Mamitha Baiju: விஜய் சார் மற்றும் சூர்யா சார் இருவரையும் ரொம்ப ரசிப்பேன்- மமிதா பைஜூ!
Mamitha Baiju About Thalapathy Vijay And Suriya: தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் கதாநாயகியாக நடித்து வருபவர் மமிதா பைஜூ. இவரின் நடிப்பில் டியூட் படமானது வெளியீட்டிற்கு காத்திருக்கிறது. இந்நிலையில், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இவர் விஜய் மற்றும் சூர்யா குறித்து பேசியுள்ளார்.

விஜய் மற்றும் சூர்யா பற்றி மமிதா பைஜு
கடந்த 2024 ஆம் ஆண்டில் வெளியான பிரேமலு (Premalu) என்ற படத்தின் மூலம் மக்களிடையே பிரபலமானவர் நடிகை மமிதா பைஜூ (Mamitha Baiju). இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகர் நஸ்லென் (Naslen) இணைந்து நடித்திருந்தார். காதல் மற்றும் மாறுபட்ட கதைக்களத்தில் வெளியான இப்படத்தை தொடர்ந்து மமிதா பைஜூவிற்கு தமிழ் ரசிகர்கள் அதிகமாகினர். அந்த வகையில், இவரின் நடிப்பில் விரைவில் வெளியீட்டிற்கு காத்திருக்கும் தமிழ் திரைப்படம் தான் டியூட் (Dude). நடிகர் பிரதீப் ரங்கநாதனின் (Pradeep Ranganathan) நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மமிதா பைஜூ நடித்துள்ளார். இந்த படம் வரும் 2025 அக்டோபர் 17ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது.
இந்நிலையில் சமீபத்தில் இப்படத்தின் புரோமோஷன் தொடர்பாக , தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மமிதா பைஜூவிடம் , நடிகர் நாகார்ஜுனா பல்வேறு கேள்விகளை கேட்டிருந்தார். அதற்கு விஜய் (Vijay), சூர்யா (Suriya) மற்றும் பிரதீப் ரங்கநாதன் உடன் நடித்த அனுபவம் பற்றி மமிதா பைஜூ பகிர்ந்திருந்தார்.
இதையும் படிங்க: ஷூட்டிங் ஆரம்பிக்கிற ஒரு வாரம் முன்னாடிதான் பைசன் கதை படிச்சேன் – நடிகர் துருவ் விக்ரம்
விஜய் மற்றும் சூர்யாவுடன் நடித்த அனுபவம் பற்றி பகிர்ந்த மமிதா பைஜூ :
தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மமிதா பைஜூவிடம், நடிகர் நாகார்ஜுனா “மமிதா நீங்க.. சூர்யா, பிரதீப் மற்றும் விஜய் போன்ற நடிகர்களுடன் நடித்திருக்கிறீர்கள். யாரோட வேலை செய்றது கஷ்டம்?” என கேள்வி கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த மமிதா பைஜூ, விஜய் சார் மற்றும் சூர்யா சார் இருவரையும் நான் மிகவும் ரசிப்பேன், ஆனால் அவங்க முன்னாடி கொஞ்சம் பதட்டமாக இருக்கும்.
இதையும் படிங்க: தீபாவளிக்கு படம் வருவதற்கு என்ன தகுதி வேண்டும்? எமோஷனலாக பேசிய ஹரிஷ் கல்யாண்!
அதன் காரணமாக அந்த படங்களின் ஷூட்டிங்கில் எப்போது அமைதியாகவே இருப்பேன். ஆனால் பிரதீப் ரங்கநாதனுடன் இருந்தால் மிகவும் ஜாலியாக இருக்கும். அவரோட ஷூட்டிங் ஸ்பாட்டில் நான், எப்போதுமே பேசிக்கிட்டே இருப்பேன்” என நடிகை மமிதா பைஜூ மேடையில் வெளிப்படையாக பேசியிருந்தார். இது தொடர்பான தகவல் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.
மமிதா பைஜூ வெளியிட்ட டியூட் திரைப்பட ட்ரெய்லர் பதிவு
#DudeTrailer out now ❤️🔥
Tamil
▶️ https://t.co/H0VOGHvqqXTelugu
▶️ https://t.co/nSdmzS3g00#Dude Grand Release on October 17th in Tamil & Telugu ✨#DUDEDiwali@pradeeponelife@Keerthiswaran_@MythriOfficial
@SaiAbhyankkar@realsarathkumar @iamnehashetty @hridhuharoon… pic.twitter.com/aeFsEUam1y— Mamitha Baiju (@_mamithabaiju) October 9, 2025
இந்த டியூட் திரைப்படத்தை அடுத்து நடிகை மமிதா பைஜூ, இரண்டு வானம், சூர்யா46, ஜன நாயகன், மற்றும் தனுஷின் டி54 என தொடர்ந்து தமிழ் திரைப்படங்களில் ஒப்பந்தமாகியிருந்தார். இதில் ஜன நாயகன் மற்றும் இரண்டு வானம் போன்ற திரைப்படங்களின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.