Mamitha Baiju: கர படத்தில் எனது செல்லி வேடம் இப்படிதான் இருக்கும் – மமிதா பைஜூ பேச்சு!
Mamitha Baiju About Selli Role In Kara Movie: தென்னிந்திய சினிமாவில் இளம் சென்சேஷனல் நடிகைகளில் ஒருவராக இருப்பவர்தான் மமிதா பைஜூ. இவர் தனுஷிற்கு ஜோடியாக கர என்ற படத்தில் இணைந்து நடித்துள்ளார். இப்படத்தில் அவர் செல்லி என்ற வேடத்தில் நடித்துள்ள நிலையில், அந்த கதாபாத்திரம் எவ்வாறு இருக்கும் என்பது குறித்து பேசியுள்ளார்.

மமிதா பைஜூ
நடிகை மமிதா பைஜூ (Mamitha Baiju) மலையாள சினிமாவின் மூலம் நடிகையாக நுழைந்திருந்தாலும், இவருக்கு தற்போது தமிழ் சினிமாவில் அதிகளவு வரவெப்பு கிடைத்துவருகிறது. இவரின் நடிப்பில் இதுவரை தமிழில் ஒரு படம் மட்டுமே வெளியாகியிருந்தாலும், மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தார். அந்த விதத்தில் இவர் தளபதி விஜய் (Thalapathy Vijay), தனுஷ் (Dhanush) மற்றும் சூர்யா போன்ற நடிகர்களுடனும் படங்களில் இணைந்து நடித்திருக்கிறார். அந்த வகையில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக இவர் நடித்துள்ள படம்தான் கர (Kara). இப்படத்தை இயக்குநர் விக்னேஷ் ராஜா (Vignesh Raja) இயக்கியிருக்கும் நிலையில், நடிகர் தனுஷ் ஆக்ஷன் நாயகனாக நடித்துள்ளார். இதில் நடிகர்கள் சுராஜ் வெஞ்சாரமூடு, ஜெயராம், கருணாஸ் மற்றும் கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
அந்த வகையில் இப்படத்தில் நடிகை மமிதா பைஜூ, தனுஷின் மனைவி “செல்லி” என்ற வேடத்தில் நடித்துள்ளார். அந்த வகையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய மமிதா பைஜூ, செல்லி கதாபாத்திரம் குறித்து பேசியுள்ளார்.
இதையும் படிங்க: நல்ல எதிர்காலத்திற்காக என் உரிமையும் கடமையும் நிறைவேற்றினேன் – நடிகர் சூரி
கர படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து பேசிய மமிதா பைஜூ:
அந்த நேர்காணலில் மமிதா பைஜூ பேசுகையில், “கர படத்தில் செல்லி கதாபாத்திரம் ஒரு கிராமத்து பெண் கதாபாத்திரம். நான் இதுவரையில் நடித்திருந்த கதாபாத்திரங்களை விடவும், கர படத்தில் செல்லி வேடம் முற்றிலும் வித்தியாசமாக இருக்கும் மற்றும் சிறப்பான வேடம். மிகவும் முக்கியமான கதாபாத்திரம். கர படத்திற்கு எனது செல்லி வேடம் மிகவும் முக்கியமான ஒன்றுதான். இந்த செல்லி கதாபாத்திரம் உண்மையானவள் மற்றும் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவள்” என அதில் அவர் தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க: தமிழகத்தில் ஜன நாயகக் கடமையை ஆற்றிய உச்ச நடிகர்கள்… யார் யார் என்று தெரியுமா?
கர திரைப்படம் குறித்து நடிகை மமிதா பைஜூ வெளியிட்ட எக்ஸ் பதிவு:
#KaraTrailer is here ✨
▶️ https://t.co/bY50BzjQy8#KaraFromApril30🤍
Directed by @vigneshraja89
Produced by @IshariKGanesh
A @gvprakash musical 🥁@dhanushkraja sir @VelsFilmIntl @velsmusicintl @kushmithaganesh @ThinkStudiosInd pic.twitter.com/AewRYljZrD— Mamitha Baiju (@_mamithabaiju) April 20, 2026
இந்த கர படமானது ஆக்ஷன் கதைக்களத்தில் தயாராகியுள்ளது. இதில் தனுஷ் திருடாக நடித்துள்ளார். இப்படமானது சுவாரஸ்ய திருப்பங்களுடன் அமைந்துள்ள நிலையில், வரும் 2026 ஏப்ரல் 30ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. அந்த வகையில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், வெற்றிப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.