அரவிந்தசாமி நடிப்பில் பார்க்க வேண்டிய பெஸ்ட் படங்களின் லிஸ்ட் இதோ!
Actor Aravind Swamy: தமிழ் சினிமாவில் நாயகன், வில்லன், குணச்சித்திர நடிகர் என்று எந்த கதாப்பாத்திரமாக இருந்தாலும் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகரக்ளை தன்வசம் கட்டிப்போட்டவர் நடிகர் அரவிந்த சாமி. இவர் இன்று தனது 55-வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவரது நடிப்பில் வெளியான சிறந்த தமிழ் படங்களை பார்க்கலாம்.

அரவிந்தசாமி
தளபதி: இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் 1991-ம் ஆண்டு வெளியான் படம் தளபதி. இந்தப் படத்தில் நடிகர்கள் ரஜினிகாந்த் (Actor Rajinikanth) மற்றும் மம்முட்டி இருவரும் முன்னணி நடிகர்களாக நடித்து இருந்த நிலையில் நடிகர் அரவிந்தசாமி ரஜினிகாந்தின் தம்பியாக நடித்து இருந்தார். இந்தப் படத்தின் மூலமாக நடிகர் அரவிந்தசாமி (Actor Aravid Swamy) நடிகராக அறிமுகம் ஆகியுள்ளார். இந்தப் படத்தில் நடிகர் அரவிந்தசாமி மாவட்ட ஆட்சியராக நடித்து இருப்பார். ரஜினிகாந்த் மற்றும் மம்முட்டி என இரண்டு பெரிய ஜாம்பவானுங்களுக்கு எதிராக முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதைக் கொள்ளையடித்தார் நடிகர் அரவிந்தசாமி. இந்தப் படத்தில் நடிகர் அரவிந்தசாமியின் நடிப்பு ரசிகர்களால் பாராட்டைப் பெற்றது. மேலும் அறிமுக நடிகர் என்பது போல அல்லாமல் தனது சிறப்பான நடிப்பை நடிகர் அரவிந்தசாமி இந்தப் படத்தில் வெளிப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ரோஜா: இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் 1992-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் ரோஜா. இந்தப் படத்தில் நடிகர் அரவிந்தசாமி நாயகனாக அறிமுகம் ஆனார். மேலும் இதில் நடிகை மது நாயகியாக நடித்து இருந்தார். ரொமாண்டிக் த்ரில்லர் பாணியில் வெளியான இந்தப் படத்தில் நடிகர் அரவிந்தசாமி உடன் இணைந்து நடிகர்கள் நாசர், ஜனகராஜ், பங்கஜ் குமார், வைஷ்ணவி அரவிந்த் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர்.
மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து இருந்தார். மேலும் இவர் இந்தப் படத்தின் மூலம் இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரகுமான் அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
பம்பாய்: இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் 1995-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் பம்பாய். இந்தப் படத்தில் நடிகர் அரவிந்தசாமி நாயகனாகவும் நடிகை மனிஷா கொய்ராலா நாயகியாகவும் நடித்து இருந்தனர். இந்து முஸ்லிம் காதல் திருமணம் செய்துகொள்வது பற்றியும், இந்த இரு மதத்தினருக்கு இடையே இருக்கும் சலசலப்பு குறித்து இந்தப் படம் வெளியாகி இருந்தது.
இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து இருந்தார். படம் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.