Lokesh Kanagaraj : லோகி இஸ் பேக்… மீண்டும் சோஷியல் மீடியாவில் நுழைந்த லோகேஷ் கனகராஜ்!
Lokesh Kanagaraj Returns To Social Media : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சமீப காலமாக சோஷியல் மீடியாவில் இருந்து விளக்கியிருந்தார். சில மாதங்களாக எந்த சோஷியல் மீடியாவிலும் ஆக்டிவாக இல்லாத நிலையில், தற்போது மீண்டும் சோஷியல் மீடியாவில் நுழைந்துள்ளார். ரஜினிகாந்த்தின் கூலி படத்தின் ப்ரோமோஷனுக்காக அவர் சமூக ஊடகங்களை மீண்டும் பயன்படுத்த தொடங்கியிருக்கிறார்.

லோகேஷ் கனகராஜ்
சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருந்து வருபவர் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj). இவரின் இயக்கத்தில் தமிழில் பல படங்கள் வெளியாகியிருக்கிறது. இவரின் இயக்கத்தில் அந்த இந்திய திரைப்படமாக உருவாகியிருப்பது கூலி (Coolie). நடிகர் ரஜினிகாந்த்தின் (Rajinikanth) முன்னணி நடிப்பில் உருவாகியிருக்கும் இப்படமானது வரும் 2025, ஆகஸ்ட் 14ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் புரோமோஷன் பணிகள் தொடங்கியிருக்கும் நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மீண்டும் சமூக ஊடகத்தில் நுழைந்துள்ளார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் சமூக ஊடகங்களில் இருந்து வெளியேறவுள்ளதாகவும், ஊடங்களின் (Social media) மூலம் தான் மிகவும் சோர்வாக உணர்வதாகவும் பேசியிருந்தார்.
அதைத் தொடர்ந்து ஊடகங்களிலிருந்து பல மாதங்களாக விலகியிருந்த லோகேஷ் கனகராஜ், தற்போது மீண்டும் சோஷியல் மீடியாவில் நுழைந்துள்ளார். அவர் கூலி திரைப்படத்தின் ப்ரோமோஷன் (Coolie promotions) பணிகளுக்காக மீண்டும் வந்திருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், தற்போது அவர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவு ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க : விஜய் சேதுபதியின் ‘தலைவன் தலைவி’… இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா?
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட எக்ஸ் பதிவு :
Back to where all the learning began❤️❤️
PSG CAS again! #Coolie promotions 🤗❤️ pic.twitter.com/s2IPWM3S8s
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) July 28, 2025
அந்த பதிவில், லோகேஷ் கனகராஜ், கற்ற இடதிற்கே மீண்டும் திரும்புகிறேன் என்று. தான் படித்த கல்லூரிக்கு கூலி திரைப்படத்தின் ப்ரோமோஷனுக்காக சென்றது குறித்து அதில் அவர் எழுதியுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க : ரெட்ரோ நாயகனாக துல்கர் சல்மான்.. வெளியானது காந்தா திரைப்படத்தின் டீசர்!
லோகேஷ் கனகராஜின் கூலி திரைப்படம் :
லோகேஷ் கனகராஜின் இயக்கதில் லியோ படத்திற்குப் பின் உருவாகியிருக்கும் படம் கூலி. இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நாயகனாக நடிக்க , அவருடன் நடிகர்கள் அமீர்கான், நாகார்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா மற்றும் ஸ்ருதி ஹாசன் என பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படமானது முற்றிலும் கடத்தல் மற்றும் கேங்ஸ்டர்ஸ் போன்ற கதைக்களத்துடன் உருவாகியுள்ளதாம். இந்த படத்தில் நடிகை பூஜா ஹெக்டே, மோனிகா என்ற பாடலுக்குச் சிறப்பு நடனமாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படமானது வரும் 2025 ஆகஸ்ட் 14ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா வரும் 2025, ஆகஸ்ட் 2ம் தேதியில் சென்னியில் நடைபெறவுள்ளது. இப்படத்தின் வெளியீட்டிற்கு நாட்கள் நெருங்கும் நிலையில், புரோமோஷன் பணிகளும் தீவிரமாகத் தொடங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.