Ken Karunas: தமிழில் எந்த நடிகையும் என்னுடன் நடிக்க ரெடியாக இல்ல – வெளிப்படையாக பேசிய கென் கருணாஸ்!

Ken Karunas About Tamil Actress: குழந்தை நட்சத்திரமாக நுழைந்து, தற்போது இயக்குநராகவும் கதாநாயகனாகவும் படங்களில் நடித்துவருபவர் கென் கருணாஸ். இவரின் நடிப்பில் யூத் என்ற திரைப்படமானது வெளியீட்டிற்கு தயாராகிவரும் நிலையில், இதில் மலையாள நடிகையுடன் படங்களில் நடிப்பது குறித்து அவர் விளக்கம் கொடுத்துள்ளார்.

Ken Karunas: தமிழில் எந்த நடிகையும் என்னுடன் நடிக்க ரெடியாக இல்ல - வெளிப்படையாக பேசிய கென் கருணாஸ்!

கென் கருணாஸ்

Updated On: 

26 Feb 2026 15:05 PM

 IST

கென் கருணாஸ் (Ken Karunas) தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நுழைந்தார். பின் தனுஷ் (Dhanush) மற்றும் விஜய் சேதுபதி (Vijay Sethupathy) போன்ற நடிகர்களுடன் திரைப்படங்களில் முக்கியமான வேடங்களில் படங்கள் நடித்திருக்கிறார். மேலும் இவர் நடிகர் தனுஷிடம் உதவி இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நுழைந்த இவர், தற்போது இயக்குநராகவும், கதாநாயகனாகவும் சினிமாவில் அறிமுகமாகவுள்ளார். இவரின் இயக்கத்திலும், முன்னணி நடிப்பிலும் மிக பிரம்மாண்டமாக தயாராகியுள்ள திரைப்படம்தான் “யூத்” (Youth). இப்படத்தில் கென் கருணாஸ் கதாநாயகனாக நடிக்க, சிறை பட நடிகை அனிஷிமா அனில்குமார் (Anishima Anilkumar) கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் புதுமுக நடிகைகள் சிலரும் நடித்துள்ளனர். இந்த யூத் படமானது பள்ளிப்பருவ காதலை மையமாக கொண்டு தயாராகியுள்ள நிலையில், வரும் 2026 மார்ச் 19ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் நடைபெற்றுவரும் நிலையில், சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கென் கருணாஸ் பேசியிருந்தார். அதில் யூத் படத்தில் மலையாள நடிகையை நடிக்க வைப்பதற்காக காரணத்தை தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : கோலாகலமாக நடந்த விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா திருமணம்.. நெருங்கிய உறவினர்கள் பங்கேற்பு!

தமிழ் மற்றும் மலையாள நடிகைகள் குறித்து கென் கருணாஸ் பேச்சு:

அந்த நேர்காணலில் பேசிய கென் கருணாஸ், “என்னிடம் நிறையபேர் கேட்டாங்க, நீங்க ஏன் மலையாள நடிகையை தேர்ந்தெடுக்கிறீர்கள்?, தமிழில் நல்ல நடிகைகள் இருக்கிறார்களே என கேட்டிருக்காங்க. ஆனால் தமிழில் எந்த நடிகையும் என்னுடன் நடிப்பதற்கு ரெடியாக இல்லை. நிறையபேரிடம் கேட்டிருக்கிறேன். தற்போது இளம் நடிகையாக தமிழில் நடிக்கும் நடிகைகளிடம் கேட்டிருக்கிறேன். ஆனால் எவரும் என்னுடன் நடிப்பதற்கு முன்வரவில்லை, சிலபேருக்கு கதை பிடிக்கவில்லை. ஆனால் மலையாள நடிகைகள் அப்பை இல்லை, அடுத்த நடிகைகள் இணைந்து நடிக்கும்போது, உங்களின் கதாபாத்திரம் இவ்வளவுதான் என்றால் அதை ஏற்றுக்கொள்கிறார்கள்.

இதையும் படிங்க: மார்ச் மாதம் ஓடிடியில் வெளியாகும் வித் லவ் படம்? வைரலாகும் தகவல்

மேலும் சிறை பட இயக்குநர் சுரேஷ் சாரிடம் ஒருமுறை பேசுவதற்காக சென்றேன், அப்போதுதான்அவர் நீலோத்தி பாட்டை காமிச்சாரு. அப்போதுதான் அனிஷிமாவிடம் பேசி பார்க்கலாமா என நினைத்தேன். அதன் பிறகு அவரிடம் நேரில் கதையை கூறினேன். சொல்லுறேன்னு சொன்னகா. அதுபோல 2 வாரத்தில் நடிக்கிறேன்னுன் ஒத்துக்கிட்டாங்க” என அதில் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் நடிகைகள் குறித்து கென் கருணாஸ் பேசிய வீடியோ பதிவு :

இந்த யூத் திரைப்படத்தின் ரிலீசிற்கு இன்னும் 3 வாரங்களே இருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகளும் சிறப்பாகவே நடைபெற்றுவருகிறது. விரைவில் இப்படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் குறித்த தகவலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us
மகனுக்கு ரூ.4 கோடி மதிப்பிலான காரை பரிசளித்த ஹர்திக் பாண்ட்யா
பூமிக்கு அருகே வரும் மிகப்பெரிய விண்கல்..
முழுவதும் விஷ பாம்புகளால் நிறைந்த தீவு பற்றி தெரியுமா?
நான்காவது நாளாக தொடர் உயர்வை சந்தித்த தங்கம்.. ரூ.15,000-த்தை நெருங்கியது!