Lokesh Kanagaraj : முதல் பாதியைக் கேட்ட பிறகு, கூலியில் ரஜினி நடிக்க முடிவு செய்தாரா? லோகேஷ் கனகராஜ் விளக்கம்!

Lokesh Kanagaraj About Rajinikanth : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் கூலி. இந்த படமானது வரும் 2025, ஆகஸ்ட் 14ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பதற்கு எவ்வாறு ஒத்துக்கொண்டார் என்பதைப் பற்றி விளக்கமாகப் பேசியுள்ளார்.

Lokesh Kanagaraj : முதல் பாதியைக் கேட்ட பிறகு, கூலியில் ரஜினி நடிக்க முடிவு செய்தாரா? லோகேஷ் கனகராஜ் விளக்கம்!

லோகேஷ் கனகராஜ் மற்றும் ரஜினிகாந்த்

Published: 

18 Jul 2025 20:40 PM

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் (Rajinikanth) முன்னணி நடிப்பில் தமிழ் சினிமாவில் இதுவரை சுமார் 170வது திரைப்படங்கள் வெளியாகியுள்ளது. இந்த படங்களை அடுத்ததாக 171வது திரைப்படமாக ரிலீசிற்கு காத்திருக்கும் திரைப்படம் கூலி (Coolie). இந்த படத்தைத் தென்னிந்தியப் பிரபல இயக்குநர்களில் ஒருவரான லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj)இயக்கியுள்ளார். இவரின் இயக்கத்தில் ரஜினிகாந்த் இணையும் முதல் திரைப்படமாகும். இந்த படத்தை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, அனிருத் ரவிச்சந்தர் (Anirudh Ravichander) இசையமைத்துள்ளார். மேலும் இப்படத்தில் ஸ்ருதி ஹாசன், சத்யராஜ், நாகார்ஜுனா மற்றும் அமீர்கான் (Aamir Khan) உட்பட பல்வேறு பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த படமானது வரும் 2025, ஆகஸ்ட் 14ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட இயக்குநர் லோகேஷ் கனகராஜ், கூலி படத்தில் ரஜினிகாந்த் நடிப்பதற்கு எவ்வாறு முடிவு செய்தார் என்பதைப் பற்றி விளக்கம் கொடுத்துள்ளார்.

இதையும் படிங்க : கூலி படத்தின் 3வது பாடல் எப்போது? படக்குழு கொடுத்த சூப்பர் அப்டேட்!

ரஜினிகாந்த முடிவு பற்றி லோகேஷ் கனகராஜ் பேச்சு :

அந்த நேர்காணலில் பேசிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ், “ரஜினிகாந்த் சார் இந்த படத்தில் நடிப்பதற்குச் சரி என்று சொல்வார் என நான் நினைக்கவேயில்லை. நான் அவருக்கு இப்படத்தின் முதல் பாதியை மட்டுமே கூறியிருந்தேன். அப்போது அந்த கதையைக் கூறும்போது இடையில் நிறுத்திவிட்டு, இன்னும் கேட்கவிரும்புகிறீர்களா என அவரிடம் கேட்டேன். அதற்கு ரஜினி சார் உடனே சரி என்று கூறினார். அப்போது நான் இந்தப் படத்தின் இரண்டாம் பாதியை எழுதவில்லை. பின் 2 மாதங்களுக்குப் பின் முழு ஸ்கிரிப்டையும் எழுதிய பிறகும், மீண்டும் அவரை சந்தித்தேன், அந்த கதையை முழுமையாகக் கூறினேன். அவருக்கும் கதை மிகவும் பிடித்திருந்தது எனக் கூறினார்” என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அந்த நேர்காணலில் பேசியிருந்தார்.

இதையும் படிங்க : மீண்டும் ‘ப்ரீடம்’ படத்தின் ரிலீஸ் ஒத்திவைப்பு.. சோகத்தில் ரசிகர்கள்!

கூலி படத்தின் இந்தி ரிலீஸ் உரிமை நிறுவனம் அறிவிப்பு :

நடிகர் ரஜினிகாந்த்தின் இந்த கூலி படமானது தமிழில், மலையாளம், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் மற்ற மொழி ரிலீஸ் உரிமை விற்கப்பட்ட நிலையில், இந்தி ரிலீஸ் உரிமை மற்றும் விநியோகம் செய்யப்படாமல் இருந்தது. இந்நிலையில், தற்போது அந்த உரிமையை “பென் மருதர்” என்றார் தயாரிப்பு நிறுவனம் பெற்றுள்ளது. இந்த உரிமையை சுமார் ரூ. 25 கோடிகளுக்கு வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த கூலி படமானது வரும் 2025, ஆகஸ்ட் 14ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.