மணிரத்னம் இயக்கத்தில் மிஸ் செய்யக்கூடாத படங்களின் லிஸ்ட் இதோ
Director Maniratnam: தமிழ் சினிமா மட்டும் இன்றி இந்திய சினிமாவில் முன்னணி இயக்குநராக இருப்பவர் மணிரத்னம். இந்த நிலையில் மணிரத்னம் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகின்ற நிலையில் அவரது இயக்கத்தில் வெளியான சிறந்த படங்களின் தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

மணிரத்னம்
மௌன ராகம்: இயக்குநர் மணிரத்னம் (Director Mani Ratnam) இயக்கத்தில் கடந்த 1986-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் மௌன ராகம். இந்தப் படத்தில் நடிகர்கள் மோகன் மற்றும் ரேவதி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர். மேலும் நடிகர் கார்த்திக் இந்தப் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்து இருந்தார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் வி.கே.ராமசாமி, ரா. சங்கரன், பாஸ்கர், காஞ்சனா, வாணி, கலைசெல்வி மற்றும் சோனியா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்து இருந்தார். படத்தில் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது போல படமும் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
நாயகன்: இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 1987-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் நாயகன். இந்தப் படத்தில் நடிகர் கமல் ஹாசன் நாயகனாக நடித்து இருந்தார். சரண்யா பொன்வண்ணன் நாயகியாக நடித்து இருந்தார். அவர் நாயகியாக அறிமுகம் ஆன முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் ஜனகராஜ், கார்த்திகா, விஜயன், எம்.வி. வாசுதேவ ராவ், டெல்லி கணேஷ், நிழல்கள் ரவி, நாசர் மற்றும் தாரா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
தளபதி: இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் 1991-ம் ஆண்டு நவம்பர் மாதம் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் தளபதி. இந்தப் படத்தில் நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் மம்முட்டி இருவரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் அரவிந்த் சுவாமி, ஜெய்சங்கர், அம்ரிஷ் பூரி, ஸ்ரீவித்யா, பானுப்ரியா, ஷோபனா மற்றும் கீதா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
பம்பாய்: இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் 1995-ம் ஆண்டு மார்ச் மாதம் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் பம்பாய். இந்தப் படத்தில் நடிகர் அரவிந்த் சுவாமி நாயகனாகவும் நடிகை மனிஷா கொய்ராலா நாயகியாகவும் நடித்து இருந்தனர். இது இவர் தமிழில் நடிகையாக அறிமுகம் ஆன முதல் படம் ஆகும். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது போல படமும் விமர்சன ரீதியாக ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.