Vijay Sethupathi: ஒன்னு ரெண்டு இல்ல.. விஜய் சேதுபதியின் கைவசம் உள்ள படங்கள் இத்தனையா?
Vijay Sethupathis Upcoming Films : தென்னிந்திய சினிமாவில் தற்போது சிறந்த நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் விஜய் சேதுபதி. இவரின் நடிப்பில் தொடர்ந்து புதிய திரைப்படங்கள் தயாராகிவரும் நிலையில், எந்தெந்த இயக்குநர்கள் இயக்குகிறார்கள், எப்போது வெளியாகும் என்பது குறித்த விவரங்களை பார்க்கலாம்.

விஜய் சேதுபதி
நடிகர் விஜய் சேதுபதியின் (Vijay Sethupathi) நடிப்பில் ஒரு ஆண்டில் கிட்டத்தட்ட 2 படங்களுக்கும் குறையாமல் வெளியாகிவரும். அந்த வகையில் இவரின் நடிப்பில் தொடர்ந்து புது திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. இவரின் நடிப்பில் கடந்த 2025ம் ஆண்டில் ஏஸ் (Ace) மற்றும் தலைவன் தலைவி (Thalaivan Thalaivi) போன்ற திரைப்படங்கள் வெளியாகியிருக்கிறது. அதில் தலைவன் தலைவி படமானது விஜய் சேதுபதிக்கு எதிர்பார்க்காத வரவேற்பைக் கொடுத்திருந்தது. இந்த படத்தை அடுத்ததாக இவரின் நடிப்பில் தொடர்ந்து புது படங்கள் தயாராகிவருகிறது. அந்த விதத்தில் இவர் தற்போது இயக்குநர் தியாகராஜன் குமாரராஜாவின் (Thiagarajan Kumararaja) இயக்கத்தில், “பாக்கெட் நாவல்” (Pocket Novel) படத்தில் நடித்துவருகிறார். இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் நடித்துவருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் சமீபத்தில் தொடங்கிய நிலையில், மிக பிரம்மாண்டமாக நடைபெற்றுவருகிறது.
இந்த படங்களை தொடர்ந்து விஜய் சேதுபதி, “முத்து என்கிற காட்டான்” என்ற வெப் தொடரிலும் கதாநாயகனாக நடித்துள்ளார். இது வரும் 2026 மார்ச் 27ம் தேதியில் வெளியாக காத்திருக்கிறது. அந்த வகையில் விஜய் சேதுபதியின் நடிப்பில் உருவாகும் புது படங்கள் என்னென்ன என்பது பற்றி பார்க்கலாம்.
இதையும் படிங்க: லோகேஷ் கனகராஜ் பர்த்டே ஸ்பெஷல்… போஸ்டரை வெளியிட்ட டிசி படக்குழு!
நடிகர் விஜய் சேதுபதியை புதிய திரைப்படங்கள் லிஸ்ட் :
நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பில் ஏற்கனவே ட்ரெயின் மற்றும் ஸ்லம்டாக் போன்ற திரைப்படங்கள் தயாராகியுள்ள நிலையில், இன்னும் வெளியாகாவில்லை. இதையடுத்து இவர் இயக்குநர் பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் ஒரு படம், தியாராகாரன் குமாரராஜா இயக்கத்தில் பாக்கெட் நாவல் படம், மணிரத்னம் இயக்கத்தில் புது படம், வெற்றிமாறன் இயக்கத்தில் அரசன் திரைப்படம் மற்றும் நெல்சன் திலீப்குமார் இயக்கட்டத்தில் ஜெயிலர் 2 போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரின் நடிப்பில் கிட்டத்தட்ட 10 திரைப்படங்கள் தயாராகிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து மேலும் சில படங்களின் கதையை கேட்டுவருவதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: தனுஷ் சாரின் பிக் ஃபேன்.. நேரில் பார்க்கும்போது ரொம்ப பயமாக இருக்கு – அனிஷிமா அனில்குமார்!
தனது புதிய படங்கள் குறித்து விஜய் சேதுபதி பேசிய வீடியோ பதிவு:
#VijaySethupathi PEAK Line-up
– Balaji Tharaneetharan
– Mysskin
– Thiagarajan Kumararaja
– Puri Jagannadh
– Mani Ratnam
– Nelson, In #Jailer2 i have only one day of work.
– Vetrimaaran’s Arasanpic.twitter.com/8S3oVa6V5m— Movie Tamil (@_MovieTamil) March 13, 2026
நடிகர் விஜய் சேதுபதி, தனுஷிற்கு நிகராக தொடர்ந்து படங்களை வரிசைப்படுத்திவருகிறார். தனுஷும் தொடர்ந்து புது பது படங்களில் ஒப்பந்தமாகி நடித்துவரும் நிலையில், அதே பாணியை விஜய் சேதுபதியும் செய்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.