யோகி பாபுவின் கெணத்த காணோம் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்க்குழு – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

Yogi Babus Kenatha Kanom Movie Release Update: தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக வலம் வருபவர் நடிகர் யோகி பாபு. இவர் அவ்வபோது நாயகனாகவும் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் உருவாகி உள்ள கெணத்த காணோம் படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகி உள்ளது.

யோகி பாபுவின் கெணத்த காணோம் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்க்குழு - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

கெணத்த காணோம்

Published: 

07 Mar 2026 14:51 PM

 IST

தமிழ் சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்த நடிகர் யோகி பாபு தொடர்ந்து காமெடி நடிகராக நடிக்கத் தொடங்கினார். தொடர்ந்து பலப் படங்களில் காமெடி நடிகராக நடித்து வந்த யோகி பாபுவின் படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் தொடர்ந்து காமெடி நடிகராக நடித்து வருகிறார் நடிகர் யோகி பாபு. தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி தென்னிந்திய மொழிகளிலும் தொடர்ந்து அதிக அளவில் படங்களில் இதனைத் தொடர்ந்து நடிகர் யோகி பாபு படங்களில் நாயகனாகவும் நடித்து வருகிறார். அதன்படி இவர் காமெடி நடிகராக நடித்தப் படங்கள் ரசிகர்கலிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது போல நாயகனாக நடிக்கும் படங்களும் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

அந்த வகையில் நடிகர் யோகி பாபு தற்போது நாயகனாக நடித்துள்ள படம் தொடர்பான அப்டேட் தொடர்ந்து வெளியாகி வைரலாகி வருகின்றது. அதன்படி தற்போது நடிகர் யோகி பாபு நாயகனாக நடித்துள்ள படம் கெணத்த காணோம். இந்தப் படத்தை இயக்குநர் சுரேஷ் சங்கையா எழுதி இயக்கி உள்ளார். இந்தப் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் படத்தின் வெளியீடு தொடர்பான அப்டேட் வெளியாகி வைரலாகி வருகின்றது.

கெணத்த காணோம் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்க்குழு:

இந்த நிலையில் கெணத்த காணோம் படத்தின் ரிலீஸ் தொடர்பான அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி படம் வருகின்ற 13-ம் தேதி மார்ச் மதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த அப்டேட் தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. இந்த நிலையில் இந்தப் படத்தில் நடிகர் யோகி பாபு உடன் இணைந்து நடிகர்கள் லவ்லின் சந்திரசேகர், ரைச்சல் ரெபேக்கா, ராமகிருஷ்ணன், ஜார்ஜ் மரியம், கவிதா பாரதி, ராஜேந்திரன் என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

Also Read… Ken Karunas: யூத் பட கதை நல்லா இருக்குன்னு சொன்னாங்க.. ஆனா என்னை ஹீரோவா ஏற்றுக்கொள்ளல – கென் கருணாஸ் வேதனை!

கெணத்த காணோம் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… நாக சைத்தன்யா நடிப்பில் வெளியானது வ்ருஷகர்மா கிளிம்ஸ் வீடியோ!

Follow Us
வாட்ஸ்அப், டெலிகிராம் செயல்பாடுகளில் அதிரடி மாற்றம்.. இந்தியாவில் அமலுக்கு வந்தது..
துபாய், தோஹா, பஹ்ரைனில் ஈரான் தொடர் ஏவுகணைத் தாக்குதல்.. அமெரிக்கத் தளங்கள் இலக்கு!
ஐதராபாத் - ஈரான்.. பல நூற்றாண்டுகளைக் கடந்த கலாச்சார பந்தம்..
ஒவ்வொரு லைக்கிற்கும் ஒருமுறை ஸ்கிப்பிங் செய்வேன்... 1.8 மில்லியன் லைக்குகளை பெற்ற சிறுவனுக்கு நேர்ந்த கதி