தனுஷ் – செல்வராகவன் யாருக்கு சேட்டை அதிகம்… கஸ்தூரி ராஜா சொன்ன விசயம்

Kasthuri Raja: தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வந்தவர் கஸ்தூரி ராஜா. இவரது இயக்கத்தில் வெளியான பலப் படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் இவரது மகன்கள் தனுஷ் மற்றும் செல்வராகவன் இருவரும் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தனுஷ் - செல்வராகவன் யாருக்கு சேட்டை அதிகம்... கஸ்தூரி ராஜா சொன்ன விசயம்

தனுஷ், செல்வராகவன், கஸ்தூரி ராஜா

Published: 

07 Oct 2025 22:23 PM

 IST

தமிழ் சினிமாவில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற இயக்குநர்களில் ஒருவர் கஸ்தூரி ராஜா (Kasthuri Raja). கடந்த 1991-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13-ம் தேதி திரையரங்குகளில் வெளியான என் ராசாவின் மனசிலே படத்தை இயக்கி இருந்தார். இந்தப் படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார் இயக்குநர் கஸ்தூரி ராஜா. மேலும் இந்தப் படத்தில் நடிகர் ராஜ்கிரண் நாயகனாக நடித்து இருந்தார். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து இயக்குநர் கஸ்தூரி ராஜா அடுத்தடுத்து ஆத்தா உன் கோயிலிலே, தூது போ செல்லக்கிளியே, சோலையம்மா, மௌன மொழி, தாய் மனசு, நாட்டுப்புற பாட்டு, வாசுகே, எட்டுப்பட்டி ராசா, வீர தாலாட்டு, என் ஆசை ராசாவே, வீரம் விளைந்த மண்ணு, கும்மி பாட்டு, கரிசகத்துப் பூவே என பலப் படங்களை இயக்கி இருந்தார்.

இவரது இயக்கத்தில் வெளியான படங்கள் ரசிகர்களிடையே தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது தமிழ் சினிமாவில் இவரது வாரிசுகளான செல்வராகவன் மற்றும் தனுஷ் இருவரும் முன்னணி நட்சத்திரங்களாக வலம் வருகின்றனர். அதன்படி கோலிவுட் சினிமாவில் இவரது மூத்த மகன் செல்வராகவன் இயக்குநராகவும் இளைய மகன் தனுஷ் நடிகராகவும் ஒரே நேரத்தில் அறிமுகம் ஆனர். தொடர்ந்து இவர்கள் இருவரும் அவர் அவர் துறையில் சிறந்து விளங்கி தமிழ் சினிமாவிற்கே பெருமை சேர்த்து வருகின்றனர். இந்த நிலையில் முன்னதாக பேட்டி ஒன்றில் தனது மகன்கள் குறித்து கஸ்தூரி ராஜா பேசியது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… இட்லி கடை படம் உங்களுக்கு புடிச்சு இருக்கா? அப்போ மலையாளத்தில் வெளியான உஸ்தாத் ஹோட்டல் படத்தை மிஸ் பண்ணாமல் பாருங்க!

தனுஷ் – செல்வராகவன் யாருக்கு சேட்டை அதிகம்:

அதன்படி பேட்டியில் கலந்துகொண்ட இயக்குநர் கஸ்தூரி ராஜாவிடம் உங்கள் குழந்தைகளில் யார் அதிகம் சேட்டை செய்து உங்களிடம் அதிகமாக அடி வாங்கியது என்று கேள்வி கேட்டனர். அதற்கு சற்றும் யோசிக்காமல் கஸ்தூரி ராஜா சிரித்துக்கொண்டே செல்வராகவன் தான் என்னிடம் அதிகமாக அடி வாங்கியது. அவர்தான் நிறைய சேட்டைகளை செய்வார். ஊம குசும்பு என்று சொல்வார்கள் அல்லவா அப்படி நிறைய குறும்புகளை செய்து என்னிடம் அடி வாங்குவார் என்று கஸ்தூரி ராஜா அந்தப் பேட்டியில் தெரிவித்து இருந்தார்.

Also Read… கார் பறிமுதல் வழக்கில் துல்கர் சல்மானின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்

பெங்களூரு ஏ.டி.எம் கொள்ளை சம்பவம்.. வெளியான திடுக் தகவல்..
கோல்ஃப் உலகையே ஆச்சரியப்பட வைத்த பெண்ணின் வெற்றி - அப்படி என்ன நடந்தது?
பெண்கள் பெண்களை காக்கும் அதிசய சக்தி பற்றி பேசிக்கொண்டிருக்கிறார் ரஷ்மிகா மந்தனா!
துபாய் ஏர்ஷோவில் கீழே விழுந்து நொறுங்கிய தேஜஸ் விமானம்.. காரணத்தை சொன்ன நிபுணர்கள்..