Vijay Sethupathi : விஜய் சேதுபதியின் மகாராஜா அமோக வெற்றி.. மீண்டும் இணையும் கூட்டணி?
Vijay Sethupathi And Nithilan Saminathans New Movie Update : நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பில் கடந்த 2024ம் ஆண்டு வெளியாகி எதிர்பாராத வரவேற்பைப் பெற்ற திரைப்படம் மகாராஜா. இப்படத்தை இயக்குநர் நித்திலன் சாமிநாதன் இயக்கியிருந்தார். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் இவர் விஜய் சேதுபதியுடன் புதிய படத்தில் இணைவதாகத் தகவல்கள் வெளியாகி வருகிறது.

கோலிவுட் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் விஜய் சேதுபதி (vijay Sethupathi). இவரின் முன்னணி நடிப்பில் பல படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் இறுதியாக வெளியான திரைப்படம் ஏஸ் (Ace). இந்த படத்தை இயக்குநர் ஆறுமுக குமார் (Arumuga Kumar) இயக்கியிருந்தார். இந்த படத்திற்கு முன் கடந்த 2024ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம்தான் மகாராஜா (Maharaja) . கடந்த 20024ம் ஆண்டு ஜூன் 14ம் தேதியில் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியிருந்தது. குறைந்த பட்ஜெட் திரைப்படமாக உருவாகியிருந்த இப்படமானது உலகளாவிய வசூலில் பல கோடிகளை வசூல் செய்து சாதனை படைத்திருந்தது. இந்த படத்தைத் தமிழ்த் திரைப்பட இயக்குநர் நித்திலன் சாமிநாதன் (Nithilan Saminathan) இயக்கியிருந்தார். இவர் இப்படத்திற்கு முன் கடந்த 2017ம் ஆண்டு வெளியாகியிருந்த குரங்கு பொம்மை என்ற படைத்த இயக்கியிருந்தார்.
இந்த படத்தைத் தொடர்ந்துதான் இந்த மகாராஜா படத்தை இயக்கியிருந்தார். இந்தப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் இயக்குநர் நித்திலன் சாமிநாதன் , விஜய் சேதுபதியுடன் புதிய படத்தில் இணையவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வருகிறது. இதைப் பற்றிய தகவல்கள் தினத்தந்தி இணையதளத்தில் பகிரப்பட்டுள்ளது.




நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்ட மகாராஜா படப் பதிவு :
View this post on Instagram
மகாராஜா திரைப்படத்தில் வெற்றி :
நடிகர் விஜய் சேதுபதியின் 50வது திரைப்படமாக இந்த மகாராஜா திரைப்படம் வெளியாகியிருந்தது. இந்த படத்தை இயக்குநர் நித்திலன் சாமிநாதன் இயக்க, திங் ஸ்டூடியோஸ் மற்றும் பேஷன் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்திருந்தது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் பி. அஜனீஷ் லோக்நாத் இசையமைத்திருந்தார். இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதியுடன் நடிகர்கள் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி சுப்ரமணியம், அபிராமி, திவ்யபாரதி, சிங்கம்புலி மற்றும் சாச்சனா நமிதாஸ் இணைந்து நடித்திருந்தனர்.
மீண்டும் இணையும் வெற்றிக் கூட்டணி?
இந்த படமானது அப்பா, மகளுக்காக நடத்தும் போராட்டம் என்ற மாறுபட்ட கதைக்களத்துடன் வெளியாகியிருந்தது. வெறும் ரூ 20 கோடி பட்ஜெட்டில் வெளியாகியிருந்த இப்படமானது சுமார் ரூ 190 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்திருந்தது. இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, மீண்டும் இப்படத்தின் இயக்குநர் நித்திலன் சாமிநாதனுடன் மீண்டும் ஒரு படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.
விஜய் சேதுபதியின் புதிய படங்கள் :
நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பில் ரிலீசிற்கு தலைவன் தலைவி, ட்ரெயின் போன்ற தமிழ்த் திரைப்படங்கள் உருவாகியிருக்கிறது. இதில் தலைவன் தலைவி படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கியுள்ளார். மேலும் ட்ரெயின் படத்தை இயக்குநர் மிஷ்கின் இயக்கியுள்ளார். இந்த இரு படங்களும் இறுதிக்கட்ட பணிகளிலிருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படங்களைத் தொடர்ந்து தெலுங்கு இயக்குநர் பூரி ஜெகநாத் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் மூலம் தெலுங்கில் கதாநாயகனாக களமிறங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.