இண்டர்ஸ்டியல் ஹிட் அடித்த லோகா சாப்டர் 1 சந்திரா – எத்தனை கோடிகள் வசூல் தெரியுமா?

Lokah Chapter 1 Chandra : மலையாள சினிமாவில் சூப்பர் ஹீரோ படமாக வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் லோகா சாப்டர் 1 சந்திரா. இந்தப் படம் தற்போது மலையாள சினிமாவில் அதிக வசூல் செய்த படங்களின் பட்டியளில் முதலிடத்தைப் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இண்டர்ஸ்டியல் ஹிட் அடித்த லோகா சாப்டர் 1 சந்திரா - எத்தனை கோடிகள் வசூல் தெரியுமா?

லோகா சாப்டர் 1 சந்திரா

Published: 

23 Sep 2025 11:29 AM

 IST

மலையாள சினிமாவில் கடந்த 28-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் லோகா சாப்டர் 1 சந்திரா (Lokah Chapter 1: Chandra). இந்தப் படத்தை இயக்குநர் அருண் டாம்னிக் எழுதி இயக்கி இருந்தார். இவருடன் இணைந்து சந்தியா பாலசந்திரனும் இணைந்து லோகா சாப்டர் 1 படத்திற்கு திரைக்கதை எழுதி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் முழுக்க முழுக்க சூப்பர் ஹீரோ கதையை மையமாக வைத்து உருவாகி உலக அளவில் உள்ள ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. வெறும் ரூபாய் 30 கோடி பட்ஜெட்டில் உருவாகி தற்போது இந்தப் படம் வசூலில் சாதனைப் படைத்து வருவது ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்தப் படத்தை நடிகரும் தயாரிப்பாளருமான துல்கர் சல்மான் இந்தப் படத்தை தயாரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தப் படத்தில் நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நாயகியாக நடித்து இருந்தார். இந்த முதல் பாகத்தில் அவருக்குதான் சூப்பர் ஹீரோ பவர் இருக்கும். மேலும் இந்தப் படத்தில் நடிகை கல்யாணி பிரியதர்ஷன் உடன் இணைந்து நடிகர்கள் நஸ்லேன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, அருண் குரியன், சந்து சலிம் குமார் ஆகியோர் முன்னணி வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் இவர்களுடன் இணைந்து அடுத்தடுத்தப் பாகங்களில் நடிக்க உள்ளவர்களும் இந்தப் படத்தில் காட்சியளித்தனர். அதன்படி நடிகர்கள் டொவினோ தாமஸ், துல்கர் சல்மான் மற்றும் சௌபின் ஷாகிர் ஆகியோர் காட்சிப்படுத்தப்பட்டன. மூத்தோன் என்ற கதாப்பாத்திரத்தில் வாய்ஸ் ஓவர் மட்டும் நடிகர் மம்முட்டி கொடுத்து இருந்தார்.

உலக அளவில் ரூபாய் 275 கோடிகளுக்கு மேல் வசூலித்தது லோகா படம்:

இந்த நிலையில் மலையாள சினிமாவில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்ற லோகா சாப்டர் 1 சந்திரா படம் தற்போது உலக அளவில் ரூபாய் 275 கோடிகளுக்கு மேல் வசூலித்துள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான வேஃபரர் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. மேலும் இந்தப் படம் இண்டர்ஸ்டியல் ஹிட்டாக அமைந்துள்ளது என்றும் மலையாள சினிமாவில் அதிக வசூலைப் பெற்றப் படம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… கட்டிப்புடி கட்டிப்புடி டா பாடல் இப்படிதான் உருவாச்சு – எஸ்.ஜே.சூர்யா சொன்ன சுவாரஸ்ய சம்பவம்

லோகா படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… குக் வித் கோமாளி 6 நிகழ்ச்சியின் ஃபனலிஸ்ட் இவர்கள் தான் – வெற்றி பெறப்போவது யார்?