Revolver Rita: ஆக்ஷன் நாயகியாக கீர்த்தி சுரேஷ்.. ‘ரிவால்வர் ரீட்டா’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Revolver Rita Movie New Release Date: நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்துவருகிறார். இவரின் நடிப்பில் தொடர்ந்து படங்கள் உருவாகிவரும் நிலையில், இவரின் நடிப்பில் வெளியிட்டிருக்கு காத்திருந்த படம்தான் ரிவால்வர் ரீட்டா. தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.

Revolver Rita: ஆக்ஷன் நாயகியாக கீர்த்தி சுரேஷ்.. ரிவால்வர் ரீட்டா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ரிவால்வர் ரீட்டா

Published: 

09 Nov 2025 20:22 PM

 IST

மலையாள சினிமாவில் மூலம் கதாநாயகியாக நுழைந்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ் (Keerthy Suresh). இயக்குநர் பிரியதர்ஷனின் இயக்கத்தில் வெளியான “கீதாஞ்சலி” (Geethaanjali) என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து சினிமாவில் நாயகியாக அறிமுகமானார். இந்த மலையாள படத்தை அடுத்ததாக தமிழில் இவருக்கு முதல் படமாக அமைந்தது, இது என்ன மாயம் (Ithu Enna maayam). இப்படத்தில் நடிகர் விக்ரம் பிரபுவிற்கு ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து தளபதி விஜய் (Thalapathy Vijay) முதல் தெலுங்கில் மகேஷ் பாபு வரை பல பிரபலங்களுடன் இணைந்து நடித்திருக்கிறார். அந்த வகையில் இவருக்கு கடந்த 2024ம் ஆண்டு டிசம்பரில் திருமணம் முடிந்தது. இதை தொடர்ந்து ஹீரோக்களுடன் படங்ககளில் நடிப்பதை குறைத்துவிட்டு, கதாநாயகிகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் படங்களில் நடிக்க தொடங்கினார். அவ்வாறு இவர் நடித்திருந்த படம்தான் ரிவால்வர் ரீட்டா (Revolver Rita).

இப்படத்தை அறிமுக இயக்குநர் ஜேகே சந்துரு (JK Chandru) இயக்கியிருந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் மற்றும் ராதிகா சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் ஷூட்டிங் எல்லாம் நிறைவடைந்த நிலையில், தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி கீர்த்தி சுரேஷின் இப்படம் வரும் 2025 நவம்பர் 28ம் தேதியில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: ‘துல்கர் சல்மானும் நானும் அப்பா – பிள்ளை மாதிரிதான்’- எமோஷனலாக பேசிய சமுத்திரக்கனி!

கீர்த்தி சுரேஷின் ரிவால்வர் ரீட்டா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு பதிவு :

இந்த் ரிவால்வர் ரீட்டா திரைப்படமானது நகைச்சுவை, எமோஷனல் மற்றும் ஆக்ஷன் நிறைந்த கதைக்களத்தில் தயாராகியுள்ளது. ஜே.கே சந்துரு இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை பேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனமானது தயாரித்துள்ளது. மேலும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் சென் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

இதையும் படிங்க: சார்பாட்டா 2 படத்தின் ஷூட்டிங் எப்போது? இணையத்தில் வைரலாகும் தகவல்

இதில் முக்கிய வேடத்தில் நடிகர்கள் ரெடின் கிங்ஸ்லி, சென்ராயன், சூப்பர் சுப்பராயன், அஜய் கஹோஷ், ஜான் விஜய் மற்றும் கல்யாண் மாஸ்டர் என பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படமானது வரும் 2025 நவம்பர் 28ம் டெஹதியில் வெளியாகும் நிலையில், தொடர்ந்து இப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

கீர்த்தி சுரேஷின் புதிய படம் :

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் படங்களில் அந்த அளவிற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்ற நிலையில், தெலுங்கு மொழி படங்களில் நடித்துவருகிறார். இவர் விஜய் தேவரகொண்டாவின் நடிப்பில் உருவாகும் “ரௌடி ஜனார்தன்” என்ற படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்தை இயக்குனர் ரவி கிரண் கோலா இயக்கிவருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் பூஜைகள் சமீபத்தில் நடைபெற்றிருந்த நிலையில், முற்றிலும் ஆக்ஷ்ன், காதல் மற்றும் வார் தொடர்பான கதைக்களத்தில் இப்படம் உருவாகிவருகிறது. இப்படம் வரும் 2026ம் ஆண்டில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.