ஃபீல் குட் படம் பார்க்க நினைக்கிறீங்களா? அப்போ நெட்ஃபிளிக்ஸில் இந்த கிலோமீட்டர்ஸ் அண்ட் கிலோமீட்டர்ஸ் படத்தை பாருங்க
Kilometers and Kilometers Movie: மலையாள சினிமாவில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றப் படம் கிலோமீட்டர்ஸ் அண்ட் கிலோமீட்டர்ஸ். ஃபீல் குட் ஜானரில் வெளியான இந்தப் படம் தற்போது நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் இந்தப் படத்தை காணத் தவறாதீர்கள்.

கிலோமீட்டர்ஸ் அண்ட் கிலோமீட்டர்ஸ்
கொரோனா காலத்தில் திரையரங்குகளில் படங்களை வெளியிட தடை செய்யப்பட்டு இருந்தது. அப்போது எடுக்கப்பட்ட படங்கள் அனைத்தும் அமேசான். நெட்ஃபிளிக்ஸ், ஹாட்ஸ்டார், ஜீ5 என தொடர்ந்து ஓடிடியில் வெளியிடப்பட்டது. இதன் காரணமாகவே மற்ற மொழிப் படங்களையும் அதிகமாக தமிழ் ரசிகர்கள் பார்க்கத் தொடங்கினர். கொரோனா காலத்திற்கு பிறகு மக்களிடையே ஓடிடியில் பயன்பாடு அதிகரித்துள்ளது. அதன் காரணமாக இந்திய முழுவது எந்த மொழியில் படம் வெளியானாலும் அது பான் இந்திய அளவில் ரசிகர்களிடையே தொடர்ந்து வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் கொரோனா காலத்தில் நேரடியகா ஓடிடியில் வெளியான படம் கிலோமீட்டர்ஸ் அண்ட் கிலோமீட்டர்ஸ். மலையாள மொழியில் உருவான இந்த ஃபீல் குட் படம் கடந்த 20-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2020-ம் ஆண்டு நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியானது.
இந்தப் படத்தில் நடிகர் டொவினோ தாமஸ் நாயகனாக நடித்து இருந்த நிலையில் அவருடன் இணைந்து நடிகர்கள் இந்தியா ஜார்விஸ், ஜோஜு ஜார்ஜ், சித்தார்த்த சிவா, பசில் ஜோசப், மமிதா பைஜு, பார்வதி டி, பாலி வல்சன், ஜியோ பேபி, சினு சித்தார்த் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர். இயக்குநர் ஜோ பேபி இந்தப் படத்தை எழுதி இயக்கி இருந்த நிலையில் தயாரிப்பு நிறுவனமான ஆண்டோ ஜோசப் திரைப்பட நிறுவனம் மற்றும் ராம்ஷி அகமது புரொடக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிப்பாளர்கள் டொவினோ தாமஸ், ராம்ஷி அகமது, ஆண்டோ ஜோசப், சினு சித்தார்த் ஆகியோர் இணைந்து தயாரித்து உள்ளனர்.
கிலோமீட்டர்ஸ் அண்ட் கிலோமீட்டர்ஸ் படத்தின் கதை என்ன?
சிறுவயதிலேயே தந்தையை இழந்த டொவினோ தாமஸிற்கு அவரது தந்தையின் புல்லட் தான் தந்தை மாதிரி நினைத்துக் கொண்டிருக்கிறார். அப்படி இருக்கும் சூழலில் வீட்டின் வருமை காரணமாக அவரது புல்லட் பைக்கை விற்க வேண்டிய சூழல் ஏற்படுகின்றது. அந்த சூழலில் அமெரிக்காவில் இருந்து இந்தியா ஜார்விஸ் இந்தியாவை சுற்றிப் பார்ப்பதற்காக வருகிறார்.
கேரளாவில் ஜோஜூ ஜார்ஜின் ரெசாட்டில் தங்கியிருக்கும் அவர் ரோட் ட்ரிப் செல்ல ஆசைப்படுகிறார். அவரை அழைத்துச் செல்ல டொவினோ தாமஸை ஜோஜூ ஜார்ஜ் கூறுகிறார். அதனைத் தொடர்ந்து தனது தந்தையின் புல்லட்டை எடுத்துக்கொண்டு இந்தியா ஜார்விஸ் கூட்டிக்கொண்டு ரோட் ட்ரிப் செல்கிறார். அதனைத் தொடர்ந்து என்ன நடக்கிறது என்பதே படத்தின் கதை. இந்தப் படம் தற்போது நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.
Also Read… இண்டர்ஸ்டியல் ஹிட் அடித்த லோகா சாப்டர் 1 சந்திரா – எத்தனை கோடிகள் வசூல் தெரியுமா?
நடிகர் டொவினோ தாமஸின் சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவு:
Also Read… வகைவகையான சொகுசு கார்கள்.. துல்கர் – பிரித்விராஜ் வீடுகளில் சுங்கத்துறை சோதனை!