OTT Release: இந்த வீக் எண்டில் ஓடிடியில் குவியும் திரைப்படங்கள்.. எந்த படத்தை நீங்கள் பார்க்கப்போறிங்க?

Friday OTT Releases: தென்னிந்திய சினிமாவில் தொடர்ந்து புது புது திரைப்படங்கள் குவிந்துவரும் நிலையில், திரையரங்க ரிலீஸை தொடர்ந்து சில வாரங்களில் ஓடிடியில் வெளியாகிவிடுகிறது. அந்த வகையில் இந்த வாரத்தில் மேட் இன் கொரியா முதல் பூக்கி வரை ஓடிடியில் வெளியாகும் படங்களின் லிஸ்ட் குறித்து பார்க்கலாம்.

OTT Release: இந்த வீக் எண்டில் ஓடிடியில் குவியும் திரைப்படங்கள்.. எந்த படத்தை நீங்கள் பார்க்கப்போறிங்க?

மேட் இன் கொரியா, ஃபங்கி மற்றும் பூக்கி

Updated On: 

13 Mar 2026 12:59 PM

 IST

மேட் இன் கொரியா திரைப்படம் (Made In Korea Movie): நடிகை பிரியங்கா மோகனின் (Priyanka Mohan) நடிப்பிலும், நெட்பிளிக்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் தயாரான படம்தான் “மேட் இன் கொரியா“. இதை நித்தம் ஒரு வானம் படத்தின் இயக்குநர் ரா. கார்த்திக் (Ra. Karthik) இயக்கியுள்ள நிலையில், முற்றிழும் வித்தியாசமான கதையில் தயாராகியுள்ளது. இதில் பிரியங்கா மோகன் லீட் கதாநாயகியாக நடித்துள்ள நிலையில், அவருடன் முக்கிய வேடத்தில் இரு கொரியா நடிகர்களும் இணைந்து நடித்துள்ளனர். இப்படமானது சிறுவயதிலிருந்து கொரியா செல்ல துடிக்கும் பெண்ணின் கதையை மையமாக கொண்டு இயக்கப்பட்டுள்ளது.

இதன் ட்ரெய்லர் மற்றும் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இப்படம்தான் இந்தியாவிலே முதல் கொரியா மற்றும் இந்திய கலாச்சாரம் இணைந்து உருவாக்கப்பட்ட படம் என கூறப்படுகிறது. இப்படம் கடந்த 2026 மார்ச் 12ம் தேதி முதல் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் இந்திய மொழிகளில் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: தண்ணீருக்காக தவிக்கும் கிராமம்.. யோகி பாபுவின் கெணத்த காணோம் படம் எப்படி இருக்கு? – விமர்சனங்கள் இதோ!

பூக்கி திரைப்படம் (Pookie):

நடிகர் விஜய் ஆண்டனியின் தயாரிப்பில், இயக்குநர் கணேஷ் சந்திரா இயக்கியிருந்த படம்தான் பூக்கி. இதில் அறிமுக கதாநாயகன் அஜய் திஷன் நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை தனுஷா நடித்திருந்தார். இப்படமானது இளம் காதலர்கள் தங்களின் காதல் பிரிவிற்காக பல பிளானை செய்கிறார்கள். கடைசியில் அவர்களின் காதல் புரிந்ததா? அல்லது சேர்ந்ததா? என்பதே படத்தின் கதை. இப்படமானது 2026 மார்ச் 13ம் தேதி முதல் ஜீ5 ஓடிடியில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியாகிறது.

கப்புள் பிரெண்ட்லீ திரைப்படம் (Couple Friendly Movie):

தெலுங்கு நடிகர் சந்தோஷ் சோபன் மற்றும் மனசா வாரணாசி நடிப்பில் கடந்த 2026 பிப்ரவரி 14ம் தேதியில் வெளியான படம்தான் கப்புள் பிரெண்ட்லீ. இப்படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், இன்று 2026 மார்ச் 13ம் தேதி முதல் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகிறது.

இதையும் படிங்க: மடோனா செபஸ்டியன் மற்றும் நிதி அமைச்சரின் மகள் நடித்த ஹார்ட்டின் பட டீசர் வெளியானது!

ஃபங்கி திரைப்படம் (Funky) :

தெலுங்கு நடிகர் விஷ்வாக் சென் மற்றும் கயாடு லோஹர் நடிப்பில் முற்றிலும் காமெடி திரைப்படமாக வெளியாகியிருந்தது ஃபங்கி. இயக்குநர் கே.வி.அனுதீப் இயக்கத்தில் கடந்த 2026 பிப்ரவரி 13ம் தேதியில் உலகமெங்கும் வெளியானது. தற்போது இப்படமானது 2026 மார்ச் 13ம் தேதி முதல் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகிறது.

ரிசார்ட் வெப் சீரிஸ் (Resort web Series):

இயக்குநர் பிரவீன் பென்னட் இயக்கத்தில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் தான் ரிசார்ட். இதில் எருமை சாணி யூடியூப் புகழ் விஜய் குமார் ரவிச்சந்திரன் ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக அபேனியா நெத்ருன் நடித்துள்ளார். ஒரு செஃப் வாழ்க்கையை மையமாக கொண்ட இந்த வெப் சீரிஸ் தயாராகியுள்ள நிலையில், இன்று 2026 மார்ச் 13ம் தேதி முதல் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகிறது.

Follow Us
மாணவர்கள் செய்த 'பிராங்க்'.. அமெரிக்காவில் புகழ்பெற்ற ஆசிரியர் உயிரிழப்பு!
மினாப் பள்ளி தாக்குதல்: அமெரிக்கா மீது சந்தேகம்
மும்பையில் எரிவாயு தட்டுப்பாடு..20% உணவகங்கள் மூடல்..
துபாயில் தவிக்கும் இந்தியர்கள்.. தனது 64 அடுக்குமாடி குடியிருப்புகளை கொடுத்து உதவிய இந்தியத் தொழிலதிபர்..