பேமிலி ஆக்ஷன் கதையில்.. லெஜெண்ட் சரவணனின் லீடர் படம் எப்படி இருக்கு? – விமர்சனங்கள் இதோ!

Leader Movie Review: பிரபல தொழிலதிபராகவும், நடிகராகவும் மக்கள் மத்தியில் பிரபலமானவர் லெஜெண்ட் சரவணன். இவரின் நடிப்பில் இன்று (03/042026) வெளியாகியுள்ள படம் லீடர். இந்த படமானது திரையரங்குகளில் வெளியாகிவரும் நிலையில், இப்படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த எக்ஸ் விமர்சனங்கள் குறித்து பார்க்கலாம்.

பேமிலி ஆக்ஷன் கதையில்.. லெஜெண்ட் சரவணனின் லீடர் படம் எப்படி இருக்கு? - விமர்சனங்கள் இதோ!

லீடர் திரைப்பட விமர்சனம்

Updated On: 

03 Apr 2026 15:12 PM

 IST

கோலிவுட் மக்கள் மத்தியில் சிறந்த தொழிலதிபராகவும், தற்போது நடிகராகவும் பிரபலமானவர் லெஜெண்ட் சரவணன் (Legend Saravanan). இவரின் உண்மையான பெயர் அருள் சரவணன் என்பதாகும். இவர் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் தனது கடைகளை திறந்து, பிரம்மாண்டமான தொழிலதிபர்களின் ஒருவராக இருக்கிறார். அந்த விதத்தில் இவர் கடந்த 2022ம் ஆண்டில் வெளியான லெஜெண்ட் (Legend) என்ற படத்தின் மூலம் சினிமாவில் கதாநாயகனாக நுழைந்தார். இந்த படம் இவருக்கு கலவையான விமர்சனங்களை கொடுத்திருந்தது. அந்த விதத்தில் இதையடுத்து இவரின் நடிப்பில் 2வது தயாராகியுள்ள படம்தான் “லீடர்” (Leader). இதை தமிழ் இயக்குநர் துரை செந்திகுமார் (Durai Senthikumar) இயக்க, லெஜெண்ட் சரவணன் தயாரித்துள்ளார்.

இந்த படமானது இன்று 2026 ஏப்ரல் 3ம் தேதி முதல், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் வெளியாகியுள்ளது. அந்த விதத்தில் இப்படத்தின் எக்ஸ் விமர்சனங்கள் குறித்து பார்க்கலாம்.

இதையும் படிங்க: மிடில் கிளாஸில் இருந்து பணக்காரனாக நினைக்கும் கார் ஓட்டுனர்… எப்படி இருக்கு கார்மேனி செல்வம் படம் – விமர்சனம் இதோ!

லெஜெண்ட் சரவணாவின் லீடர் திரைப்படம் எப்படி இருக்கு :

இந்த படத்தில் லெஜெண்ட் சரவணன் சக்திவேல் என்ற வேடத்தில் நடித்துள்ள நிலையில், இவர் கடந்த காலத்தில் பல பகையை கொண்டிருக்கிறார். அந்த விதத்தில், பழைய வன்முறையான வாழ்க்கை தற்போதுவுள்ள அவரின் வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கிறது என்பது இந்த படத்தின் கதையாகும். இப்படம் முழுக்க அதிரடி ஆக்ஷன், பேமிலி எண்டெர்டெயின்மெண்ட் கதையில் வெளியாகியுள்ளது.

லீடர் படத்தின் நடிகர்களின் நடிப்பே எப்படி இருக்கு:

லெஜெண்ட் படத்தை ஒப்பிடும்போது, லீடர் படத்தில் அருள் சரவணன் தனது நடிப்பை அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கிறார். இதில் ஆண்ட்ரியா மிகவும் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் முரண்பாடான இடைவெளி காட்சி அமைந்துள்ளதாம். இதில் நடிகர்கள் ஷாம், பாயல் ராஜ்புட் போன்ற நடிகர்கள் தனது நடிப்பை அருமையாக வெளிப்படுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க: இந்தியாவின் முதல் மோட்டோகிராஸ் படமான பைக்கர் எப்படி இருக்கு? மக்களின் கருத்து இதோ

லீடர் திரைப்படத்தை திரையரங்கு சென்று பார்க்கலாமா:

இந்த லீடர் படமானது முழுக்க ஆக்ஷன், பேமிலி பொழுதுபோக்கு மற்றும் அதிரடி கதையில் அமைந்துள்ளது. லெஜெட் படத்தை ஒப்பிடும்போது, இந்த படத்தில் சரணவனின் நடிப்பு தெளிவாகவே உள்ளது. இப்படத்தின் முதல் பாதி நன்றாக வந்துள்ளதாகவும், இரண்டாவது பாதி கொஞ்சம் மெதுவாக செல்வதுபோல இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இதில் பிளாஸ்பேக் கட்சிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருந்தால், மேலும் படம் நன்றாக இருக்கும். ஆக்ஷன் மற்றும் பேமிலி பொழுதுபோக்கு படத்தை பார்க்க விரும்புப்பார்கள் நிச்சயம் இப்படத்தை ஒருமுறை திரையரங்குகளில் பார்க்கலாம்.

Follow Us
தன்னை கடித்த பாம்பை தைரியமாக பிடித்த முதியவர்
கேர்ள் ஃபிரெண்டுடன் லூட்டி அடிக்கும் குரங்கு - வைரல் வீடியோ
தன் உயிரையும் பொருட்படுத்தாமல் நாயை காப்பாற்றிய பெண்.. இணையத்தில் வைரல்..
தாயின் பக்கெட் லிஸ்டை நிறைவேற்றிய மகன்... இணையத்தில் வைரல்..