அல்லு அர்ஜுன் படத்தை இயக்கும் லோகேஷ் கனகராஜ்… வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு
Lokesh Kanagaraj to direct Allu Arjun: தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இவர் தற்போது தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் அல்லு அர்ஜுனை இயக்குவது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

லோகேஷ் அல்லு அர்ஜூன் படம்
தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் அல்லு அர்ஜூன். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் நடிகர் அல்லு அர்ஜூன் தற்போது இயக்குநர் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார். சயின்ஸ் ஃபிக்ஷன் பாணியில் தயாராகும் இந்தப் படத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் உடன் இணைந்து நடிகர்கள் தீபிகா படுகோன், மிருணாள் தாக்கூர், ஜான்வி கபூர், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மிகவும் பிரமாண்டமான பட்ஜெட்டில் தயாராகி வரும் இந்தப் படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் சார்பாக தயாரிப்பாளர் கலாநிதி மாறன் தயாரித்து வருகிறார்.
இந்தப் படங்கள் இரண்டு பாகங்களாக உருவாகும் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ள நிலையில் நடிகர் அல்லு அர்ஜூன் அடுத்ததாக தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வரும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உடன் கூட்டணி வைப்பதாக கடந்த சில மாதங்களாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றது. இந்த நிலையில் இந்த கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.
அல்லு அர்ஜுன் படத்தை இயக்கும் லோகேஷ் கனகராஜ்:
இந்த நிலையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 7-வதாக உருவாகப் போகிற படத்தில் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக நடித்து வரும் நடிகர் அல்லு அர்ஜுன் நாயகனாக நடிக்க உள்ளார். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்க உள்ள நிலையில் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்டை தற்போது வெளியிட்டுள்ளது.
Also Read… ஜப்பானில் பிரமாண்டமாக ரிலீஸாக உள்ளது புஷ்பா 2 தி ரூல்… வைரலாகும் வீடியோ
படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
A Collaboration that will be Eternal in Indian Cinema 🤘🏻🔥💥
Icon Star @alluarjun X @Dir_Lokesh X @MythriOfficial X @anirudhofficial
STRIVE FOR GREATNESS🔥
Shoot begins in 2026 💥#AALoki #AA23 #LK7 pic.twitter.com/op2vnureqp
— Mythri Movie Makers (@MythriOfficial) January 14, 2026
Also Read… காந்தி டால்க்ஸ் படத்திலிருந்து வெளியானது மிளிரும் ஒளியே பாடலின் வீடியோ!