Dhanush: தனுஷிற்கு ஜோடியாகும் லப்பர் பந்து பட நடிகை? – எந்த படம் தெரியும்?

D56 Movie Update: தனுஷ் தற்போது டி55 பட ஷூட்டிங்கில் இருக்கும் நிலையில், இதை முடித்த கையேடு தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் டி56 படத்தில் இணைகிறார். இதில் தனுஷிற்கு ஜோடியாக எந்த நடிகை நடிக்கிறார் என தகவல் கசிந்துள்ளது. அது குறித்து பார்க்கலாம்.

Dhanush: தனுஷிற்கு ஜோடியாகும் லப்பர் பந்து பட நடிகை? - எந்த படம் தெரியும்?

சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி மற்றும் தனுஹ்

Updated On: 

31 Mar 2026 19:46 PM

 IST

நடிகர் தனுஷின் (Dhanush) நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் தேரே இஷ்க் மே (Tere Ishq Mein). இந்த படமானது கடந்த 2025ம் ஆண்டு இறுதியில் வெளியாகியிருந்த நிலையில், கிட்டத்தட்ட ரூ 150 கோடிகளுக்கு மேல் வசூலித்து சாதனை படைத்திருந்தது. இந்த படத்தை அடுத்ததாக தனுஷ், இயக்குநர் விக்னேஷ் ராஜா (Vignesh Raja) இயக்கத்தில், கர (Kara) என்ற படத்தில்நடித்துவந்தார். இப்படம் 2026ம் ஆண்டில் தனுஷின் நடிப்பில் வெளியாகும் முதல் படமாக அமைந்துள்ளது. இந்த படத்தை அடுத்ததாக தற்போது அமரன் பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியின் (Rajkumar Periasamy) இயக்கத்தில், டி55 (D55) என்ற படத்தில் தனுஷ் நடித்துவருகிறார். இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக சாய் பல்லவி மற்றும் ஸ்ரீலீலா என இரு நடிகைகள் இணைந்து நடித்துவருகிறார்கள். இப்படத்தை அடுத்ததாக லப்பர் பந்து பட இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து (Tamizharasan Pachamuthu) இயக்கத்தில், டி56 (D56) படத்தில் தனுஷ் இணையவுள்ளார்.

முதலில் டி56 படத்தை மாரி செல்வராஜ் இயக்குவதாக கூறப்பட்ட நிலையில், தற்போது தமிழரசன் பச்சமுத்து இயக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த விதத்தில் இப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடிக்கும் நடிகை யாரை தெரியுமா?. லப்பர் பந்து படத்தில் நடித்த நடிகை சஞ்சனா கிருஷ்ணமூர்த்திதான். இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.

இதையும் படிங்க: ஏன் தமிழில் பேசவில்லை? கொஞ்சம் டைம் கொடுங்க – கயாடு லோஹர் சொன்ன பதில்!

தனுஷிற்கு ஜோடியாகும் நடிகை சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி:

நடிகை சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி தமிழில் உதவி இயக்குநராக சினிமாவில் பணியாற்றிவருகிறார். அந்த விதத்தில் இவர் கதாநாயகியாக நடித்துள்ள முதல் படம்தான் லப்பர் பந்து. 2024ம் ஆண்டில் வெளியான இப்படம் இவருக்கு சிறப்பான வரவேற்பை கொடுத்தது. இதையடுத்து தக் லைஃப் படத்தில் கமலின் மகளாக நடித்து அசத்தியிருந்தார்.

இதையும் படிங்க: பிசாசு 2 மற்றும் மனுஷி படங்களின் நிலை என்ன? நடிகை ஆண்ட்ரியா ஓபன் டாக்

மேலும் தற்போது டிசி படத்தின் முக்கிய வேடத்தில் நடித்துவருகிறார். அந்த வகையில் டி56 படத்தில் தனுஷிற்கு ஜோடியாக இவர் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகிவருகிறது. ஏற்கனவே தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் லப்பர் பந்து படத்தில் நடித்து இவர் வரவேற்கப்பட்டு நிலையில், மீண்டும் அவரின் இயக்கத்தில் படத்தில் நடிக்கவுள்ளார்.

தனுஷின் டி56 திரைப்படம் குறித்து இணையத்தில் வைரலாகிவரும் பதிவு:

தமிழரசன் பச்சமுத்து இந்த டி56 படத்தை இயக்கும் நிலையில், தனுஷுடன் உறியடி பட நடிகர் விஜய் குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறாராம். இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் எது, இப்படத்தின் இசையமைப்பாளர் யார் என இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us
தன்னை கடித்த பாம்பை தைரியமாக பிடித்த முதியவர்
கேர்ள் ஃபிரெண்டுடன் லூட்டி அடிக்கும் குரங்கு - வைரல் வீடியோ
தன் உயிரையும் பொருட்படுத்தாமல் நாயை காப்பாற்றிய பெண்.. இணையத்தில் வைரல்..
தாயின் பக்கெட் லிஸ்டை நிறைவேற்றிய மகன்... இணையத்தில் வைரல்..