தக் லைஃப் படத்திற்கு பாதுகாப்பு அளிக்கப்படும் – உச்ச நீதிமன்றம் அளித்த நோட்டீசிற்கு கர்நாடக அரசு பதில்

Thug Life Movie: நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் ஈர்த்தப் படம் தக் லைஃப். கன்னட மொழி சர்ச்சைக் காரணமாக இந்தப் படத்தை கர்நாடகாவில் குறிப்பிட்ட நேரத்தில் வெளியிடவில்லை. இந்த நிலையில் வழக்கு உச்ச நீதிமனறத்தில் நடைப்பெற்று வந்த நிலையில் கர்நாடக அரசு பதில் அளித்துள்ளது.

தக் லைஃப் படத்திற்கு பாதுகாப்பு அளிக்கப்படும் - உச்ச நீதிமன்றம் அளித்த நோட்டீசிற்கு கர்நாடக அரசு பதில்

தக் லைஃப்

Published: 

19 Jun 2025 14:11 PM

 IST

கர்நாடகாவில் கமல் ஹாசன் (Actor Kamal Haasan) நடிப்பில் உருவான தக் லைஃப் படத்தை வெளியிட பாதுகாப்பு கோரி உச்ச நீதிமன்றத்தில் படக்குழு வழக்கு தொடர்ந்து இருந்தது. இந்த வழக்கு மீதான விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம் கரநாடக அரசிற்கு பதிலளிக்குமாறு முன்னதாக நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது. இந்த நிலையில் இன்று ஜூன் மாதம் 19-ம் தேதி 2025-ம் ஆண்டு தக் லைஃப் படத்தின் மீதான விசாரணை மீண்டும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கர்நாடக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்ததாவது தக் லைஃப் படம் கர்நாடகாவில் வெளியிடுவதாக இருந்தால் படத்திற்கும் திரையரங்கிற்கும் உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று தெரிவித்து இருந்தனர்.

மேலும், கன்னடத் திரைப்படத் துறையின் உச்ச அமைப்பான கர்நாடக திரைப்பட வர்த்தக சபை (KFCC), கன்னட மொழி குறித்த சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்கு மன்னிப்பு கேட்கக் கோரி கமல்ஹாசனுக்கு கடிதம் எழுதியுள்ளதாக அரசுகுறிப்பிட்டது. அந்தக் கடிதத்தில், கன்னட மொழி தமிழிலிருந்து தோன்றியது என்று கமல்ஹாசன் கூறியது குறித்து அவர்கள் கவலை தெரிவித்திருந்தது, இது பல்வேறு கன்னட மொழி ஆதரவு குழுக்களின் எதிர்ப்புகளுக்கு வழிவகுத்தது என்றும் தெரிவித்து இருந்தனர்.

கர்நாடக அரசிற்கு உச்ச நீதிமன்றம் எழுப்பிய கேள்விகள்:

இந்த நிலையில் இன்று உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த்போது எங்கே எதை நோக்கி சென்றுக்கொண்டிருக்கிறோம் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர். மேலும், ஒரு நகைச்சுவை நடிகர் எதாவாது நகைச்சுவையாக கூறினால் கூட மனித உணர்வுகளை புண்படுத்துகின்றன என்று கூறி சில நாச வேலைகள் நடைபெறுகின்றது என்றும் நீதிபதிகள் தெரிவித்து உள்ளனர்.

தொடர்ந்து பேசிய நீதிபதிகள், இதே போல நாளை ஒரு நாடகத்திற்கு எதிராகவோ ஒரு கவிதைக்கு எதிராகவோ சில கும்பல்கள் மிரட்டல் விடுப்பார்கள். இதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. மேலும், கமல் ஹாசனின் நடிப்பில் உருவாகியுள்ள தக் லைஃப் படத்தை கர்நாடகாவில் வெளியிட அரசு முழு பாதுகாப்பை அளிக்க வேண்டும். ஏதேனும் வன்முறை ஏற்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

கன்னடர்களிடையே சர்ச்சையை கிளப்பிய கமல் ஹாசனின் பேச்சு:

தக் லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது நடிகர் கமல் ஹாசன் கன்னட மொழி தமிழில் இருந்து பிரிந்து சென்றது என்று தெரிவித்தார். இது கன்னட மொழியையும் கன்னடர்களையும் அவமதிக்கும் விதமாக உள்ளது என்று கர்நாடகாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

தக் லைஃப் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு: