஜய் வாசுதேவ், ஜியோ பேபி, ஜூட் அந்தனி ஜோசப், ரெஸ்மி அனில், கினஸ் வினோத், பிரதீஷ் ஜேக்கப், பபிதா பஷீர், நஷித் நௌஷாத், பிரியா பிரகாஷ் வாரியர் என பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். மேலும் இந்தப் படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் பிபின் அசோக் இசையமைத்து இருந்தார். படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது போல பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

மந்தாகினி படத்தின் கதை என்ன?

நடிகர்கள் அல்தாஃப் சலீம் மற்றும் அனார்கலி மரிக்கார் இவர்களுக்கு திருமணம் நடைப்பெற்று மாப்பிள்ளை வீட்டிற்கு வருகிறார்கள். படம் அப்படி தொடங்கிய நிலையில் விஷேச வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் ஜாலியாக மது அருந்திவிட்டு கொண்டாடி வருகின்றனர்.

Also Read… பிக்பாஸில் வித்யாசமாக நடைபெறும் இந்த வார எவிக்‌ஷன்… கதறி அழுத சாண்ட்ரா – வைரலாகும் வீடியோ

இந்தநிலையில் எதிர்பாராதவிதமாக அனார்கலி மரிக்கார் மதுபானம் கலந்த ஜூஸ் ஒன்றை குடிக்கிறார். போதை தலைக்கு ஏறி அவரது முன்னாள் காதல் குறித்து புழம்புகிறார். அந்த காதலில் தனது காதலன் நகைகளை வாங்கிவிட்டு ஏமாற்றிவிட்டதாக தெரிவிக்கிறார்.

இதனைத் தொடர்ந்து அனார்கலி மரிக்கார் மாமியாரான சரிதா குக்கு தனது மருமகளை கூட்டிக்கொண்டு மகள் மற்றும் இரண்டு பெண்களுடன் ஜீப்பை எடுத்துக்கொண்டு அந்த காதலனைத் தேடி செல்கின்றனர். இதனைத் தொடர்ந்து என்ன நடந்தது என்பதே படத்தின் கதை. இந்தப் படம் தற்போது அமேசான் ப்ரைம் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

Also Read… பென்ஸ் படத்தின் ஷூட்டிங்கை முடித்த நிவின் பாலி – வைரலாகும் தகவல்

TRAI இன் புதிய 160 எண்.. இதன் சாராம்சம் என்ன?
திரிஷ்யம் 3 படம் இப்படி தான் இருக்கும்.. மனம் திறந்த ஜித்து ஜோசப்..
15,000 கி.மீ பயணித்த மாரிச் கழுகு
திறமையான வெளிநாட்டு தொழிலாளர்கள் தேவை... டிரம்ப்பின் முரணான பேச்சால் அமெரிக்கர்கள் அதிர்ச்சி