Keerthy Suresh: எத்தனை படம் பண்ணாலும் என்னால் அந்த அடையாளத்தை மாற்ற முடியல- கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்!
Keerthy Suresh About Mahanati: தென்னிந்திய சினிமாவில் புகப்பெற்ற நடிகையாக இருந்துவருபவர் கீர்த்தி சுரேஷ். இவரின் நடிப்பில் தமிழில் ரிவால்வர் ரீட்டா என்ற படமானது வெளியீட்டிற்கு காத்திருக்கிறது. இது தொடர்பாக சமீபத்தில் நேர்காணலில் பேசிய இவர், தன்னால் எத்தனை படம் பண்ணாலும் அந்த படத்தின் அடையாளத்தை மாற்றமுடியவில்லை என கூறியுள்ளார்.

கீர்த்தி சுரேஷ்
மலையாள சினிமாவின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ் (Keerthy Suresh). இவர் இந்த சினிமாவின் மூலம் நடிகையாக சினிமாவில் நுழைந்தாலும், இவருக்கு தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் அதிகம் வரவேற்புகள் இருந்துவருகிறது. அந்த வகையில் இவரின் நடிப்பில் விரைவில் வெளியீட்டிற்கு காத்திருக்கும் படம்தான் ரிவால்வர் ரீட்டா (Revolver Rita). இந்த படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்திருக்கும் நிலையில், இயக்குநர் ஜே.கே.சந்துரு (J.K. Chandru) இயக்கியுள்ளார். இவரின் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படமானது முற்றிலும், ஆக்ஷ்ன் காமெடி கதைக்களத்தில் தயாராகியுள்ளது. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷுடன் ராதிகா சரத்குமார் (Rathika Sarathkumar), சுனில் (Sunil), ரெடின் கிங்ஸ்லி மற்றும் சென்ராயன் உட்பட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இப்படம் வரும் 2025 நவம்பர் 28ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் ப்ரோமோஷன் தொடர்பாக நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட கீர்த்தி சுரேஷ், பல்வேறு விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் பேசிய அவர், தான் எத்தனை படத்தில் நடித்திருந்தாலும், மகாநதி (Mahanadi) படத்தில் நான் நடித்த சாவித்ரி என்ற அடையாளத்தை என்னால் மாற்றமுடியவில்லை என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: லோகாவின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து புதுப் படத்தில் கமிட்டான கல்யாணி பிரியதர்ஷன்!
நடிகை கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் போட்டோஷூட் பதிவு:
மகாநதி திரைப்படம் குறித்து மனம் திறந்த நடிகை கீர்த்தி சுரேஷ்:
அந்த நேர்காணலில் தொகுப்பாளர் கீர்த்தி சுரேஷிடம், மகாநதி படத்தில் நீங்கள் நடித்த சாவித்ரி காப்பாத்திரத்தை வைத்து, காந்தா பட நடிகையை ஒப்பிடுகிறார்கள் அது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த கீர்த்தி சுரேஷ், “மகாநதி படத்தில் சாவித்ரி கதாபாத்திரத்தில் நடித்த அடையாளத்தை என்னால் மாற்றமுடியவில்லை. நான் எத்தனை படங்கள் அதன் பிறகு நடித்திருந்தாலும், அந்த அடையாளத்தை என்னால் மாற்றமுடியவில்லை. ஆனால் அந்த மாதிரி இருப்பது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. ஆனாலும் அது எனக்கு இன்னும் ஒரு சவாலான விஷயம்தான். என்றாவது அந்த அடையாளத்தை நான் முறியடிக்க நினைக்கிறேன். மேலும் நான் இப்போதுவரை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
இதையும் படிங்க: என்னுடைய இசை வாழ்க்கையில் சிறந்த பாடல்களில் ஒன்று… பராசக்தி படத்தின் 2-வது பாடல் குறித்து அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்
இப்படிப்பட்ட அடையாளத்தை என்னால் கொடுக்க முடிந்தது என்று. இந்த படம் வெளியாகி ஒரு 6 &7 வருடம் ஆனாலும், இன்னும் அது குறித்து பேசப்படுகிறது. மேலும் நானும் அந்த படத்தை பார்த்தல், அந்த வயதில் நானா இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடித்தது? என எனக்கே ஆச்சர்யமாக இருந்தது. மேலும் இந்த படத்தை அடுத்ததாக எனக்கு நிறைய பயோபிக் படங்களின் ஆஃபர்ஸ் வந்தது. ஆனால் அதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. எனக்கு சாவித்ரி மேம் கதாபத்திரத்திலிருந்து வெளிவரவே நிறைய நாட்கள் எடுத்துக்கொண்டது” என அவர் அதில் தெரிவித்திருந்தார்.