எதிர்பார்க்காத கூட்டணி… ரஜினிகாந்த்தின் நடிப்பில் உருவாகும் படங்கள் என்னென்ன தெரியுமா?

Rajinikanths New Movies: தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என பான் இந்திய பிரபலமான நடிகராக இருப்பவர் ரஜினிகாந்த். இவரின் நடிப்பில் தொடர்ந்து தமிழ் சினிமாவில் படங்கள் உருவாகிவரும் நிலையில், இவரின் கைவசம் உள்ள புதிய படங்கள் என்னென்ன, அதன் இயக்குநர்கள் யார் என்பது பற்றி பார்க்கலாம்.

எதிர்பார்க்காத கூட்டணி... ரஜினிகாந்த்தின் நடிப்பில் உருவாகும் படங்கள் என்னென்ன தெரியுமா?

ரஜினிகாந்த்

Published: 

07 Nov 2025 12:30 PM

 IST

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நாயகனாக இருந்துவருபவர் ரஜினிகாந்த் (Rajinikanth). இவர் இந்த வருடத்துடன் சினிமாவில் சுமார் 50 வருடங்களை கடந்துள்ளார். இவரின் நடிப்பில் இதுவரை சுமார் 171 திரைப்படங்கள் வெளியாகியிருக்கும் நிலையில், தற்போது வரையிலும் சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை கொடுத்துவருகிறார். இவரின் நடிப்பில் தமிழில் இறுதியாக வெளியான திரைப்படம் கூலி (Coolie). லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) இயக்கத்தில் ரஜினி, நாகார்ஜுனா (Nagarjuna), உபேந்திரா, சத்யராஜ் உட்பட பல்வேறு பிரபலங்கள் இதில் இணைந்து நடித்திருந்தனர். இதில் நடிகை ஸ்ருதி ஹாசன் ரஜினியின் மகளாக நடித்திருந்தார். இந்த படமானது ரஜினிக்கும் கலவையான விமர்சனங்களையே கொடுத்திருந்தது.

ஆனால் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் சுமார் ரூ 400 கோடிக்கும் மேல் கலெக்ஷன் செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இந்த படத்தை அடுத்ததாக ஜெயிலர் 2 (Jailer 2) படத்தில் நடித்துவருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங்கும் நிறைவடையும் தருவாயில் உள்ள நிலையில் ரஜினியின் கைவசம் உள்ள படங்கள் என்னென்ன என விவரமாக பார்க்கலாம்.

இதையும் படிங்க: ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்தை நிராகரித்த பிரபல நடிகர்? வைரலாகும் தகவல்

நெல்சன் திலீப்குமார் மற்றும் ரஜினிகாந்த் கூட்டணி

கடந்த 2023ம் ஆண்டு வெளியான படம் ஜெயிலர். இப்படத்தின் மூலமாகத்தான் முதல் முறையாக ரஜினி மற்றும் நெல்சன் கூட்டணி இணைந்திருந்தது. இந்த படத்தின் வெற்றியை அடுத்ததாக, இப்படத்தின் தொடர்ச்சியாக உருவாகிவருவதுதான் ஜெயிலர் 2. இதில் ரஜினியுடன் ஜெயிலர் படத்தில் நடித்த பலரும் நடிக்கும் நிலையில், கூடுதலாக தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவும் நடிப்பதாக கூறப்படுகிறது. இப்படம் வரும் 2026 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தலைவன் தலைவி சூப்பர் ஹிட்.. பாண்டிராஜின் அடுத்த படத்தின் ஹீரோ இவர்தானா?

சுந்தர் சி மற்றும் ரஜினிகாந்த் கூட்டணி

சுந்தர் சி மற்றும் ரஜினிகாந்த் கூட்டணி ஏற்கனவே அருணாச்சலம் என்ற படத்தில் இணைந்திருக்கிறது. அந்த படத்தை அடுத்ததாக கிட்டத்தட்ட 28 வருடங்களுக்கு பின் இந்த கூட்டணி புதிய படத்திற்காக மீண்டும் இணைந்துள்ளது. இந்த படம் தற்காலிகமாக தலைவர்173 என அழைக்கப்பட்டுவருகிறது. இதை நடிகரும், தயாரிப்பாளருமான கமல்ஹாசன் தயாரிக்கவுள்ளார். இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் சமீபத்தில் வெளியாகியிருந்தது.

கமல்ஹாசன் வெளியிட்ட தலைவர்173 படம் பற்றிய அறிவிப்பு

ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் கூட்டணி

இந்த தலைவர் 173 படத்திற்கு பின், நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இணைந்து நடிக்கவுள்ளார்கள். இந்த படத்தை நெல்சன் திலீப்குமார்த்தான் இயக்கவுள்ளார் என கூறப்படுகிறது. இது தொடர்பான கதையை ஜெயிலர் 2 ஷூட்டிங்கில் இவர் ரஜினியிடம் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒருவேளை இது உண்மையானால் விரைவில் இது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் என்பது குறிப்பிடத்தத்க்கது.

Related Stories
தரமாக தயாராகும் SK26.. வெங்கட் பிரபுவின் பர்த்டே பார்டியில் கலந்துகொண்ட சிவகார்த்திகேயன்.. வைரலாகும் வீடியோ!
Retta Thala Movie: பிரதீப் ரங்கநாதனுடன் மோதும் அருண் விஜய்.. ‘ரெட்ட தல’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!
Gauri G Kishan: யூடியூப்பரை எதிர்த்து கௌரி ஜி கிஷனின் தைரியமான பதில்.. ஆதரவு தெரிவித்த குஷ்பு – சின்மயி!
அமித் – FJ-க்கும் இடையே வெடிக்கும் பிரச்னை.. மண்டியிட்டு மன்னிப்பு கேட்டே பிரஜின்.. வைரலாகும் ப்ரோமோ!
Andrea Jeremiah: ‘மாஸ்க்’ படத்தில் கதாபாத்திரங்கள் இப்படித்தான் அமைந்திருக்கும்.. ஆண்ட்ரியா ஓபன் டாக்!
The Girlfriend: யார் உங்களுக்கானவர்? ராஷ்மிகா மந்தனாவின் தி கேர்ள்ஃபிரண்ட் பட விமர்சனங்கள் இதோ!