ஒருத்தருக்கா கொடுத்தான்… இல்லை ஊருக்காக கொடுத்தான் – வெளியானது கவினின் மாஸ் படத்தின் ட்ரெய்லர்

MASK Movie Trailer | நடிகர் கவின் நாயகனாக நடித்து அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் மாஸ்க். இந்தப் படத்தில் கவினுடன் இணைந்து பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த நிலையில் மாஸ்க் படத்தின் ட்ரெய்லரைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

ஒருத்தருக்கா கொடுத்தான்... இல்லை ஊருக்காக கொடுத்தான் - வெளியானது கவினின் மாஸ் படத்தின் ட்ரெய்லர்

மாஸ்க்

Published: 

09 Nov 2025 15:09 PM

 IST

தமிழ் சினிமாவில் தற்போது பிசியான நடிகராக வலம் வருகிறார் நடிகர் கவின் (Actor Kavin). இவரது நடிப்பில் இந்த 2025-ம் ஆண்டிலேயே தற்போது 2-வது படம் திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கின்றது. அது மட்டும் இன்றி அடுத்தடுத்து நடிகை நயன்தாரா உடன் இணைந்து ஹாய் என்ற படத்திலும் கவின் 9 ஆகிய படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார் நடிகர் கவின். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து விமர்சன ரீதியாக ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருவது போல வசூல் ரீதியாகவும் சாதனைப் படைத்து வருகின்றது. தொடர்ந்து தனது படங்களுக்கான கதை தேர்வில் கவனமாக இருக்கும் நடிகர் கவின் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் மாஸ்க். டார்க் காமெடி பாணியில் உருவாகி உள்ள இந்தப் படத்தை இயக்குநர் விகர்ணன் அசோக் எழுதி இயக்கி உள்ளார்.

நடிகை ஆண்ட்ரியா நெகட்டிவ் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள இந்தப் படத்தில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் ருஹானி ஷர்மா, சார்லே, பாலா சரவணன், அர்ச்சனா சந்தோக், ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான போதே படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்தது. இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான க்ராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி சார்பாக தயாரிப்பாளர் வெற்றிமாறன் தயாரித்துள்ளார்.

வில்லியாக ஆண்ட்ரியா… எதிர்க்கும் கவின்:

இந்த நிலையில் படம் வருகின்ற 21-ம் தேதி நவம்பர் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் இந்தப் படத்தின் ட்ரெய்லரைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அதில் மிடில் கிளாஸ் மற்றும் ஆளும் வர்க்கம் என இரண்டுக்கும் இடையே உள்ள விசயங்கள் குறித்து பேசியுள்ளது. பணம் ஒரு மனிதனின் வாழ்க்கையை எப்படி மாற்றுகிறது என்பதும் காட்டப்பட்டுள்ளது.

தொடர்ந்து இந்த ட்ரெய்லரைப் பார்க்கும் போது நடிகை ஆண்ட்ரியா வில்லியாக மிரட்டியுள்ளார் என்பது தெரிகிறது. நடிகர் கவின் ஒரு ஆல் ரவுண்டராக ஹீரோயிசம் காமெடி ரொமான்ஸ் என அனைத்தையும் இந்தப் படத்தில் செய்துள்ளது ட்ரெய்லரைப் பார்க்கும் போதே தெரிகிறது. இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read… பேட் கேர்ள்… டைட்டிலை போல படமும் பேட் தான் – ஓடிடியில் வெளியாகியுள்ள படத்தின் விமர்சனம் இதோ

நடிகை ஆண்ட்ரியா வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… பிக்பாஸில் துஷாரை தொடர்ந்து இன்று வெளியேறப்போவது இவரா? வைரலாகும் தகவல்