கருப்பு படத்தின் 2-வது சிங்கிள் ரிலீஸ் எப்போது? வைரலாகும் தகவல்
Karuppu Movie Update: தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல மாதங்களாக ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் கருப்பு. இந்தப் படம் எப்போது வெளியாகும் என்று தேதி இன்னும் வெளியிடாமல் உள்ள நிலையில் படத்தில் இருந்து இரண்டாவது சிங்கிள் மற்றும் போஸ்டர் ஆகியவை எப்போது வெளியாகும் என்று சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளது.

கருப்பு
நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவரது நடிப்பில் இந்த 2025-ம் ஆண்டில் வெளியான படம் ரெட்ரோ. இந்தப் படத்தினை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் எழுதி இயக்கி இருந்த நிலையில் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருந்த நிலையில் படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது போல பாடல்களும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா தனது 45-வது படத்திற்காக இயக்குநரும் நடிகருமான ஆர்.ஜே.பாலாஜி உடன் கூட்டணி வைத்தார். இந்தப் படத்திற்கு தற்போது கருப்பு என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு முன்னதாகவே முடிவடைந்த நிலையில் படம் எப்போது திரையரங்குகளில் வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். படம் முன்னதாக தீபாவளி பண்டிகைக்கே வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடிவடையாத காரணத்தால் படத்தின் வெளியீடு தொடர்ந்து தள்ளிப்போய்கொண்டே இருக்கின்றது.
கருப்பு படத்தின் 2-வது சிங்கிள் ரிலீஸ் எப்போது?
இந்த நிலையில் தீபாவளிக்கு படம் வெளியாகவில்லை என்றாலும் தொடர்ந்து படத்தில் இருந்து முதல் சிங்கிள் வெளியானது. அதனப்டி காட் மோட் என்ற பாடல் படத்தில் இருந்து வெளியானது. இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையில் வெளியான இந்தப் பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப் படத்தில் இருந்து இரண்டாவது சிங்கிள் வருகின்ற 2026-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என்று தெரிவிக்கப்படுகின்றது. மேலும் இந்தப் படத்தில் இருந்து புதிய போஸ்டரை நாளை முத்தாண்டு முன்னிட்டு வெளியிட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:
#Karuppu 🎇
– New poster for the New Year ✨️, Second single expected to release on Pongal 2026 💥
– We can expect the release date announcement in the new poster 🧨🔥#Suriya | #Suriya46 pic.twitter.com/sDK3rNEQo8— Movie Tamil (@_MovieTamil) December 30, 2025
Also Read… GV.Prakash: அஜித் குமாரின் ரேஸிங் ஆவணப்படம்.. சிறப்பான அப்டேட்டை கொடுத்த ஜி.வி.பிரகாஷ் குமார்!