டாப் 5 டிஆர்பி ரேட்டிங்.. 5ல் ஒரு இடத்தை பிடித்த விஜய் டிவி சீரியல்… எந்த தொடர் தெரியுமா?
Top 5 TRP Rating Tamil Serials: தமிழ் மக்கள் மத்தியில், சினிமா பிரபலத்தை போலவே, சீரியல்கள் மிகவும் பிரபலம். அந்த வகையில் இந்த வாரத்தில் தமிழில் டாப் 5 டிஆர்பி ரேட்டிங் இடத்தை பிடித்த சீரியல்கள், விஜய் டிவியில் எந்த ரீரியால் டாப் 5ல் உள்ளது என்பது பற்றி பார்க்கலாம்.

தமிழ் தொடர்கள்
பொதுவாக தமிழ் தொலைக்காட்சிகளை பொறுத்தவரையில் சீரியல்கள் என்றாலே மக்களுக்கு முதலில் நியாபகம் வருவது சன் தொலைக்காட்சிதான் (Sun TV). அந்த வகையில் இந்த தொலைக்காட்சியில் கிட்டத்தட்ட பல சீரியல்கள் வெளியாகிவருகிறது. அந்த வகையில் எப்போதும் டிஆர்பி ரேட்டிங்கிலும் இந்த தொலைக்காட்சி சீரியல்கள்தான் டாப் 5 இடத்தில் இருக்கும். அந்த வகையில் இந்த தொலைக்காட்சியில் வெளியாகி மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல்கள் பல இருக்கிறது. அந்த வகையில் 2026ம் ஆண்டு ஏப்ரல் இறுதி வாரத்தில், தமிழில் டிஆர்பி டாப் 5 (Top % TRP Rating) இடத்தை பிடித்த சீரியல் எது?, அதில் விஜய் டிவியில் (Vijay TV) எந்த சீரியல், எந்த இடத்தை பெற்றுள்ளது என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
அந்த வகையில் தமிழில் டாப் 5 இடங்களில், அதிக டிஆர்பி பெற்று, சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மூன்று முடிச்சி (Moondru Mudichu) என்ற சீரியலானது முதல் இடத்தில் உள்ளது. கிட்டத்தட்ட 1 மணி நேரத்திற்கும் மேல் ஒளிபரப்பாகும் இந்த சீரியல், 8.59 டிஆர்பி ரேட்டிங் பெற்று முன்னிலையில் உள்ளது.
இதையும் படிங்க: மின்னல் முரளி 2 எடுப்பது குறித்து இப்போதைக்கு ஐடியா இல்லை – பேசில் ஜோசப்
டாப் 5 டிஆர்பி ரேட்டிங்கை பெற்ற தமிழ் சீரியல்கள் :
இந்த லிஸ்டில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும், மூன்று முடிச்சி என்ற சீரியல் முதலீடாது. உள்ளது. இரண்டாவது இடத்தில், சிங்கப்பெண்ணே என்ற சீரியல் உள்ளது. மேலும் மூன்றாவது இடத்தில் சைத்ரா ரெட்டி நடித்துவரும் கயல் சீரியல் உள்ளது. இந்த வரிசையில் விஜய் தொலைக்காட்சியில் வெளியாகிவரும் அய்யனார் துணை சீரியல் 4வது இடத்தில் உள்ளது.
இதையும் படிங்க: லண்டனுக்கு டூர் சென்ற அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா – அழகிய போட்டோஸ் இதோ!
மேலும் 5வது இடத்தில் கேப்ரியலா நடித்துவரும் மருமகள் என்ற சீரியல் உள்ளது. அந்த வகையில் டாப் 5 இடங்களில், நான்கு இடங்களை சன் தொலைக்காட்சி பெற்றுள்ள நிலையில், ஒரே ஒரு இடத்தை மட்டுமே விஜய் தொலைக்காட்சி பெற்றுள்ளது.
டாப் 5 சீரியல்கள் டிஆர்பி ரேட்டிங் லிஸ்ட் :
- மூன்று முடிச்சு சீரியல் – 8.59 டிஆர்பி
- சிங்கப்பெண்ணே சீரியல் – 7.66 டிஆர்பி
- கயல் சீரியல் – 7.31 டிஆர்பி
- அய்யனார் துணை சீரியல் – 6.79 டிஆர்பி
- மருமகள் சீரியல் – 6.62 டிஆர்பி.
மூன்று முடிச்சு சீரியல் ப்ரோமோ பதிவு:
என டாப் 5 இடங்களில் 4 இடங்களை பிடித்து சன் தொலைக்காட்சி வழக்கம்போல முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் எப்போதும் டாப் 5 இடத்தில் கயல், சிங்கப்பெண்ணே மற்றும் மூன்று முடிச்சி போன்ற சீரியல்கள் இருந்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது