இந்த போட்டோவில் இருக்கும் சிறுமி யாருனு தெரியுதா? இவர் விஜய் டூ சூர்யா போன்ற நடிகர்களுடன் நடித்துள்ளார்?

South Indian Actress Childhood Picture: சமீபகாலமாக நடிகர்கள் மற்றும் நடிகைகளின் சிறுவயது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது. அந்த விதத்தில் இந்த புகைப்படத்தில் இருக்கும் சிறுமி யார் என தெரிகிறதா? இவர் தற்போது தளபதி விஜய் முதல் சூர்யா போன்ற நடிகர்களின் படங்களிலும் நடித்துள்ளார். இவர் யார் என்பது குறித்து தெளிவாக பார்க்கலாம்.

இந்த போட்டோவில் இருக்கும் சிறுமி யாருனு தெரியுதா? இவர் விஜய் டூ சூர்யா போன்ற நடிகர்களுடன் நடித்துள்ளார்?

நடிகையின் குழந்தைப் பருவ புகைப்படம்

Published: 

04 Jan 2026 17:15 PM

 IST

தென்னிந்திய சினிமாவில் (South Indian Cinema) தற்போது நடிகர்கள் மற்றும் நடிகைகளின் எண்ணிக்கையும் அதிகமாகியுள்ளது. இயக்குநராக  நுழைந்தவர்களும் கூட, தற்போது கதாநாயகனாகவே படங்களில் நடிக்க தொடங்கிவிட்டனர். அந்த வகையில் அவர்களின் அடையாளம் தெரியாத குழந்தை பருவ புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது. அவ்விதத்தில் மேலே இருக்கும் புகைப்படத்தில் உள்ள சிறுமி யார் தெரிகிறதா?. இவர் மலையாள சினிமாவின் மூலம் படங்களில் துணை வேடங்களில் நடித்து வந்தார். பின் பிரபல இயக்குநர் கிரிஷ் ஏ.டி (Girish A.D.). இயக்கத்தில் வெளியான படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். இப்படம் இவருக்கு தென்னிந்திய மக்களிடையே சிறப்பான வரவேற்பை கொடுத்திருந்தது. பின் தொடர்ந்து தமிழிலும் இவர் கதாநாயகியாக நடிக்க தொடங்கினார்.

அந்த விதத்தில் தமிழில் முதல் படத்தின் ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு (G.V.Prakash kumar) ஜோடியாக நடித்திருந்தார். இப்படம் அவருக்கு வரவேற்பை கொடுக்கவில்லை. இந்த் படத்தை அடுத்தாக அடுத்தடுத்து தொடர்ந்து தமிழில் புது படங்களும் நடிக்க தொடங்கிவிட்டார். தளபதி விஜய் (Thalapathy Vijay) முதல் சூர்யா (Suriya) போன்ற நடிகர்களின் படங்களிலும் நடித்துள்ளார். இப்போதாவது இந்த சிறுமி யார் என தெரிகிறதா?. இவர் வேறுயாருமில்லை நடிகை மமிதா பைஜூதான் (Mamitha Baiju).

இதையும் படிங்க: புறநானுறு படத்தில் விட்டதை சூர்யா 46ல் பிடித்த வெங்கி அட்லூரி.. கேமியோ வேடத்தில் இவரா?

நடிகை மமிதா பைஜூவின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் போட்டோஷூட் புகைப்பட பதிவு :


நடிகை மமிதா பைஜூவின் சினிமா நுழைவு :

நடிகை மமிதா பைஜூ கடந்த 2001ல் கேரளாவில் உள்ள கிடங்கூர் என்ற பகுதியில் பிறந்தார். சிறுவயதில் இருந்து நடிப்பின் மீது ஆர்வம் கொண்ட இவர், 2017ல் வெளியான சர்வோபரி பாலக்காரன் என்ற படத்தில் சிறிய வேடத்தில் நடித்து சினிமாவில் நுழைந்தார். இதை தொடர்ந்து ஹனி பீ, தாகினி, கிரிஷம், வரதம் ஸ்கூல் திரி போன்ற படங்களில் தொடர்ந்து நடிக்க தொடங்கினர். ஆரம்பகாலகட்டத்தில் சினிமாவில் துணை வேடங்களில் படங்களில் நடித்துவந்தார். இவருக்கு வெற்றியை கொடுத்த படம் சூப்பர் சரண்யா. இந்த படத்தின் வெற்றியை அடுத்ததாக பிரேமலு என்ற படத்தில் நடித்திருந்தார்.

இதையும் படிங்க:  கம்ருதீன்- பார்வதிக்கு ரெட் கார்ட் கிடைக்குமா? இணையத்தில் கொதிக்கும் முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர்கள்!

கடந்த 2024ல் வெளியான இப்படம் இவருக்கு தென்னிந்திய மக்களிடையே மிகவும் பிராபலத்தை கொடுத்தது. அதன்படி இவருக்கு தமிழில் முதல் படமாக அமைந்தது ரெபெல். இதில் ஜி.வி. பிரகாஷுக்கு ஜோடியாக நடித்தார். இதையடுத்து தமிழ் மக்களிடையே டியூட் என்ற படத்தில் நடித்து உச்ச நாயகியாக பிரபலமானார். இதை அடுத்ததாக தமிழில் மட்டுமே ஜன நாயகன், டி54, இரண்டு வானம் மற்றும் சூர்யா46 என தொடர்ந்து படங்களில் ஒப்பந்தமானார். தற்போது தென்னிந்திய இளம் நடிகையாக ரசிகர்களை கவர்ந்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

குங்குமம் இல்லாததால் தடைபட்ட திருமனம்... - சில நிமிடங்களில் டெலிவரி செய்த பிளிங்கிட் டெலிவரி உழியர்
அமேசான் காடுகளில் இருக்கும் கொட்டாத தேனீக்கள்.. ஏன் இது முக்கியத்துவம் வாய்த்ததாக உள்ளது?
போர்ச்சுகலில் ஹனிமூன் கொண்டாடும் சமந்தா – ராஜ் நிதிமோறு..
வ்ருஷபா படத்தின் 7 நாள் கலக்‌ஷன் எவ்வளவு தெரியுமா?