Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Karthi : விஷாலின் தைரியத்தைப் பார்த்து எனக்குப் பொறாமை.. ஓபனாக பேசிய கார்த்தி!

Karthi About Vishal : நடிகர் கார்த்தியின் படங்கள் என்றாலே நிச்சயமாக எமோஷன் மற்றும் நகைச்சுவை காட்சிகள் நிச்சயமாக இருக்கும். அந்த விதத்தில் இவரின் நடிப்பில் சூப்பர் ஹிட் படங்கள் பல வெளியாகியிருக்கிறது. இந்நிலையில், நடிகர் கார்த்தி முன்னதாக பேசிய நிகழ்ச்சி ஒன்றில் விஷாலின் தைரியத்தை கண்டு பொறாமைப்படுவதாகக் கூறியுள்ளார். அது பற்றிப் பார்க்கலாம்.

Karthi : விஷாலின் தைரியத்தைப் பார்த்து எனக்குப் பொறாமை.. ஓபனாக பேசிய கார்த்தி!
விஷால் மற்றும் கார்த்தி
Barath Murugan
Barath Murugan | Published: 17 Jun 2025 09:29 AM

தமிழ் சினிமாவில் 70ஸ் மற்றும் 80ஸ் சினிமாவில் கலக்கிவந்தவர் நடிகர் சிவகுமார் (Shivakumar). இவரின் இரு மகன்களும் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக இருந்து வருகின்றனர். அதில் அவரின் இரண்டாவது மகன்தான் நடிகர் கார்த்தி (Karthi). இவர் தனது அண்ணன் சூர்யாவைப்  (Suriya)போல சினிமாவில் படங்களில் முன்னணி நாயகனாக நடித்து வருகிறார். மேலும் நடிகர் கார்த்தியின் படங்கள் என்றாலே நிச்சயமாக எமோஷன், நகைச்சுவை மற்றும் காதல் என அனைத்தும் கலந்த கலவையாகத் திரைப்படம் இருக்கும். அந்த விதத்தில் இவரின் நடிப்பில் இறுதியாக வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் மெய்யழகன் (Meiyazhakgan). இந்த படமானது கடந்த 2024ம் ஆண்டு இறுதியில் வெளியானது. இந்த படத்தை 96 பட புகழ் இயக்குநர் பிரேம்குமார் (Prem Kumar) இயக்கியிருந்தார் . கார்த்தியின் இந்த படத்தில் அவருடன் முக்கிய வேடத்தில் நடிகர்கள் அரவிந்த் சுவாமி, ஸ்ரீதிவ்யா மற்றும் ராஜ்கிரண் எனப் பல பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர்.

இந்த படமானது திரையரங்குகளில் வசூல் ரீதியாக பெரும் வரவேற்பைப் பெறாவிட்டாலும், மக்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களையே பெற்றது. இந்த படத்தைத் தொடர்ந்து கார்த்தியின் நடிப்பில் அடுத்தடுத்து பல படங்கள் உருவாகிவருகிறது. இந்நிலையில், முன்னதாக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் கார்த்தி நடிகர் விஷாலின் (Vishal)  தைரியத்தைப் பற்றிப் பொறாமைப்படுவதாகப் பேசியிருந்தார். அதைப் பற்றித் தெளிவாகப் பார்க்கலாம்.

கார்த்தியின் போட்டோஷூட்:

 

View this post on Instagram

 

A post shared by Karthi Sivakumar (@karthi_offl)

 

விஷாலை பற்றி கார்த்தி பேசிய விஷயம் :

அந்த நிகழ்ச்சியில் நடிகர் கார்த்தி, விஷால் என்னைப் பற்றிப் பல மேடைகளில் பேசியிருக்கிறார், ஆனால் நான் அவரை பற்றி பேசுவதற்குப் பெரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதை நானா இப்போதே கூறுகிறேன். மேலும் நான் விஷாலைப் பற்றி மிகவும் பொறாமைப்படும் விஷயம் என்னவென்றால் அது தைரியம். என்னவென்றால் அவரின் குடும்ப பிரச்சனையில் எதாவது என்றால் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று முன்னாடி வந்து அவர்தான் நிற்பார். இவருக்கு இருக்கும் பிரச்சனைக்கு எவ்வாறு இப்படிச் சிரித்துக்கொண்டு சுற்றித் திரிகிறார் என்று எனக்குத் தெரியவில்லை. என்றார் கார்த்தி கூறினார்.

உடனே உடன் இருந்த ஆர்யா, “இந்த பிரச்சனைகளுக்கு எல்லாம் காரணமே விஷால்தான்” என்று நகைச்சுவையாகப் பேசியிருந்தார். மீண்டும் பேசத் தொடங்கிய கார்த்தி, “அவர்கள் எல்லாம் பல நண்பர்களை வைத்துக்கொண்டு கஷ்டப்படுகிறார்கள், நான் இந்த ஒரு நண்பனை வைத்த படுகிற கஷ்டம் அதிகம். எப்போது எங்கிருந்து விஷாலுக்குப் பிரச்சனைகள் வரும் என்று யாருக்கும் தெரியாது. திடீரென செய்தியில் பார்த்தல் விஷால் இந்த பிரச்சனையில் சிக்கிவிட்டால் என்று தெரியும். அப்படி விஷால் பல பிரச்சனைகளை எப்போதும் வைத்துக்கொண்டே சிரித்த முகத்தோடு இருப்பார் என்று நடிகர் கார்த்தி பேசியிருந்தார்.