ஹாய் படத்திலிருந்து வெளியானது கன்னக்குழியா பாடல் வீடியோ

Kannakuzhiya - Lyric Video | தமிழ் சினிமாவில் நடிகர்கள் கவின் மற்றும் நயன்தாரா நடிப்பில் உருவாகி உள்ள படம் ஹாய். இந்தப் படத்தில் இருந்து இன்று முதல் சிங்கிள் வீடியோவைப் படக்குழு வெளியிட்டுள்ளது. அது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

ஹாய் படத்திலிருந்து வெளியானது கன்னக்குழியா பாடல் வீடியோ

ஹாய்

Published: 

21 Apr 2026 17:38 PM

 IST

தமிழ் சினிமாவில் தொடர்ந்து படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் முன்னணி நடிகர்களின் படங்கள் மட்டும் இன்றி இளைஞர்களின் படங்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நாயகனாக வலம் வருகிறார் நடிகர் கவின். இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளாக வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் கடந்த 2025-ம் ஆண்டில் மட்டும் நடிகர் கவின் நடிப்பில் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து இரண்டு படங்கள் திரையரங்குகளில் வெளியானது. அதன்படி கிஸ் மற்றும் மாஸ்க் என திரையரங்குகளில் வெளியான இரண்டு படங்களும் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்தப் படங்களைத் தொடர்ந்து நடிகர் கவின் தற்போது நடிகை நயன்தாரா உடன் இணைந்து ஹாய் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை இயக்குநர் விஷ்ணு எடவன் எழுதி இயக்கி உள்ளார். இந்தப் படஹ்ட்தில் நடிகர்கள் கவின் – நயன்தாரா உடன் இணைந்து நடிகர்கள் பாக்யராஜ், ராதிகா சரத்குமார், பிரபு, விடிவி கணேஷ், சத்யன், அம்ருதா ஸ்ரீனிவாசன், ஆதித்ய கதிர், குரேஷி, ஃபெப்சி விஜயன், காவியா அறிவுமணி, மிர்ச்சி கெமி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர்.

ஹாய் படத்திலிருந்து வெளியானது கன்னக்குழியா பாடல் வீடியோ:

தொடர்ந்து ஹாய் படத்தில் இருந்து அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. அந்த வகையில் தற்போது இந்த ஹாய் படத்தில் இருந்து கன்னக்குழியா என்ற பாடலைப் படக்குழு வெளியாகி உள்ளது. இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜென் மார்ட்டின் இசையமைத்து உள்ள இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் அந்தப் பாடலைப் பாடியுள்ளார். மேலும் இந்தப் பாடலை இயக்குநர் விஷ்ணு எடவனே எழுதி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read… சிவகார்த்திகேயன் இல்லை… வெங்கட் பிரபு அடுத்ததாக இயக்க உள்ளது இவரையா? வைரலாகும் தகவல்

ஹாய் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… சீரியல் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. விஜய் டிவியில் புதிதாக வரும் தாய் மாமன் சீரியல்! வெளியாகும் நாள், நேரம் தெரியுமா?

Follow Us
எங்கள் விமானம் தாக்கப்படும் அபாயம் - பாகிஸ்தான் சென்ற ஈரான் குழுவினர் அச்சம்
போரைப் போல மோதிக்கொள்ளும் சிம்பான்சிகள் - காரணம் என்ன?
UPI-ல் ரூ.10,000-க்கு மேல் பணம் அனுப்ப ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டுமா?.. ஆர்பிஐ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
சீனா தயாரித்த செயற்கைக்கோள் மூலம் கண்காணிப்பு? எழுந்த புதிய பாதுகாப்பு கவலை..