Karthi: ஷூட்டிங் ஓவர்.. நியூ ரிலீஸ் தேதியை அறிவித்த கார்த்தியின் ‘வா வாத்தியார்’ படக்குழு!
Vaa Vaathiyaar New Release Date: தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான ஒருவராக இருந்துவருபவர் கார்த்தி. இவரின் நடிப்பில் இந்த 2025ம் ஆண்டில் வெளியாகி காத்திருந்த படம்தான் வா வாத்தியார். இப்படம் டிசம்பர் 5ம் தேதியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது புது ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

கார்த்தியின் வா வாத்தியார்
கோலிவுட் சினிமாவில் சிறந்த இயக்குநர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் நலன் குமாரசாமி (Nalan Kumaraswamy). இவரின் இயக்கத்தில் சூது கவ்வும், காதலும் கடந்து போகும் மற்றும் குட்டி ஸ்டோரி போன்ற படங்கள் வெளியாகியிருக்கிறது. அந்த வகையில் இவரின் இயக்கத்தில் 5வது படமாக உருவாகியுள்ளதுதான் வா வாத்தியார் (Vaa vaaththiyaar). இந்த திரைப்படத்தில் நடிகர் கார்த்தி (Karthi) கதாநாயகனாக நடிக்க, இவருக்கு ஜோடியாக இளம் நடிகை க்ரித்தி ஷெட்டி (Krithi Shetty) நடித்துள்ளார். இவரின் தமிழ் அறிமுக படமாகவும் இப்படம்தான் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த 2023ம் ஆண்டிலே தொடங்கப்பட்ட நிலையில், கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு பின் வெளியீட்டிற்கு தயாராகியுள்ளது. அதன்படி இந்த படம் 2025 டிசம்பர் 5ம் தேதியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இப்படத்தின் சில காட்சிகள் மிஸ் ஆகியுள்ளது. இந்நிலையில் அதன் ஷூட்டிங் கடந்த சில நாட்களாக நடந்த நிலையில், ரிலீஸ் தேதி தள்ளிப்போகும் என சினிமா வட்டாரங்கள் தெரிவித்தன.
அதைப்போலவே தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிபோகியுள்ளது. இந்த படமானது வரும் 2025ம் டிசம்பர் 12ம் தேதியில் வெளியாகும் என படக்குழு புதிய ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது. இது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: ஜெயிலர் 2 படத்தில் நடிப்பதை உறுதி செய்த விநாயகன்… வைரலாகும் வீடியோ
வா வாத்தியார் படத்தின் புது ரிலீஸ் தேதி குறித்து படக்குழு வெளியிட்ட பதிவு :
#VaaVaathiyaar Worldwide Release on December 12 🎬💥#VaaVaathiyaarOnDec12 #VaathiyaarVaraar
A #NalanKumarasamy Entertainer
A @Music_Santhosh Musical @Karthi_Offl @VaaVaathiyaar #StudioGreen @gnanavelraja007 @IamKrithiShetty #Rajkiran #Sathyaraj #Anandaraj @GMSundar_… pic.twitter.com/cg9yzHnR9z— Studio Green (@StudioGreen2) December 3, 2025
வா வாத்தியார் படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது :
இந்த வா வாத்தியார் படத்தில் கார்த்தி, க்ரித்தி ஷெட்டியுடன் நடிகர்கள் சத்யராஜ், ராஜ்கிரண், ஆனந்த ராஜ், வடிவுக்கரசி, கருணாகரன் மற்றும் நிவாஸ் ஆதித்தன் உட்பட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படமானது ஒரு எம்ஜிஆர் ரசிகனின் மகன் குறித்த வித்தியாசமான கதைக்களத்தில் தயாராகியுள்ளது. இதில் கார்த்திக்கு தந்தையாக ராஜ்கிரண் நடித்துள்ளார்.
இதையும் படிங்க: காந்தாரா படம் தொடர்பான சர்ச்சை… மன்னிப்பு கோரிய நடிகர் ரன்வீர் சிங்
இந்த படத்தில் மெயின் வில்லனாக சத்யராஜ் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள நிலையில், இப்படத்திலிருந்து இதுவரை 3 பாடல்கள் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் 2025 டிசம்பர் 12ம் தேதியில் வெளியாகின்ற நிலையில், படத்தின் ட்ரெய்லர் வரும் 2025 டிசம்பர் 7ம் தேதி அல்லது 8ம் தேதியில் வெளியாகும் என வட்டாரங்கள் தெரிவிக்கிறது.